Sunday, December 09, 2012

கொழுப்பு எதிரி அல்ல. நண்பன்




ஆதிமனிதன் காலம் தொட்டு நம் தாத்தா,பாட்டி காலம் வரை 8% பால் தான், மஞ்சள் கரு எடுக்காத முட்டைதான். மூன்று வேளையும் மாமிசம் தான். அதனால் யார் உடலும் கெடவில்லை, சர்க்கரை, பிளட்பிரஷர்,கொலஸ்டிரால் வரவில்லை. இப்போதுதான் இந்த வியாதிகள் மிகுந்துள்ளன. காரணம் என்ன?

அவர்கள் உண்டது இயற்கை உணவு. நாம் உண்பது செயற்கை உணவு. இயற்கையான கொழுப்பை எத்தனை உன்டாலும் அதனால் உடலுக்கு எந்த கெடுதலும் இல்லை. கூட சிம்பிள் கார்போஹைட்ரேட்டை சேர்ப்பதால் தான் சிக்கல்கல் உருவாகின்றன.

உங்கள் உணவில் அரிசி, சர்க்கரை முதலிய எந்த தானியமும் சேர்க்காமல் கொழுப்பையும் புரதத்தையும் மட்டும் உட்கொன்டால் என்ன ஆகும் என பார்க்கலாம். உடனே இதை செயல்படுத்த வேண்டாம். இதை நான் சொல்லவரும் பாயின்டை புரிந்துகொள்ள வைக்கவே ஒரு எக்ஸ்ட்ரீம் உதாரணமாக சொல்கிறேன்.

இன்றுமுதல் மூன்றுவேளையும் வெறும் வெண்னெயையும், கூட புரதத்துக்கு சீசையும் மட்டும் ஒருவர் உட்கொன்டால் என்ன ஆகும்?துளி அரிசி இல்லை, சீஸ் மற்றும் வெண்னெய்தான்.

முதலில் உங்கள் உடலுக்கு நிறைந்த ஓய்வு கிடைக்கும். உணவை உண்கையில் அதில் சர்க்கரை சத்து இல்லையெனில் உடல் இன்சுலினை சுரக்கவேண்டியது இல்லை. ஜீரண உறுப்புக்களே மிகுந்த ஓய்வை பெறும். பசிக்கவே பசிக்காது. சாக்லெட்டை தின்றால் உடனே பசி எடுக்கும். காரணம் அது இன்சுலினை அதிகம் சுரக்கவிட்டு பசியை ஏற்படுத்துகிறது. ஆனால் கொழுப்பு அவ்வாறு செய்வது இல்லை. அது பசியை ஒழிக்கும்.

அடுத்து உடல் கெடாசிஸ்(ketosis) எனும் நிலைக்கு செல்லும். உடலுக்கு ஆற்றல் கிடைக்க சர்க்கரை தான் மூலப்பொருள். அது உணவில் இல்லாததால் கொழுப்பை எரிக்க துவங்கும். கெடாசிசுக்கு உடல் சென்றால் உடலில் தேங்கி இருக்கும் கொழுப்பை எரிக்கும். நீங்கள் சாப்பிடும் வெண்னெயில் உள்ள கொழுப்பு உடலில் சேரவே சேராது. காரணம் உடலில் கொழுப்பு சேர உண்ணும் உணவில் கார்போஹைட்ரேட்டுகள் இருப்பது அவசியம். சர்க்கரை, கொழுப்பு இந்த இரண்டின் காம்பினேஷனும் தான் சாப்பிடும் உணவை கொழுப்பாக மாற்றி உடலில் தேக்குகிறது. சீஸ், வெண்னெயில் சர்க்கரை இல்லை என்பதால் அது கொழுப்பாக உடலில் தேஙக்வே தேங்காது. அதை உடல் எரித்தே ஆகவேன்டும்.

இதில் விந்தை என்னவெனில் கொழுப்பு மிகுந்த இந்த உணவு உடலில் உள்ள கொலஸ்டிராலை எரிக்க துவங்கும் என்பதுதான். காரணம் உங்கள் உடலுக்கு இப்போது கொழுப்புதான் எரிபொருள். உங்கள் உணவில் உள்ள கொழுப்பை அதனால் உடல் கொழுப்பாக மாற்ர முடியாது. அதனால் உடலில் உள்ல கொழுப்பை அது எரித்தே ஆகவேண்டும்.

எச்கிமோக்களை எடுத்துகொள்வோம். உணவில் துளி தானியம் இல்லை. மூன்று வேளையும் மாமிசம்தான் உண்கிறார்கள். உண்பது எல்லாம் சீல், வால்ரஸ், மீன் மாதிரி கொழுப்புமிகுந்த மாமிசம். ஆனால் அவர்களிடக்யே கொலஸ்டிரால், சர்க்கரை முதலிய வியாதிகள் இல்லை. காரணம் அவர்கள் உடலில் துளி தானியம் சேருவது இல்லை.

மூளை இயங்க குளுகோஸ் தேவை. தானியம் உண்னாவிடில் எப்படி குளுகோஸ் மூலைக்கு கிடைக்கும் என கேட்கலாம். தேவை இல்லை. கொழுப்பை எரித்து மூளைக்கு தேவையான எனெர்ஜியை உடல் அனுப்பும்.

அதனால் உடலுக்கு எதிரி கொழுப்பு அல்ல. சர்க்க்ரை,மாவுசத்து மிகுந்த உணவுகள் தான்.

மற்ரபடி நான் எழுதியது எக்ஸ்ட்ரீம் உதாரணம். மூன்றுவேளையும் அதற்காக வெண்னெய்யை உண்ன துவங்கவேண்டாம். நான் சொல்லவந்த பாயின்டை விளக்கவே அதை பயன்படுத்தினேன்:-)
 

2 comments:

கோவை நேரம் said...

கொழுப்பு குறையனுமா ...அப்போ மூணு வேளையும் நான் வெஜ் சாப்பிடனும் போல...

Unknown said...

அது ஒரு எக்ஸ்ட்ரீம் உதாரணம் என சொல்லிதான் கொடுத்தேன்:-). மூன்றுவேளை மாமிசம் மட்டுமே உண்ண முடிந்தால் (துளி தானியம், பால், காய்கறி,பழம்) இல்லாமல் இந்த ஃபார்முலா வேலை செய்யும். ஆனால் நார்சத்து (ஃபைபர்) கால்ஷியம் ஆகியவற்றுக்கு சப்ளிமெண்ட் உண்னவேன்டும். இதுபோக காய்கறிகளில் இருக்கும் மைக்ரோ நியூடிரியன்ஸ்ட்சை இழப்போம்.So this is something that I do not recommend and I do not follow. It was written for just argument sake

இந்த பதிவின் நோக்கம் மூன்று வேளையும் கொழுப்பு சாப்பிட வைப்பது அல்ல. முடிந்தவரை வெள்லை அரிசி மாதிரி தீட்டபட்ட தானியங்களை தவிர்க்க வைப்பதே:-)