சாகபக்ஷிணி உணவின் முக்கிய பிரச்சனை
சாகபக்ஷிணி உணவின் முக்கிய பிரச்சனை என்னவெனில் மனிதன் சாகபக்ஷிணி அல்ல என்பதுதான். இயற்கையை மீறுகையில் அனர்த்தமே விளையும். தானியம் என்பது அடிப்படையில் புல். அதில் நாம் உண்பது விதை. விதைகளை நாம் உண்ணகூடாது என்பதற்காக தாவரங்கள் விதைகளில் விஷத்தை விதைக்கின்றன. காரணம் விதைகளை உண்டால் அதில் இருந்து செடி முளைக்காது என்பதற்காக. தாவரங்கள் தம் இலைகளை திண்ண பிராணிகளை அனுமதிக்கும், தண்டுகளை தின்ன அனுமதிக்கும். ஆனால் விதைகளை தின்ன இயற்கை அனுமதிக்காது. விதைகளை உண்ணும் மிருகங்கள் அவற்றை முழுமையாக கழிவில் வெளியேற்றி அந்த கழிவில் இருக்கும் நைட்ரஜன் உரமாகி அந்த விதை வளர்வதை காணலாம்.
ஆக தன் விதைகள் உண்னபட கூடாது என்பதற்காக தானியங்கள் பல்வேறு பாதுகாப்பு மெக்கானிசங்களை அமைக்கின்றன. அதில் ஒன்று தானியத்தை மென்று தின்பது புல்மேயும் மிருகங்களுக்கு கடினமாக இருக்கவேண்டும் என்பது. ஆனால் மனிதன் சமைக்க துவங்கி தானியங்களின் இந்த டிஃபென்ஸ் மெக்கானிசத்தை வென்றுவிட்டான். ஆனால் தானியத்தில் உள்ள பிற விஷங்களை அவனால் இன்னும் வெல்ல இயலவில்லை. உதாரணம் கோதுமையில் உள்ள க்ளூட்டன். க்ளூட்டன் அலர்ஜி பலரையும் மிக கடுமையாக பாதிக்கிறது.
கொட்டைகளும் அதுபோல் விதைகளே. நட் அலர்ஜி மனிதரில் பலருக்கும் இருப்பதை காணலாம்.
தாவர உணவு ஆதி மனிதனின் மெக்டானல்ட்ஸ். வேட்டை கிடைக்காத நாட்களில் பட்டினி கிடக்காமல் இருக்க மனிதனுக்கு அது உதவியது. ஆனால் தினம் வீட்டு சாப்பாட்டை உண்ணாமல் மெக்டாலன்ட்ஸில் உண்டால் என்னென்ன சிக்கல் வருமோ அது அனைத்தும் ஆதிமனிதனுக்கு வந்து சேர்ந்தது.
தானிய உணவு மனிதனின் உயரத்தை சராசரியாக ஆறு இஞ்சு பக்கம் குறைத்தது.
ஆதி மனிதனுக்கு இல்லாத ஆஸ்துமா, குறட்டை, சைனஸ், கான்சர், மாரடைப்பு, அல்சைமர், டிமென்ஷியா, குழந்தைகளுக்கு வரும் ஏடிடி, இந்தியர்களை பெருமளவில் தாக்கும் ஃபேட்டி லிவர் வியாதி, பல் சொத்தை, பல் கூச்சம் இன்னும் ஏராளமான வியாதிகள் விவசாய காலகட்ட மனிதனுக்கு வர காரணம் தானிய உணவே.
நவீன அறிவியலின் துணை கொண்டு தானிய உணவை சற்று ஆரோக்கியமானதாக மாற்றி அமைக்கலாம். ஆனால் அதனால் மேலே சொன்ன வியாதிகள் வருவதை தடுக்க முடியுமா என்றால் பதில் முடியாது.
No comments:
Post a Comment