Thursday, February 07, 2013

உங்கள் தொப்பை எந்த வகை?

உங்கள் தொப்பை எந்த வகை?
 
நீங்க ஒல்லியா, குண்டா/ ஆணா, பெண்ணா என்பது கூட பிரச்சனை இல்லை. உங்களுக்கு தொப்பை இருந்தால் அது எந்த வகை என்பதுதான் முக்கியம்.
 
 
கீழே இருக்கும் இரு புகைப்படங்களையும் பார்க்கவும்
Inline image 1

 
இடப்புறம் இருப்பவர் தொப்பை ஆபத்து குறைவான தொப்பை. ஆபத்து குறைவான தொப்பை என்பது இப்படி சதையை கிள்ளி பிடிக்க முடியும். தொப்பையை மேலும், கீழும் நகர்த்த முடியும். காரணம் அதில் உள்ல கொழுப்பு subcutaneous fat எனும் வகை கொழுப்பு. இது தோலுக்கு நேர் கீழே சேகரிக்கபடும் கொழுப்பு.
 
வலப்புறம் இருப்பவர் தொப்பை கல் மாதிரி கெட்டியான தொப்பை. இதை கிள்ளுவதும், நகர்த்துவதும் சிரமம். இவருக்கு இருக்கும் தொப்பை ஆபத்தான கொழுப்பால் நிரம்பிய தொப்பை. இவருக்கு உள்ல கொழுப்பு Visceral fat எனப்படும். இதுதான்  மிக ஆபத்தான கொழுப்பு. இந்த வகை கொழுப்புதான் ஹார்ட் அட்டாக், டயபடீஸ், ரத்த அழுத்தம் மற்றும் சிலவகை கான்சர்களை வரவழைக்கும் கொழுப்பு.
 
உங்களுக்கு இந்த இரன்டில் எந்த வகை தொப்பை இருக்குது என்பதை எப்படி தெரிந்துகொள்வது?
 
இஞ்சு டேப்பை எடுங்கள். கீழே படுத்துகொண்டு வயிற்றின் சுற்றளவை (தொப்புளுக்கு மேல் உள்ல சுற்றளவு) டேப்பால் அளங்கள்.
அடுத்து எழுந்து நின்று கொண்டு அதே அளவை மீண்டும் எடுங்கள். இரண்டு அளவுக்கும் வித்தியாசம் 1 இஞ்சுக்கும் கீழே என்றால் உங்களுக்கு இருப்பது ஆபத்தான visceral கொழுப்பு.
 
ஒரு இஞ்சுக்கும் அதிகமான வித்தியாசம் இரண்டு அளவுக்கும் உள்ளது என்றால் நீங்கள் தப்பினீர்கள். உங்களுக்கு இருப்பது ஆபத்து குறைவான வகை கொழுப்பு. ஆனால் அதையும் சீக்கிரம் கரைத்து விடுங்கள்.
 

 

No comments: