மெல் கிப்சனின் மியூடினி ஆன் பவுண்டி பார்த்த நாளிலிருந்து பிட்கெர்ய்ன் தீவுகள் மேலான ஆர்வம் அதிகரித்து அவற்றை பற்றி படித்து கொண்டுள்ளேன்.
அதாவது மேற்கிந்திய தீவுகளின் இருக்கும் கருப்பின அடிமைகளுக்கு குறைந்த செலவிலான உணவு கொடுப்பது எப்படி என யோசித்து ப்ரிட்டிஷ் அரசு மண்டையை குழப்பி கொண்டது. அப்போது பசிபிக் கடலில் உள்ள டஹிட்டி எனும் தீவில் "பிரட் ப்ரூட்" எனப்படும் ரொட்டிப்பழம் கிடைப்பதாகவும் அந்த பழத்தை தின்றால் ரொட்டியை தின்பது போலவே இருக்கும் என்றும் அடிமைகளுக்கு அதை உணவாக கொடுக்கலாம் என்றும் ஆலோசனை சொல்லப்பட்டது.
கிபி 1787ம் ஆண்டு வாக்கில் ரொட்டிப்பழ செடிகளை தேடி எடுக்க டஹிட்டி தீவுக்கு பவுண்டி எனும் கப்பல் புறப்பட்டது. டஹிட்டி தீவில் பெண்கள் அப்சரஸ் மாதிரி இருந்ததாகவும், பாலியல் விஷயத்தில் அவர்கள் வெகு தாராளம் என்றும் ப்ரிட்டிஷ் மாலுமிகள் அந்த தீவுக்கு போய் இறங்கியதும் பஞ்சும் நெருப்பும் பற்றிகொன்டதாகவும் பவுன்டி படம் காட்டுகிறது. இறுதியில் ரொட்டியாவது, பழமாவது என போன வேலையை தூக்கி போட்டுவிட்டு டஹிட்டி தீவு மன்னர் மகளையே லெவல் செய்து கப்பலில் ஏற்றி ப்ளெட்சர் க்றிஸ்டியன் என்ற மாலுமியும் அவன் கூட மற்ற மாலுமிகளும் அவர்களது டஹிட்டி தீவு காதலிகளும் பவுன்டி கப்பலில் ஏறி தப்பி ஓடினர்.
சூரியன் அஸ்தமிக்காத ப்ரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் எங்கே போவது?எங்கே மறைவது? சிக்கினால் தூக்கு என்ற நிலையில் கப்பல் அதுநாள்வரை மனித நடமாட்டமே இல்லாத பிட்கெர்ன் தீவில் போய் இறங்கியது. பவுண்டி கப்பலை கொளுத்திபோட்டுவிட்டு ப்ளெட்சர் க்றிஸ்டியனும், மாலுமிகளும், அவர்கள் காதலிகளும் ஆக 25 பேர் அந்த சின்ன தீவில் ஒரு காதல் சம்ராஜ்ஜியத்தையே அமைத்துகொண்டு வாழ்ந்து வந்தனர்.
பல ஆன்டுகள் கழித்து அங்கே சென்ற ப்ரிட்டிஷ் கப்பல் ஒன்று ஆங்கிலம் பேசும் ஆதிவாசிகள் அங்கே வசிப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து, அதன்பின் முழு உண்மையும் வெளியே வந்து பிட்கெர்ய்ன் தீவுகளை அங்கீகரித்து அம்மக்களை தன் குடிமக்களாக ப்ரிட்டிஷ் சாம்ராஜ்ஜியம் ஏற்ரது.
பிட்கெர்ன் தீவில் இன்னும் ப்ளெட்சர் க்றிஸ்டியன் மற்றும் மாலுமிகளின் வம்சாவளியினரான 67 பேர் வசித்து வருகின்றனர். விமானம் எதுவும் அந்த தீவில் இறங்க முடியாது. ஆஸ்திரேலியாவிலிருந்து தென்னமெரிக்கா செல்லும் சரக்கு கப்பல்கள் வருடத்துக்கு நாலைந்து தடவை அங்கே நின்று செல்லும். அப்போது யாராவது அதில் பயணம் செய்ய அங்கே போனால் தான் உண்டு.
தீவில் கார் முதலிய வாகனம் எதுவும் இல்லை. தீவின் பரப்பளவு 40 ஏக்கர் தான் என்பதால் நடந்தே தீவை சுற்றி வந்துவிடலாம். டிவி இல்லை. ஆனால் எல்லாரும் நல்ல பெரிய வீடுகளை கட்டி, டிவிடி, சிடி என மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். அந்த தீவில் மூலிகைகள் நிறைய வளர்வதால் அந்த மலர்களில் இருந்து கிடைக்கும் தேனுக்கு ஒப்பானது உலகில் எதுவும் இல்லை என சொல்லப்படுவதால் தேன் வியாபாரம் அங்கே அமோகமாக நடக்கிறது.
அந்த ஊர் மக்கள் உலக செய்திகள் எதையும் பார்ப்பது இல்லை.." இங்கே இருந்துகொண்டு அங்கே சண்டை, இங்கே யுத்தம், கலவரம் என படித்து கொண்டு இருப்பதால் என்ன பயன்?இங்கே இருந்துகொண்டு எதையும் செய்ய முடியாது. எங்கள் மன அமைதியை ஏன் கெடுத்துகொள்ள வேண்டும்" என கேட்கிறார்கள். தீவில் இருப்பவர்களுக்குள்லேயே கல்யானம் செய்து கொள்கிறார்கள். வெளியே இருந்து யாரும் அதிகமாக அங்கே குடியேற விரும்புவது இல்லை.
பின் குறிப்பு: மறுபடி ஒரு கப்பல் அனுப்பி ப்ரெட்ப்ரூட் பழத்தை ப்ரிட்டிஷார் மேற்கிந்திய தீவுகளுக்கு கொண்டுபோய் பயிரிட்டும் விட்டார்கள்.ஆனால் அடிமைகள் அதை சாப்பிட மறுத்துவிட்டதால் அந்த முயர்சி வீணாபோனது. ப்ரெட்ப்ரூட் என்பதை பின்னாளில் ப்ரிட்டிஷார் இந்தியாவுக்கு கொன்டுவந்து கேரளாவில் கூட பயிரிட்டார்கள். சீமையில் இருந்து வந்த அந்த பழம் இன்னும் சீம சக்கா என்ற பெயரில் கேரளாவில் கிடைக்கிறது
பிட்கெர்ன் தீவு செல்ல விரும்புபவர்களுக்கு உதவும் தளம். போகபோவது இல்லைனாலும் படிச்சு பாருங்க. சுவாரசியமா இருக்கும்
பிட்கெர்ன் தீவில் ஓட்டல் எதுவும் இல்லை. அங்கே உள்ளவர்கள் வீடுகளில் பேயிங் கெஸ்டாக தங்கிகொள்ளலாம். அதில் ஒரு வீட்டின் வாடகை விவரம்
2 comments:
நல்ல தகவல் அறியாதது.
ஒரு சினிமா விமர்சனம் போல் சொல்லியிருக்கிறீர்கள்
Thanks Chittukuruvi
Post a Comment