Wednesday, January 09, 2013

சர்க்கரை வள்ளி கிழங்கு புராணம்

சர்க்கரை வள்ளி கிழங்கு புராணம்

புராணமே எழுதும் அளவு நல்ல உணவு இது.

Inline image 1

இது இனிப்பாக இருந்தாலும், சாப்பிட்டவுடன் வயிறு திம் என நிறைவதாலும் இதை உண்டால் வெயிட் போடும் என தவறான நம்பிக்கை உள்ளது. ஆனால் சர்க்கரைவள்ளி கிழங்கில் பைபர் (நார்சத்து) அதிகம் இருப்பதால் வயிறு நிரம்புவது போல் தோன்றும். பைபர் கிழங்கு விரைவில் செரிமானம் ஆகாமல் தடுத்துவிடும். அதனால் உடலில் கொழுப்பு சத்தை சேர்க்க தூண்டும் இன்சுலின் சுரப்பது தடுக்கபடுகிறது. இதில் கார்போஹைட்ரேட் இருந்தாலும் அது காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் வகையை சார்ந்த இயற்கையான சர்க்கரை உணவு.

இன்ஃப்ளமேஷன் என சொல்லபடும் பிரச்சனையை தீர்க்கும் சூப்பர் ஃபுட் சர்க்கரைவள்ளி கிழங்கு. உங்கள் உடலில் சிகப்பு, சிகப்பாக தோலில் தடிப்பதுதான் இன்ஃப்ளமேஷன். என் உடலில் அப்படி எதுவும் இல்லை என நீங்கள் சொல்லலாம். ஆனால் உங்கள் உடலுக்கு உள்ளேயும் உங்களுக்கே தெரியாமல் இன்ஃப்ளமேஷன் இருக்கும். இது சாதாரண மருத்துவ பரிசோதனையில் எல்லாம் தெரிய வராது. 21ம் நூற்ராண்டின் சைலன்ட் கில்லர் என இன்ஃப்ளமேஷன் அழைக்கபடுகிறது. இன்ஃப்ளமேஷன் உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை மெதுவாக அழிக்கும். உடல் எடையை ஏற்றும், கேன்சர் , ஸ்ட்ரோக்கை வரவழைக்கும்.

இப்படி வரும் இன்ஃப்ளமேஷனை குறைக்கும் சக்திவாய்ந்த சூப்பர் ஃபுட் சர்க்கரைவள்ளி கிழங்கு.

அடுத்து சர்க்கரைவள்ளி கிழங்கில் வைடமின் ஏ உள்ளது. கண்பாரவிக்கு இது மிக நல்லது என்பதை சொல்லவேண்டாம்,. ஒரு நாளுக்கு தேவையான வைடமின் ஏவை அடைய ஒரே ஒரு சர்க்கரை வள்ளி கிழங்கை உண்டால் போதும்.

இதில் இரும்பும், மாங்கனீஸும் அதிக அளவில் இருப்பதால் நரம்புகள், இதயம், ரத்தநாளம் ஆகியவை சீராக செயல்பட இது உதவுகிறது. இது ஸ்ட்ரெஸ் எனப்படும் மன அழுத்தத்தை குறைக்கும் மிக சிறந்த தாதுப்பொருள். 80% மக்கள் மாங்கனிஸ் பற்றாகுறையால் அவதிபடுகிறார்கள் என ஆய்வுகள் கூறுகின்றன.

இது எல்லாவற்றையும் விட முக்கியமாக இதில் பொட்டாசியம் உள்ளது. பொட்டாசியம் பிளட் பிரஷரை குறைக்க உதவும் மிக முக்கிய மினரல். அதனால் சர்க்கரைவள்ளி கிழங்கை உண்பது ரத்த அழுத்தத்தை சீராக்குவதால் இதை குறைந்த ரத்த அழுத்தம் இருப்பவர்களும் உண்ணலாம், அதிக ரத்த அழுத்தம் இருப்பவர்களும் உண்ணலாம். இரன்டுக்கும் அதுவே அருமருந்து.

இப்படிப்பட்ட அருமையான கிழங்குக்கு நம் வள்ளிகுறத்தியின் பெயரும் இருப்பது கூடுதல் சிறப்பு:-). அதனால் தினம் ஒரு சர்க்கரைவள்ளி கிழங்கை ஆவியில் வேக வைத்து சர்க்கரை, எண்ணெய் எதுவும் சேர்க்காமல் இயற்கையாக உண்டு வர நம் உடல் மிகுந்த பலன் அடையும்.

Thanks: http://www.jigsawhealth.com/resources/inflammation

http://www.care2.com/greenliving/9-reasons-to-love-sweet-potatoes.html?page=2

2 comments:

R.DEVARAJAN said...

மிக்க நன்றி செல்வன் சார்
சர்க்கரைவள்ளிக் கிழங்கைத் தவிர்த்து வந்துள்ளேன். பெரிய தவறு; இனிமேல் சேர்த்துக்கொள்வேன்

தேவ்

Unknown said...

Its a good choice Dev sir