Sunday, April 28, 2013

Fwd: அம்மா மெஸ்


ஒரு ரூபாய் இட்லி, ஐந்து ரூபாய்க்கு சாம்பார் சாதம் என அம்மா மெஸ் பிரபலம் ஆகி வருகிறது. மேலும் 800 உணவகங்கள் சென்னையிலேயே துவக்கபட உள்ளதாக தெரிகிறது. அடுத்து வரும் திமுக ஆட்சியில் இது என்ன ஆகும் என்பது கேள்விக்குறியாக இருப்பினும் இப்போதைக்கு இந்த உணவகத்தால் மக்கள் மத்தியில் ஆட்சிக்கு நல்ல பெயர் ஏற்பட்டிருப்பது உண்மை. ஆனால் நீண்டகால நோக்கில் இந்த உணவகங்கள் சஸ்டெய்னபிள் அல்ல. காரணம் சந்தை விலைக்கு குறைவாக உனவை விற்பது அரசின் மானியம் தொடரும்வரை மட்டுமே நடக்ககூடிய சமாச்சாரம்.

இப்போதைக்கு இந்த உணவகங்கள் தனியார் உணவகங்களுக்கு பெரும் அடியாக இருக்கும். அந்த விதத்தில் நஷ்டத்துக்கு உணவை விற்கும் அரசுடன் வரியை கட்டி, லாபம் சம்பாதிக்கும் நோக்கில் நடத்தபடும் சாலையோர கடைகள், இட்லிகடைகள், மெஸ்கள் ஆகியவற்றால் போட்டியிட இயலாது. சென்னையில் ஆயிரம் கிளைகள் (இப்போது 200, கூடுதலாக 800), கிளை ஒன்றுக்கு ஆயிரம் பேர் என்றால் நாள் ஒன்றுக்கு 10 லட்சம் வாடிக்கையாளர்கள் வரத்து சிறு உணவக உரிமையாளர்களுக்கு இழப்பு ஆகும். மிகபெரும் உணவகங்களுக்கு இதனால் எந்த சிக்கலும் இல்லை. ஆனால் ஏழை,மிடில்க்ளாஸை நம்பி இருக்கும் உணவகங்களுக்கு இதனால் வரும்காலத்தில் மிகபெரும் பாதிப்பு ஏற்பட்டும்.

உணவகங்கள் நஷ்டபட்டால் தான் என்ன, வாடிக்கையாளர்களுக்கு விலை மலிவாக உணவு கிடைத்தால் போதாதா என கேட்கலாம்.  ஆனால் சுயமாக உழைத்து சம்பாதிக்கும் உணவகங்கள் அவற்றில் பணிபுரியும் ஆயிரகணக்கான ஊழியர்கள் அவர்கள் கட்டும் வரி ஆகியவை அழிவது அரசுக்கு மட்டுமல்ல சமூகத்துக்கும் இழப்புதான்.

நீன்டகால நோக்கில் நஷ்டத்துக்கு அரசே ஆனாலும் விற்பனை செய்ய முடியாது. அந்த காசை வரி மூலம் திரட்டி தான் தீரவேன்டும். அல்லது கல்வி, மின்சாரம் முதலியவற்றுக்கு ஒதுக்கும் பணத்தில் இருந்து எடுத்து செலவு செய்யவேன்டும். இப்போது 12 மணிநேர மின்வெட்டு என்பதற்கு நாம் பழகிவிட்டோம். இப்போதைய நிலையில் ஆட்சிக்கு வர 24 மணிநேர மின்சாரம் கொடுக்கணும், பள்ளிகூடம் ஒழுங்கா செயல்படணும் என்பது எல்லாம் முக்கியம் இல்லை என ஆகிவிட்டது. யார் இம்மாதிரி இலவசங்களையும், கவர்ச்சி திட்டங்களையும் செயல்படுத்துகிறாரோ அவருக்கே மக்கள் ஒட்டு என்பதுதான் நிலை.

மேலும் அம்மா மெஸ் உணவுகள் மக்கள் உடல்நலனுக்கு எந்த விதத்தில் நன்மையளிப்பவை என்பது கேள்விக்குறி. மதியம் உனவகத்தில் புல் மீல்ஸ் 30 ரூபாய் என்றாலும் அதில் காய்கறி, பொறியல் என கொஞ்சமாவது இருக்கும். 30 ரூபாய் மீல்ஸ் என்பதால் மக்கள் வீட்டில் இருந்து மதிய உனவை டிபன்பாக்ஸில் கொண்டுவந்து சாப்பிடுவார்கள். ஆனால் அம்மா மெஸ் வந்தபின் பலரும் தினம் இருவேளையும் இங்கேயே சாப்பிடுவதை வழக்கமாக்கி கொண்டார்கள். அம்மா மெஸ் இட்லி, அரிசி, சாம்பார் ஆகியவை பசியை ஆற்றினாலும் நீண்டகாலநோக்கில் மக்கள் உடல்நலனுக்கு நல்லது அல்ல.

அரசு மருத்துவமனை, கலெக்டர் ஆபிஸ் மாதிரி ஏழைபாழைகள் புழங்கும் இடங்களில் மட்டும் இம்மாதிரி மெஸ்கள் அமைக்காப்ட்டு உணவகம் செல்ல முடியாத ஏழைகளுக்கு மட்டும் உணவளித்தால் அது நல்ல பொதுசேவையாக இருக்கும்.

2 comments:

Unknown said...

Very Biased Article..

Unknown said...

Check this

http://tamil.oneindia.in/news/2013/06/06/tamilnadu-canteens-eat-into-sales-at-eateries-176736.html