Friday, December 07, 2012

காணாமல் போன கோடீஸ்வரர்கள்


நாட்டில் உள்ள மொத்த பணகாரர்கள் எண்ணிக்கையை பாதியாக குறைப்பதற்கான  வழி என்ன?

சிம்பிள். வரியை உயர்த்துவதுதான்

ப்ரிட்டிஷ் அரசு மில்லியனர்களுக்கான வருமான வரியை 40%ல் இருந்து 50% ஆக உயர்த்தியது. விளைவு ப்ரிட்டிஷ் மில்லியனர்கள் எண்ணிக்கை 60% ஆக குறைந்துவிட்டது. அதாவது போன வருடம் 16,000 ப்ரிட்டானியர்கள் மில்லியன் பவுன்டுக்கும் அதிகமான வருமானத்தை பைல் செய்தார்கள். இந்த வருடம் அவர்கள் எண்ணிக்கை 6000 ஆக குறைந்துவிட்டது.

வரியை உயர்த்துவது மூலம் 2.5 பில்லியன் பவுன்டுகள் அதிகமாக கிடைக்கும் என போட்ட கனக்கு கானல் நீராகி, மில்லியனர்களிடம் கிடைத்த 13.4 பில்லியன் வரித்தொகை இந்த வருடம் வெறும் 6.5 பில்லியன் பவுன்டுகளாக குறைந்துவிட்டது.

இது எப்படி சாத்தியம்? மில்லியனர்கள் திடீரென ஏழையாகி விட்டார்களா>?

இல்லை. வேறு நாடுகளுக்கு வருமானத்தையும், தொழில்களையும், வேலைகளையும், முதலீடுகளையும் நகர்த்திவிட்டார்கள். அவ்வளவுதான்.

பக்கத்து நாடான பிரான்சில் நிலைமை இன்னும் சூப்பர். அங்கே சோஷலிஸ்டு கட்சி ஆடிச்யில் அமர்ந்ததால் பணக்காரரக்ள் மேலான வரி 75% ஆக உயர உள்ளது. பிரான்சின் நம்பர் ஒன் பணகாரர் அடுத்த நிமிடம் பெல்ஜிய குடியுரிமை வாங்கிவிட்டார். பல பிரெஞ்சு கம்பனிகள் பிற ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு குடிபெயர உள்ளன.

அமெரிக்காவில் ஒபாமா பனக்காரர்கள் மேல் வரியை 35% இருந்து 40% ஆக உயர்த்த கடுமையாக ரிபப்ளிகன்களுடன் போராடி வருகிறார்.

ஒபாமா+கார்டன் பிரவுன்+-ஒல்லாந்தே Vs. மில்லியனர்கள்

போட்டி சுவாரசியம்
-


No comments: