Friday, May 10, 2013

Fwd: தமிழின் தாயகம் தெற்கு ஐரோப்பா




ப்ரிட்டனின் ரீடிங் பல்கலைக்ழாகத்தில் நிகழ்த்தபட்ட ஆய்வு ஒன்று தற்கால ஐரோப்பிய மொழிகளில் கற்கால மனிதன் பயன்படுத்திய சொற்கள் இன்னமும் பயன்பட்டில் இருப்பதை கண்டுபிடித்து உள்ளது.

http://www.pnas.org/content/early/2013/05/01/1218726110.full.pdf

ஆதிமனிதன் பயன்படுத்தி தற்கால ஆங்கிலத்தில் இன்னமும் பயன்பாட்டில் இருக்கும் சொற்களாக அந்த ஆய்வு கூறும் 23 சொற்கள்

Thou

Mother

Fire

Man

இப்படி 23 சொற்களை மொழிகுடும்பங்கள் தாண்டி ஒரே மாதிரியாக இருப்பதை கண்டுபிடித்த விஞ்ஞானிகள் இவை அனைத்தும் 15,000 ஆண்டுகளுக்கு முந்தி தெற்கு ஐரோப்பாவில் இருந்த ஒரு மொழியில் இருந்த வார்த்தைகளின் இன்றைய திரிபுகள் எனவும் அன்று அந்த மொழியில் பயன்படுத்தபட்ட இந்த 23 வார்த்தைகள் இன்றும்

இந்தோ யுரோப்பியன் (ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், சமஸ்கிருதம், லத்தீன், பெர்சியன்)

அல்டாயிக் (துருக்கிய மொழி, மங்கோலிய மொழி)

சைபிரிய மொழிக்குடும்பம்

திராவிட மொழிக்குடும்பம்

யுரால் மொழிக்குடும்பம் (ஹங்கேரி)

ஆகிய மொழிகளில் உள்ளதாக கூறுகின்றனர்

ஆக இந்த மொழிகள் அனைத்தும் 15,000 ஆண்டுகளுக்கு முன்பு தெற்கு ஐரோப்பாவில் இருந்த கற்காலமனிதர்களின் மொழியின் இன்றைய வடிவங்கள் என இந்த ஆய்வு கூறுகிறது.


அந்த 23 சொற்கள் ஆங்கிலத்தில் (திராவிட மொழி குடும்பங்களிலும் இவை உள்ளனவாம்)




கட்டுரையின் இரன்டாம் பக்கம் உள்ல மேப்பில் சுவாரசியமான தகவல் ஒன்று உள்ளது.

திராவிடமொழிகுடும்பங்கள் நீலநிறத்தில் மேப்பில் காட்டபடுகின்றன. அதில் வடமேற்கு ஆப்கானீஸ்தான், இரான் பகுதியில் உள்ள மொழி ஒன்று திராவிட குடும்பமொழியாக காட்டபடுகிறது. அது என்ன மொழி என தெரியவில்லை.



ஆக தமிழ் கற்காலமக்கள் பேசிய மொழிதான் என்பது உறுதியாகிறது. ஆனால் அதன் தாயகம் தெற்கு ஐரோப்பா. நாமும் மங்கோலியர்களும், சைபிரியர்களும், ஆங்கிலேயரும், துருக்கியரும் ஒரு தாய் மக்கள்!!!

1 comment:

KARTHIK said...

அப்புறம் நாம் மட்டும் ஏன் பிளாக்.....