Tuesday, February 19, 2013

உணவில் இருக்கும் கொழுப்பு கொலச்டிராலை அதிகரிக்கிறதா?

பிளட் பிரஷர், கொலஸ்டிரால், சர்க்கரை வியாதி இவை மூன்றும் நாகரிக மனிதனின் வியாதிகள் என அழைக்கபடுபவை. 19, 20ம் நூற்றாண்டுகளில் ஐரோப்பிய நாகரிகம் பரவிய சமூகங்களில் கூட இந்த வியாதிகளும் பரவின. உதாரணமாக எஸ்கிமோக்களை கூறலாம். எஸ்கிமோ உணவு 100% மாமிசம். முழுக்க முழுக்க சீல், வால்ரஸ், பனிக்கரடி என அதிக கொழுப்பு நிரம்பிய உணவுகளை உண்பவர்கள் எஸ்கிமோக்கள். பால், காய்கறிகளை அவர்கள் பார்ப்பதே அபூர்வம்.

இத்தனை கொழுப்பு நிரம்பிய உணவுகளை உண்டும் குன்டாக இருக்கும், சர்க்கரை வியாதியால் அவதிபடும் எஸ்கிமோக்களை யாரும் பார்க்க முடியாது. ஆனால் இப்போது அவர்களும் ரொட்டி, பர்கர், பன்களை உண்ன துவங்கியதும் நாகரிக மனிதனின் வியாதிகள் அவர்களையும் வந்து அடைந்துள்ளன.

ஆனால் கொலஸ்டிராலுக்கு காரணம் கொழுப்பு நிரம்பிய உனவுகளை உண்பது என நாம் எப்படி அறிந்தோம் என்பதே சுவார்சியமான விஷயம். இதை கண்டுபிடித்தவர் ஆன்சல் கீஸ் எனும் ஆய்வாளர். அவர் சுமார் 22 நாடுகளில் மக்களின் உணவையும் அவர்கள் கொல்ஸ்டிரால் அளவையும் ஆராய்ந்தார். அதன்பின் அதில் ஏழு நாடுகளின் டேட்டாவை மட்டும் எடுத்து பதிப்பிட்டார். அதில் மக்களின் உணவில் கொழுப்பு அதிகம் இருக்க அவர்கள் ரத்தத்தில் உள்ள கொலஸ்டிரால் அளவும் அதிகமாக இருப்பது கன்டுபிடிக்க பட்டது.


60களில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த ஆய்வுக்காக ஆன்சல் கீஸ் டைம் பத்திரிக்கையின் அட்டைபடத்தில் வெளியிடப்பட்டு சிறப்பிக்கபட்டார். அதன்பின்னர் கோடிகணகான டாலர்கள் கொலஸ்டிராலுக்கும் நம் உணவில் உள்ல கொழுப்புக்கும் இருக்கும் ஒற்றுமையை ஆராய செலவிடபட்டன. பின்னளில் வெளியான ஆய்வுகள் தெளிவான எந்த முடிவையும் தரவில்லை. ஆனால் அதற்குள் ஆன்சல் கீஸின் ஆய்வு முடிவை ஒட்டி பலரும் கொழுப்பு குறைந்த உணவுகலை உண்ண துவங்கினர்.

இந்த பிரச்சனையை தீர்க்க அமெரிக்க அரசு செனட்டர் ஜார்ஜ் மெக்கவர்ன் தலைமையில் ஒரு கமிட்டியை அமைத்தது. ஜார்ஜ் மெக்கவர்ன் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு தோற்றவர். கமிட்டி கொலச்டிராலுக்கு காரணம் கொழுபப என ஆராய்ந்தது. கமிட்டி முன் அறிக்கை சமர்ப்பித்த விஞ்ஞானிகளிடம் கடும் கருத்துவேறுபாடுகள் நிலவின. ஆனால் ஜார்ஜ் மெக்கவர்ன் இதற்கு முன் நேதன் ப்ரிக்ட்கிர்ன் எனும் மருத்துவர் நடத்திய கொழுப்பு குறைவான உணவுகளை உண்ணும் புரக்ராமில் கலந்து கொண்டவர். இந்த புரக்ராமில் கலந்துகொன்டவர்கள் எடை குறைந்தது உண்மை. ஆனால் கொழுப்பு குறைந்த உணவுகலை உன்ட பலரும் பின்னாளில் மன அழுத்தம் அடைந்து தற்கொலை செய்துகொண்டதால் நேதன் அந்த புரக்ராமையே பின்னாளில் கைவிட்டு விட்டார்.

இப்படி இந்த புரக்ராமில் கலந்துகொண்டதால் மெக்கவர்ன் கொழுப்பு குறைவான உணவுகள் தான் நல்லவை என நம்பிவந்தார். கமிட்டி அறிக்கை வெளியாகி "உடலில் கொலச்டிராலை குறைக்க கொழுப்பு குறைந்த உணவுகளை உண்பதே வழி" என பரிந்துரைக்கபட்டது. உடனே அதை ஒட்டி அமெரிக்க அரசின் புட் பிரமிட் வெளியிடபட்டது. அதில்  ரொட்டி, சீரியல் முதலிய தானிய உணவுகளை அதிகம் உண்ன மக்களுக்கு பரிந்துரைக்கபட்டது. மாமிசம், முட்டை, வெண்ணெய் ஆகியவற்றை குறைவாக உண்ன அல்லது தவிர்க்க பரிந்துரைக்கபட்டது.

இந்த பரிந்துரைகளை ஒட்டி மில்லியன்கனகான டாலர்கள் சீரியல், ரொட்டி கம்பனிகளால் விளம்பரங்களுக்கு செலவிடப்பட்டன. "இதயத்துக்கு நன்மை அளிக்கும் சீரியல்கள்" என்ற முத்திரையுடன் அவை வலம் வந்தன.

ஆனால் இது அனைத்துக்கும் அடிப்படையான மருத்துவர் ஆன்சல் கிஈஸின் ஆய்வு பல நாட்கள் மறுபரிசீலனைக்கு உடபடவே இல்லை. அவற்றை பின்னாளில் ஆராய்ந்தவர்கள் ஆன்சல் கீஸ் ஏழு நாடுகளை மட்டும் ஆய்வுக்கு எடுத்துகொன்டதை விடுத்து அந்த 22 நாடுகளின் புள்ளிவிவரங்களையும் பதிப்பிட்டிருந்தால் நாம் உண்ணும் உணவில் உள்ல கொழுப்புக்கும், நம் உடலில் உள்ல கொலஸ்டிரால் அளவுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்பதை கண்டறிந்தார்கள்.


கீழே இருக்கும் கிராபில் இடப்பக்கம் இருப்பது 7 நாடுகளின் டேட்டா. வலப்பக்கம் இருப்பது 22 நாடுகளின் டேட்டா.

Inline image 1


No comments: