தமிழ்நாட்டில் எத்தனையோ தலைவர்கள் இருந்தாலும் அவர்களில் பலருக்கும் வாழ்க்கை வரலாறு ( biography ) எழுதபடவில்லை. இருப்பது எல்லாம் அவர்களை மிகவும் நேசித்தவர்கள் எழுதிய hagiography தான்.விஜயகாந்த் வாழ்க்கைவரலாற்று நூல் கூட புகழ்மாலைகளுடன் தான் உள்ளது.
ஒருவரது நிறை,குறை அனைத்தையும் அலசி ஆராய்ந்து தலைவர்களின் தவறுகள், நன்மைகள் அனைத்தையும் முழுமையாக ஆவணப்படுத்தும் வாழ்க்கைவரலாற்று நூல் எனக்கு தெரிந்து நக்கீரனில் வந்த ஆட்டோசங்கர் வாழ்க்கை வரலாறுதான். சந்தனகடத்தல் வீரப்பன் வாழ்க்கை வரலாறு கூட "சந்தனகாட்டு சிறுத்தை" என தான் தலைபிடப்பட்டுள்ளது
ஜூலியஸ் சீசர், காலிகூலா, அலெக்சாந்தர் மாதிரி பேரரசர்கள் செய்த கொடுமைகள் முழுக்க ஆவணபடுத்தபட்டுள்ளன. அவர்கள் வாழ்க்கை வரலாற்றை படித்தால் முழு சித்திரத்தையும் அறிந்துகொள்ள முடிகிறது. ஆனால் நம் இலக்கியங்களில் உள்ள மன்னர்கள் பாரிவள்லலையும், கர்ணனையும் தோற்கடிக்கும் உத்தமர்களாக தான் இருக்கிறார்கள். இன்னும் ஆயிரம் வருடம் கழித்து "ரஜினி ஒரு சகாப்தம்" "பொன்மன செம்மல் எம்ஜிஆர்" மாதிரி வாழ்க்கைவரலாற்று நூல்களை படிப்பவர்கள் சங்ககாலம் துவங்கி 21ம் நூற்ராண்டு வரை பொற்கால தமிழகம் நிலவியதாக தான் கருதுவார்கள்.
வரலாற்றுரீதியாக இது தமிழ் இலக்கியத்துக்கு மிகபெரும் இழப்பு. தலைவர்களின் குறைகளும், தவறுகளும் சேர்ந்ததுதான் நம் வரலாறு. வரலாற்றில் ஒரு பகுதியை நாமாக இழக்கிறோமா?

No comments:
Post a Comment