உடல்பயிற்சி கடமை அல்ல. நம் ஸென்
கடனே என வாக்கிங் போகிறவர்கள், அழுது மூக்கை சிந்திகொண்டு அதை ஒரு செய்து தொலைக்கவேண்டிய விஷயமாக கருதி செய்பவர்கள் நீண்ட நாள் உடல்பயிற்சியில் நீடிப்பது இல்லை.
உடல்பயிற்சி என்பது தன்னை அறிதல் (Zen). உடலுக்கும் மனதுக்குமான போராட்டம். மனித மனம் பலவீனம் ஆனது. உடலின் சக்தி மனதின் சக்தியை விட மிக வலுவானது. "இதை உன்னால் செய்ய முடியாது" என மனம் சொல்லும். ஆனால் அதை தாண்டி அதை செய்தால் உடலால் அதை செய்ய இயலும்.
ஒலிம்பிக் போட்டியில் ஐநூறு பவுண்டு என்பது தூக்க முடியாத எடையாக கருதபட்டது. 495 பவுன்டு எடையை ஒருவர் தூக்க, ஐநூறு பவுண்டு எடையை தூக்கினால் தான் வெற்றி என்ற நிலையில் ரஷ்ய பயிற்சியாளர் ஐநூறு பவுண்டை தூக்க சொல்ல "ஐநூறு மனிதனால் முடியாது" என வீரர் மறுக்க பயிர்சியாளர் ஐநூறை போட சொல்லிவிட்டு வீரரிடம் அதில் உள்ளது 497 பவுண்டு என கூற ஆங்கிலம் தெரியாத வீரரும் அதை தூக்கிவிட்டு உலகசாதனை படைத்ததாக கூறுவார்கள்.
டிவி பார்க்க மகிழ்ச்சியுடன் ஓடுகிறோம். கதை புத்தகம் படிக்க ஆவலுடன் அமர்கிறோம். அதை அனுபவித்து செய்கிறோம். அதனால் நேரம் போவது தெரிவது இல்லை. ஆனால் என்றாவது "உடல் பயிற்சி செய்யணும்" என ஆசையுடன் எழுந்தது உண்டா? இல்லை எனில் ஏன் இல்லை?
அனுபவித்து, மகிழ்ச்சியுடன் செய்யாத முயற்சிகள் தோல்வி அடையும். கடனை கட்டுவது போல் உடல்பயிற்சி செய்தால் மனம் தப்பிக்க வழியை நாடும்.
நல்லதொரு உடல்பயிற்சி உங்களுக்கு சவாலை அளிக்கவேன்டும். அதை செய்ய செய்ய முன்னேற்றம் தெரியவேன்டும். போட்டி போடவேன்டும். உங்களுடன் இருந்தாலும் சரி, அடுத்தவர்களுடன் இருந்தாலும் சரி. அது உங்கள் வாழ்க்கைமுறையாக மாரவேன்டும். உணவு,உறக்கம்,பொழுத்போக்கு என அனைத்தையும் அதுவே ஆகிரமிக்க வேன்டும். நீங்கள் அதுவாக மாறவேன்டும். அதுவே உங்கள் ஆன்மிகம், உங்கள் ஸென்.
ப்ரூஸ்லியின் ஸென் கராத்தே. அவர் சும்மா கராத்தேவை பயிலவில்லை. அதுவாகவே மாறினார். அவரை கராத்தே மாற்றவில்லை. அவர் கராத்தேவை மாற்றினார்.அவர் உடல், உணவு,பொழுதுபோக்கு, வாழ்க்கைமுறை, தொழில், ஆன்மிகம் அனைத்தையும் அந்த கலையே ஆக்கிரமித்தது. கராத்தே அவரை ஒரு தத்துவஞானி ஆக்கியது.
அது மாதிரி நீங்களும் உங்கள் ஸென்னை தேர்ந்தெடுங்கள். அது யோகாவா இருக்கலாம், ஓட்டமாக இருக்கலாம், நீச்சலாக இருக்கலாம், கராத்தேவாக இருக்கலாம், கிரிக்கட்டாக இருக்கலாம். எதுவாக வேன்டுமனாலும் இருக்கலாம். அப்புறம் அதில் மூழ்குங்கள். அதன்பின் உங்கள் உடல்நலம், மனநலம் அனைத்தையும் அதுவே கவனித்துகொள்ளும். உங்களை போட்டி இட வைக்கும். கெட்ட பழக்கங்களை அகற்றும். ஆபிஸ், வீடு என இயந்திரமயான சூழலில் வாழ்க்கையை தொலைப்பது எளிது. அதில் இருந்து உங்களை நீங்களே மீட்டெடுக்க இது ஒரு நல்ல வாய்ப்பு.
2 comments:
மிகவும் அருமையான பதிவு :)
Thanks:-)
Post a Comment