Sunday, January 06, 2013

தங்கப்பாறை கோயில்


"மியான்மர் என அதை அழைக்கிறார்கள்" என்ற டாக்குமெண்டரியை நெட்ப்ளிக்ஸில் பார்த்தேன். பர்மா பற்றிய சுவாரசியமான தகவல்கள் கிடைத்தன

பர்மாவில் அனைவரும் முகத்தில் தனகா எனும் மரத்தை அரைத்து பூசிகொள்கிறார்கள். ஆண்/பெண்/குழந்தைகள் பேதமின்றி தனகா பூச்சுடன் வலம் வருகிறார்கள். தனகா உடலுக்கு அழகு சேர்க்கும், குளிர்ச்சி அளிக்கும் என நம்பபடுகிறது. நம்ம ஊர் சந்தனம், மஞ்சள் மாதிரி அங்கே தனகா

Inline image 1

அரிசி தான் முக்கிய உணவு. சிறுவர்கள் கூட மொட்டை அடித்து புத்த பிக்கு உடைகளில் வலம் வருகிறார்கள். அவர்களுக்கு அரிசியை பிக்ஷையாக இலைகளில் வழங்குகிறார்கள்

பவுத்தம் தான் முக்கிய மதம் எனினும் ஜாதகம், கிரகபலன்களில் ஏராளமான நம்பிக்கை மக்களுக்கு உண்டு. பகோடாக்களில் தம் ராசிபலனுக்கு ஏற்ப சிலைகளுக்கு அபிஷேகம், ஆதாரதனை நடக்கிறது. ராகு, கேது, புதன், வியாழன் எல்லாம் அங்கேயும் உண்டு. ஜோசியரை கேட்காமல் எந்த நல்ல காரியத்தையும் செய்ய மாட்டார்கள்.

பர்மிய பகோடாக்களில் காணப்படும் விஷயம் தங்க ஸ்தூபம், தங்க மணி போன்றவை. நம்ம ஊர் கோயில்களுக்கு நேர்ந்து கொள்வதை போல அங்கே பகோடாக்களுக்கு நேர்ந்து கொள்கிறார்கள். திருப்பதிக்கு நடந்து மலை ஏறுவதை போல தங்கபாறை பகோடா என ஒன்று உண்டு. அங்கே ஒட்டுமொத்த பர்மாவும் கூடுகிறது. நடந்து மலை ஏறுகிறது. தங்கப்பாறை பகோடாவில் ஒரு பாறை மலை உச்சியில் பேலன்ஸ் ஆகி நிற்கிறது.. அது விழாமல் இருக்க காரணம் புத்தரின் தலைமுடி அங்கே இருப்பதுதான் என நம்புகிறார்கள்.அந்த முடியை சுமந்து வந்த படகும் அங்கே வழிபடபடுகிறது. வேன்டுதல் நிறைவேறினால் தங்கத்தை அந்த பாறை மேல் ஒட்டுவது வழக்கம். இப்படி ஒட்டி, ஒட்டி பாறை முழுக்க தங்கம்.

Inline image 2

பர்மிய தெருக்களில் சுதந்திரமாக படம் எடுக்க முடியாது. தம் முகத்தை காட்ட பலரும் அஞ்சுகிறார்கள். காமிராவை எடுத்தால் போலிஸ் விசாரணை,கைது. அந்த ஊரில் காமிரா வைத்திருப்ப்தே பெரிய விஷயம்

பர்மா என்பது 1930 சென்னை. தெருக்களில் கார்கள், பைக்குகள் இல்லை. பெரும்பாலும் நடந்து செல்கிறார்கள். முகத்தில் அறையும் ஏழ்மை.மில்லியனர்கள் மாளிகைகள் மற்றும் ஏழ்மை இரன்டுதான் அங்கே உள்ளது. நடுத்தர வர்க்கம் என ஒன்று இல்லை

பள்ளிகள் வசதியானவர்களுக்கு மட்டும்தான் என்பதால் அங்கே பலரும் பள்ளிக்கு போவது இல்லை. குழந்தை தொழிலாளிகள் சர்வசாதாரணாமக காணமுடிகிறது. குழந்தைகள் கல் உடைக்கிறார்கள், கம்பனிகளில் வேலை செய்கிறார்கள், டீ கடைகளில் பணிபுரிகிறார்கள்.

No comments: