Wednesday, February 20, 2013

உணவில் இருக்கும் கொழுப்பு கொலச்டிராலை அதிகரிக்கிறதா?- 2


ஆன்சல் கீஸின் ஆய்வில் கொழுப்பு என ஒட்டுமொத்தமாக கணக்கிட்டதை விடுத்து புராசஸ் செய்யப்பட்ட செயற்கை கொழுப்புக்கும் (உதாரணமாக ஹைட்ரஜனேட்டெட் ஆயில்கள்- மாரடைப்பு அதிகமாக இருந்த நாடுகளில் இவை அதிகம் பயன்பட்டன), மாரடைப்புக்கும் உள்ள உறவை கணக்கிட்டிருந்தால் அவர் டேட்டாவில் இருந்த பிரச்சனைகள் தீர்ந்திருக்கும் என பின்னாளில் ஆய்வாளர்கள் கூறினார்கள். (உதா: கரோலின் பாரிங்கர்)

துரதிர்ச்டவசமாக கொழுப்பு மோசம் என ஒட்டுமொத்தமாக கொழுப்புக்களை குறைக்க சொன்னதால் மக்கள் இயற்கை கொழுப்புக்களான நெய், வெண்ணெய், பன்றிக்கொழுப்பு ஆகியவற்ரில் சமைப்பதை நிறுத்தி செயற்கை கொழுப்புக்களான மார்கரின், ஹைட்ரஜனேட்டட் வெஜிட்டபிள் ஆயில் (சோயா, சன்பிளவர், கார்ன் ஆயில்) ஆகியவற்ருக்கு மாறினார்கள். இவற்றில் இருந்த டிரான்ஸ்ஃபேட் மிக ஆபத்தானது, மாரடைப்பை ஏற்படுத்துவது என்பது பின்னாளில் தெரியவருவதற்குள் இவை "இதயத்துக்கு நலமளிப்பவை" என்ற முத்திரையுடன் பெரும் சந்தையை பிடித்து விட்டிருந்தன.

ஆலன் கீஸ் ஆய்வை தொடர்ந்து உணவில் உள்ள கொழுப்புக்கும், ரத்தத்தில் உள்ள கொலஸ்டிராலுக்கும் இடையே உள்ள உறவு ஆராயபட்டது. ஆய்வு முடிவுகள் தெளிவான எந்த ரிசல்ட்டையும் தரவில்லை.

உதாரணமாக அமெரிக்க ஹார்ட் அசோசியேஷன் சார்பில் நடந்த இந்த ஆய்வை எடுத்துகொள்வோம். ஆய்வின் முழு பிடிஎப் சுட்டியும் இங்கே காணலாம்




D M. GERTLER, STANLEY MARION GARN and PAUL DUDLEY WHITE
Diet, Serum Cholesterol and Coronary Artery Disease
Print ISSN: 0009-7322. Online ISSN: 1524-4539 

 229 பேரிடையே நடத்தபட்ட இந்த ஆய்வில் பங்கேற்பாளர்கள் இரு பிரிவுகளாக பிரிக்கபட்டனர். கண்ட்ரோல் க்ரூப் என அழைக்கபட்ட பிரிவினருக்கு உணவு கட்டுபாடு எதுவும் விதிக்கப்டவில்லை. கரோனரி க்ரூப் என அழைக்கபட்ட பிரிவினர் குறைந்த கொழுப்பு சத்து உள்ள உணவுகளை உண்டார்கள். இறுதியாக கணக்கிட்டதில் கன்ட்ரோல் க்ரூப் கரோனரி க்ரூப்பை விட 12% அதிக கொழுப்பு மற்றும் கொலஸ்டிரால் நிரம்பிய உணவுகளை உண்டதாக கணக்கிடபட்டது.

அதன்பின் இந்த இரு பிரிவினரின் ரத்தத்தில் உள்ள சீரம் கொல்ஸ்டிரால் அளக்கபட்டது. அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் கரோனரி க்ரூப்பின் சீரம் கொல்ஸ்டிரால் அளவு கண்ட்ரோல் க்ரூப்பின் கொல்ஸ்டிரால் அளவை விட 16% அதிகம் இருப்பதாக் தெரிய வந்தது.

ஆக 12% அளவு குறைந்த கொழுப்பை உண்ட பிரிவினர் 16% அளவுக்கு ரத்தத்தில் கொல்ஸ்டிராலை அதிகரித்து கொன்டனர்.

இதய அடைப்பு உள்ளவர்களுக்கு குறைந்த கொழுப்பு சத்து உள்ள உணவுகளை பரிந்துரைப்பதன் நன்மைகளை நிருபிக்க நடந்த இந்த ஆய்வு தலைகீழான ரிசல்டுகளை அளித்ததால் வெறுத்துபோன விஞ்ஞானிகள் "இதய அடைப்பு உள்ளவர்கள் கொலஸ்டிரால் குறைவாக உள்ள உணவுகளை உண்ணவேண்டும் என பரிந்துரைப்பதில் எந்த நன்மையும் இல்லை" என கூறி எழுப்பி ஆய்வை முடித்தார்கள்

4. The question is raised as to the wisdom
of removing cholesterol from the diet of individuals with coronary artery disease. From
the evidence gathered from this study and other
dietary studies in this laboratory, it is believed
that there is no advantage to be gained from
imposing a low cholesterol diet on patients with
coronary artery disease.


No comments: