Sunday, February 17, 2013

ஜனாதிபதியும் சமையல்காரரும்

ஜனாதிபதியும் சமையல்காரரும்

சமையல்காரர்

பாண்டிங் என்பவர் குண்டர். உடல் எடை அதிகம் இல்லை 200 பவுன்டுதான். ஆனால் குனிந்து ஷூ லேசை கூட கட்ட முடியாது. வெறுத்து போன பாண்டிங் உடல்பயிற்சியில் சேர்ந்தார். கலோரிகளை குறைத்தார். நடைபயிற்சி மேற்கொண்டார். உணவில் கலோரிகளை குறைக்க குறைக்க உடல் எடை ஏறியது. மேலும் கலோரிகளை குறைத்தார். காய்கறிகலை மட்டும் உன்டார். மேலும் எடை ஏறதான் செய்தது.

அவர் செய்த அதிர்ஷ்டம் வில்லியம் ஹார்வி எனும் மருத்துவரை சந்தித்தார். அப்போது க்ளுகோஸ் என ஒன்றி இருப்பது கண்டுபிடிக்கபட்டு அதுதான் எடை அதிகரிப்புக்கு காரணம் என ஒரு தியரி உலா வந்தது.ஹார்வி பாண்டிங்குக்கு ஒரு எளிய ஆலோசனை சொன்னார். க்ளுகோஸ் சுத்தமா இல்லாமல் சாப்பிடு என.

"பண்ணைகளில் மிருகங்களை குண்டாக்க அதற்கு தானியமும், புல்லும் தான் போடுவோம். அதை மனிதர்கள் தின்றால் அவர்களும் குண்டாக தான் செய்வார்கள். சைவ உணவு மட்டும் உண்ணும் யானை, காண்டாமிருகம், நீல திமிங்கிலம் எல்லாம் எப்படி குண்டா தொந்தியும், தொப்பையுமா இருக்கு? அதே குண்டா இருக்கும் சிங்கத்தையோ, புலியையோ யாரோ பார்த்ததுண்டா?" என்றார் ஹார்வி

வீடு திரும்பிய பாண்டிங் தினம் மூன்று வேளை வெறும் மாமிசம், மீன், முட்டை ஆகியவற்றை மட்டும் உண்டார். மாலையில் ஒரு டீயுடன், கொஞ்சம் பழம் சாப்பிடுவார். ரொட்டி, பால், இனிப்பு, உருளைகிழங்கு அனைத்தையும் தவிர்த்தார். கலோரிகளுக்கு கட்டுபாடு இல்லை. இஷ்டத்துக்கு உண்டார்

2 வருடங்களில் அதிசயிக்கதக்க முறையில் ஐம்பது பவுன்டுகளை இழந்து முழுமையான உடல் ஆரோக்கியம் அடைந்தார். அதை ஒரு நூலாக எழுதினார். அது அந்த காலத்தில் மிக பிரபலம் அடைந்தது. பிரெஞ்சு சக்ரவர்த்தியும், ஜெர்மன் மந்திரியான ஆட்டோவான் பிஸ்மார்க்கும் அதை படித்துவிட்டு அந்த டயட்டை பின்பற்றி கணிசமாக உடல் எடையை இழந்தனர்.

இதனால் இப்போது டயட்டிங் என சொல்லுவது போல் அன்று உணவு கட்டுபாட்டுக்கு "பாண்டிங்" என பெயர் இருந்தது.

நாளை ஜனாதிபதியின் கதை