Thursday, December 13, 2012

உணவும், இன்சுலின் சுரப்பும்

நவீன மனிதனின் ஆயுள் 1 லட்சம் ஆண்டுகளுக்கும் மேல் சென்றாலும், பரினாம வளர்ச்சியில் ஹோமோ சேபியன்ஸ் எனும் மனித குரங்கு இனம் பிறந்து 1.5 மில்லியன் ஆன்டுகள் ஆகிறது.

1.5 மில்லியன் ஆண்டுகளாக நம் உணவு மாமிசம் தான். அதில் புரதமும், கொழுப்பும் தான் அதிகம். தானியங்கள் சுமார் 8 அல்லது 10 ஆயிரம் ஆன்டுகளுக்கு முன்பு தான் அறிமுக ஆயின. ஆனால் 1.6 மில்லியன் ஆன்டுகளாக இருந்த பரிணாம வளர்ச்சி வெறும் 10,000 வருடங்களில் அறிமுகமான தானிய உணவிற்கு இன்னும் தன்னை போதுமான அளவு அட்ஜஸ்ட் செய்துகொள்ளவில்லை.

10,000 வருடங்களுக்கு முன்பு அறிமுகமான முழுதானியங்களையே இன்னும் சரிவர ஏற்காத மனித உடல் கடந்த 50, 60 ஆன்டுகளாக அறிமுக ஆகியுள்ள மில் தானியங்களை எப்படி ஏற்கும்? விளைவு அதிகரிக்கும் சர்க்கரை வியாதி, கொலஸ்டிரால் என உடல் ரியாக்ட் செய்கிறது.

தானியங்களை மட்டும் அடிப்படையாக கொன்ட உணவு இருக்கும்வரை வியாதிகளிலிருந்து விடுதலை அடைவது மிக சிரமம். அதிலும் தீட்டிய மில் தானியங்கள் நம் உணவில் இருப்பது கடும் கெடுதல். சாம்பிளுக்கு ஒரு இண்டெக்சை பார்ப்போம்.

சில உணவுகள் நம் உடலில் நுழைந்தவுடன் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கின்றன. இதில் உச்சகட்டமாக, உடனடியாக எரிந்து ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும் உணவு க்ளுகோஸ். க்ளுகோஸ் சாப்பிட்டவுடன் உடலில் புத்துணர்ச்சி ஏற்படுவது போன்ற உணர்வு நமக்கு இருக்கும். அதற்கு காரணம் இதுதான். ரத்தத்தில் சர்க்கரை ஏறியவுடன் உடல் சுறுசுறுப்பு அடையும். உடல் உடனே அதை ஜீரணிக்க இன்சுலினை அனுப்பும். இன்சுலின் சுரந்தவுடன் பசி எடுக்கும். மேலும் எதையாவது உண்னவேண்டும் போல் தோன்றும்.

ஆக க்ளுகோஸ் ரத்தத்தில் கரையும் விகிதம் 100 என்பதை மையமாக வைத்து க்ளைசெமிக் இண்டெக்ஸ் எனும் இண்டெக்ஸ் உருவாக்கபட்டது. 72 தாண்டி இதில் இருக்கும் உணவுகள் ஆபத்தானவை. 72க்கு எத்தனை கீழே எண்ணிக்கை இருக்கோ அத்தனைகந்தனை அந்த உணவு நல்லது. காரணம் அது மெதுவாக எரிந்து உடலுக்கு தேவியான எனெர்ஜியை அளிக்கும். இன்சுலின் சுரப்பின் தேவையை குறைக்கும். இது உடலுக்கு மிகவும் நன்மையளிக்கும் சமாச்சாரம். உடல் எடையும் கட்டுபாட்டில் இருக்கும்.

http://www.glycemicindex.com/

சில உணவுகளில் க்ளைசெமிக் இண்டெக்சை பார்க்கலாம்

க்ளுகோஸ் 100


உருளைகிழங்கு 80 முதல் 98 (வகையை பொறுத்து)
சர்க்கரை 84

ஆக சர்க்கரை, க்ளுகோஸ் ஆகியவற்றை உண்ணுவது நம் ரத்தத்தில் க்ளுகோஸ் சுரப்பை அதிகரிக்கும். இப்படி அதிகரிக்கும் க்ளுகோஸ் லெவெல்கள் உடலை வெலவெலத்து போக செய்யும். அதை குறைக்க உடனடியாக இன்சுலினை சுரக்கவேன்டியது கட்டாயம். ஒரு நாளுக்கு நாலைந்து தடவை இப்படி இன்சுலினை சுரந்தால் உடல் ஒரு கட்டத்தில் இன்சுலினை சுரக்கும் சக்தியை இழந்துவிடும். நாம் டைப் 2 டயலடிஸில் வீழ்வோம். அதன்பின் செயற்கையாக இன்சுலினை ஊசி மூலம் ஏற்றவேன்டியதுதான்.

அடுத்து நாம் உண்ணும் உணவுகளின் க்லைசெமிக் இன்டெக்சை பார்ப்போம்

தீட்டிய வெள்ளை அரிசி 89
வெள்ளை ரொட்டி 87
முழுகோதுமை ரொட்டி 77

ஆக நம்மில் பெரும்பாலானோர் உண்ணும் அரிசி, கோதுமை (முழு கோதுமையாக இருப்பினும்) ஆகியவை சர்க்கரையை விட அதிக வேகத்தில் நம் ரத்தத்தில் கரைந்து க்ளுகோஸ் லெவெலை ஏற்றும். சர்க்கரை வியாதியை அதிகரிக்க/வரவழைக்க வேன்டுமனால் அதற்கு குறுக்கு வழி சர்க்கரை தின்பது கூட அல்ல. அரிசியையும், ப்ரெட்டையும் உண்பதே.

ஆக "நான் குறைவாக தான் சாப்பிடுகிறேன். உடல் இளைக்கவில்லை" என சொல்லுகையில் அதற்கான காரணம் இதுதான்.

அரிசியும், ரொட்டியும் ஆகாது. அப்ப வேறு எதை உண்பது?

நம் முன்னோர் உண்ட உனவுகளாக தீட்டபடாத தானியங்கள் குறைவான க்ளைசெமிக் இன்டெக்சை கொன்டவை. அதனால் தான் கஞ்சியை குடித்துவிட்டு நாள் முழுக்க அவர்களால் உழைக்க முடிந்தது. ராகியின் க்லைசெமிக் இன்டெக்ஸ் 62. தீட்டபடாத அரிசியின் இண்டெக்ஸ் 48.

அதனால் முடிந்தவரை கம்பு, ராகி, கேழ்வரகு முதலிய தானியங்களுக்கு மாறுங்கள். இவற்றில் அழகாக இட்லி,தோசை செய்யலாம். சாம்பார், தயிருக்கும் ஏன் அசைவத்துக்கும் ஏற்றது. வெள்லை அரிசி எது எதற்கு பயன்படுதோ அது அனைத்துக்கும் இவற்றை பயன்படுத்தலாம். நம் முன்னோர்கள் அபப்டிதான் செய்தார்கள். கன்வீனியன்சுக்காக தானியங்களை தீட்ட துவங்கி நம் உடலை மிகவும் கெடுத்துகொன்டோம்.

என் ஆந்திர நண்பர் வீட்டுக்கு சென்றபோது ராகிகளியையும், மீன் குழம்பையும் உன்டுகொண்டு இருந்தார். ஞாயிறு மாமிசம் சாப்பிடுகையில் மீன் குழம்பும், ராகி களியும் சாப்பிடுவது அவர்கள் கிராமத்தில் வழக்கம் என்றார்.



இன்னொரு டிப்ஸ்: சுத்தமான தேனின் க்லைசெமிக் இன்டக்ஸ் 58. அதனால் டீயில் சர்க்கரைக்கு பதில் தேனை பயன்படுத்தலாம். சுவையும் நன்றாக உள்ளது.


2 comments:

rishi said...

தெரிந்தோ தெரியாமலோ இதைத்தான் நான் ஃபாலோ பண்ணிக்கொண்டிருக்கின்றேன். தேனைத்தான் சர்க்கரைக்குப் பதில் உபயோகிக்கின்றேன். பெரும்பாலும் காய்கறிகளை மட்டுமே அதிகமாய் அரிசிக்குப் பதிலாக உண்கின்றேன்.

Vignesh.vi said...

Now how you feel mr.rishi