Thursday, February 14, 2013

உங்கள் கொலஸ்டிரால் எண்கள் எதை குறிக்கின்றன?


உங்கள் கொலஸ்டிரால் எண்கள் எதை குறிக்கின்றன?

உங்கள் கொலஸ்டிரால் ரிப்போர்ட்டில் 4 விதமான எண்கள் வரும். ஒன்று மொத்த கொலஸ்டிரால். இதன் நார்மல் அளவு 200. இது 200 தாண்டினால் பலரும் "எனக்கு கொலஸ்டிரால் வந்துவிட்டது" என அலறி துடிப்பார்கள். ஆனால் அடிப்படையில் இது அர்த்தமற்ற, பொருளே இல்லாத எண். அடுத்த எண்கள் தான் முக்கியம்.  அடுத்து எல்டிஎல் எனப்படும் கெட்ட கொலஸ்டிரால் எண். இது 100க்கு கீழே இருப்பது சிறப்பு. 130 வரை இருப்பது பரவாயில்லை. 130 தான்டினால் ஆபத்து. ஆனால் இதிலும் ஒரு டெக்னிக்கல் விஷயம் இருக்கு. அதை பின்னால் சொல்கிறேன். அடுத்து நல்ல கொலஸ்டிரால் எனப்படும் எச்டிஎல் கொலஸ்டிரால். இது 40க்கு கீழே இருந்தால் மோசம். அறுபதை தாண்டினால் அற்புதம். எச்டிஎல் அதிகரிக்க அதிகரிக்க நமக்கு இதய அடைப்பு வரும் வாய்ப்பு மிக குறையும். இறுதியாக வரும் வில்லன் தான் ட்ரைக்ளிசரைட்ஸ். இது 100க்கு கீழே இருப்பது மிக நல்லது 200க்கு கிழே இருப்பது கொஞ்சமா ஓக்கே. 200 தான்டினால் மிக ஆபத்து. 500 தாண்டினால் உயில் எழுதி விடுங்க.

இதுநாள்வரை இதைதான் உங்கள் மருத்துவர் உங்களிடம் சொல்லியிருபபர். ஆனால் இதில் இன்னும் சில சூட்சுமங்கள் உள்ளன.

சூட்சுமம் 1: நீங்கள் 65 வயது தாண்டிய பெண்ணாக இருந்தால் அதிக கொலஸ்டிரால் லெவலால் உங்களுக்கு எந்த ஆபத்தும் வராது. சொல்ல போனால் கொலஸ்டிரால் அதிகம் உள்ள 65 வயது பெண்கள் கொலஸ்டிரால் குறைவாக உள்ல 65 வயது பெண்களை விட அதிக வருடம் வாழ்கிறார்கள். (இது எப்படி இருக்கு?)

சூட்சுமம் 2: எந்த வயது பெண்களுக்கும் ஸ்டாடினால் எந்த பயனும் கிடையாது. இளம், நடுத்தர வயது பெண்களுக்கு இயற்கையே மாதவிலக்கு மூலம் அதிகமாக எச்டிஎல் கொலஸ்டிராலை சுரக்க வைத்து பாதுகாக்கிறது. அது நின்றபின்னரும் பெண்களுக்கு எல்டிஎல் கொலஸ்டிரால் அளவு முக்கியம் அல்ல, எச்டிஎல் கொலஸ்டிரால் அளவுதான் முக்கியம். 65 வயதை தாண்டினால் நீங்கள் கொலஸ்டிரால் ப்ரூஃப். ட்ரைகிளிசரைடு அளவு அதிகமாக இல்லாமல் இருக்கும்வரை நீங்கள் சேஃப்

அப்பாவி ஆண்கள் நிலை என்ன?

உங்கள் மொத்த கொலஸ்டிரால் எண் 200 அல்லது எல்டிஎல் 130 தான்டியதும் மருத்துவர் உங்களுக்கு ஸ்டாடினை பரிந்துரைத்தால் கீழ்காணும் விஷயங்கள் அவருக்கு தெரியுமா என உறுதிபடுத்துங்கள்.

அதாவது உங்கள் ட்ரைகிளிசரைடு 100க்கு குறைவாக இருந்து நல்ல எச்டிஎல் கொலஸ்டிரால் அதிகமாக இருந்தால் (60 தான்டினால்) உங்கள் எல்டிஎல் கொலச்டிராலும் மொத்த கொலஸ்டிராலும் அதிகமாக தான் காட்டும். ஆனால் இந்த சூழலில் உங்களுக்கு அதிகமாக இருக்கும் எல்டிஎல் கொலச்டிரால் தீங்கற்ற லார்ஜ் பார்ட்டிக்கிள் வெரைட்டி என்ற வகை எல்டிஎல். இது அதிகமாக இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை. கொலஸ்டிரால் டெஸ்டுகள் துரதிர்ச்டவசமாக உங்களுக்கு இருக்கும் எல்டிஎல் கொலஸ்டிரால் என்ன வகை என்பதை காட்டுவது இல்லை. ஆக உங்கள் எச்டிஎல் அதிகமாக இருந்து ட்ரைகிளிசரைடு 100க்கு குறைவாக இருந்து உங்கள் மொத்த கொலஸ்டிரால் அளவு 200 தாண்டி, உங்கள் எல்டிஎல் 130 தான்டியிருந்தால் உங்களுக்கு கொலஸ்டிராலால் ஆபத்து இருக்கு என பொருள் இல்லை.

ஆனால் பல மருத்துவர்கள் எல்டிஎல்லை மட்டும் பார்த்து அல்லது மொத்த கொலஸ்டிரால் அளவை மட்டும் பார்த்து ஸ்டாடினை பரிந்துரைப்பார்கள். சில அவச்ரகுடுக்கை பேஷண்டுகள் தானாக வம்பை விலைக்கு வாங்குவது போல ஸ்டாடினை பரிந்துரைக்க சொல்லி சொந்த செலவில் சூனியம் வைத்து கொள்வார்கள்.

உங்கள் எச்டிஎல் லெவெல் அதிகமாக இருந்து, ட்ரைகிளிசரைடு குறைவாக இருந்து உங்கள் எல்டிஎல் கொலஸ்டிரால் சற்று அதிகமாக இருந்தால் அது ஆபத்து என பொருள் இல்லை. உடனே ஸ்டாட்டினில் விழ வேன்டாம்.

இதில் இன்னொரு சூட்சுமமும் உள்ளது.

உங்கள் எல்டிஎல் நேரடியாக அளக்கபடுவது இல்லை. Friedewald equation எனும் கணித சூத்திரபடி தான் அது அளக்கபடுகிறது. மருத்துவரிடம் எக்ஸ்ட்ராவாக காசு தருவதாக சொல்லி எல்டிஎல் அளவை நேரடியாக அளக்க சொல்லுங்கள்.

மொத்தத்தில் ஸ்டாடினை உட்கொள்ள துவங்குமுன் ஒன்றுக்கு இரு மருத்துவர்களிடம் கேட்டு உங்கள் நிலை சிக்கலா என பார்த்து உட்கொள்ளவும்.

உசாதுனை:

http://www.proteinpower.com/drmike/statins/jane-brody-and-her-elevated-cholesterol/

http://www.proteinpower.com/drmike/weight-loss/low-carbohydrate-diets-increase-ldl-debunking-the-myth/


முக்கிய குறிப்பு: நான் மருத்துவர் அல்ல. இது மருத்துவ ஆலோசனை அல்ல. பொதுவான கருத்து பகிர்தலே


 
 

No comments: