Monday, October 22, 2012

நாம் எல்லாரும் ஏலியன்கள், மார்ஸியர்கள்!


சயன்ஸ் சானலில் பார்த்த "ப்ளானட்ஸ்- லைஃப்" எனும் டாக்குமென்டரியை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்

செவ்வாய், பூமி மற்றும் வீனஸ் ஆகிய மூன்றும் பல்வேறு காலகட்டங்களில் நீர், சமுத்திரம் ஆகியவற்றால் நிரம்பி இருந்ததாக ஒரு தியரி உன்டு. இவற்றில் வீனஸ் இப்போது மனிதனால் கால் வைக்க இயலாத கிரகம். காரணம் அதன் உயர்வெப்பம். 900 டிகிரி செல்சியசுக்கும் அதிகமான வெப்பம் அங்கே இருப்பதால் உங்கள் வீட்டு அடுப்பை பற்ற வைத்து அதன் மேல் ஏறி அமர்ந்தால் அது வீனசை விட குளிர்ச்சியாக இருக்கும் என்றால் பார்த்துகொள்ளுங்கள். அதனால் வீனசை ஆராய்வது இப்போதைக்கு சாத்தியமில்லை. ஆனால் மார்ஸ் கதையே வேறு!!!

மார்ஸ் ஒப்பீட்டளவில் பூமிக்கு சமமான கிரகம். மார்ஸின் சராசரி வெப்ப நிலை மைனஸ் நூறு டிகிரி என்றாலும் மார்ஸின் சில பகுதிகளில் தற்போதைய இங்கிலாந்து வெப்ப நிலைக்கு சமமான 40 டிகிரி பாரந்கீட் வெப்பம் காணப்படும். அதனால் மார்ஸில் ஏலியன் உயிர்கள் இருக்கலாம் என்ற பலமான நம்பிக்கை/ எதிர்பார்ப்பு 70களில் விஞ்ஞானிகளிடம் நிலவியது.

70களில் இரன்டு வைகிங் லான்டர்களை நாசா மார்சுக்கு அனுப்பி வைத்தது. அவை மார்ஸில் உள்ள மண்ணை ஆய்வு செய்தன. மண்ணில் பாக்டீரியா இருந்தால் அந்த மண்ணில் இருந்து என்ன விதமான வாய்யுக்கள் வருமோ அத்தகைய வாயு அந்த மார்ஸ் மண்ணில் இருப்பதாக வைகிங் லான்டர் பரிசோதனை தெரிவித்தது!!!

சோதனை முடிவு வந்ததும் நாசா விஞ்ஞானிகள் பெரும் வியப்பு அடைந்தனர். மார்ஸில் ஏலியன் பாக்டீரியாக்கள் இருப்பதாக கண்டுபிடிக்கபட்டதாக பலர் நம்பினர். ஆனால் அதை பகிரங்கமாக அறிவிக்குமுன் அதை மேலும் சில சோதனைகள் மூலம் உறுதிபடுத்த முனைந்தனர். மார்ஸ் மண்ணில் உயிரினங்கள் இருந்தால் அந்த மண்ணில் சில ஆர்கானிக் கெம்மிக்கல்கள் இருக்கவேண்டும். மார்ஸ் மண்ணில் அப்படி ஏதுவும் கெமிக்கல்கள் உள்ளனவா என பரிசோதித்தனர். ரிசல்டுகள் நெகடிவ் ஆக வந்தன. மார்ஸ் மண் மிகவும் நச்சுதன்மை வாய்ந்தது எனவும் அந்த மண்ணில் எந்த உயிரினமும் வாழ முடியாது எனவும் கண்டுபிடிக்கபட்டது. அதனால் முதலில் வந்த பரிசோதனை ரிசல்டுகள் தவறு எனமுடிவுகட்டி "மார்ஸில் ஏலியன் உயிர்" என்ற கான்செப்டுக்கு விஞ்ஞானிகள் முற்றுப்புள்ளீ வைத்தனர்.

அதன்பின் பல ஆன்டுகள் கழித்து  "மார்ஸில் ஏலியன் உயிர்" என்பதற்கு புதிய விளக்கங்கள் எழுந்தன. பூமியில் சூரிய வெளிச்சமே படாத மரினா டிரெஞ்ச் எனும் பூமியின் மிக ஆழமான கடல் பகுதியிலும் உயிர்கள் வாழ்வதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். பூமிக்கு 11 மைல் ஆழத்தில் சூரிய வெளிச்சமே படாத நிலபப்ரப்பில் உயிர்கள் வாழமுடியுமனால் மார்ஸின் அடிபகுதியில் உயிர்கள் ஏன் தப்பி பிழைத்திருக்க கூடாது?நாம் மார்ஸின் மேற்பரப்பை தானே ஆராய்ந்தோம்?அடிப்பரப்பை ஆராயவில்லையே?

இந்த சந்தேகதீயை மேலும் கொழுந்து விட்டெரிய செய்தது முன்பு நிகழ்ந்த இன்னொரு விபத்து. 1967- 1970ம் ஆன்டு நடந்த ஒரு சம்பவம் அது. 1967ல் நிலவில் இறங்கிய சர்வேயர் எனும் விண்கலத்தில் ஒரு காமிரா பொருத்தபட்டிருந்தது. அந்த காமிராஐ மூன்று ஆண்டுகள் கழித்து 1970ல் நிலவுக்கு சென்ற அப்பொலோ 12 அமெரிக்க அஸ்ட்ரனாட்டுகள் பூமிக்கு திரும்ப கொன்டுவந்தனர். அந்த காமிராவை ஆராய்ந்ததில் மிகபெரிய விஞ்ஞான அதிசயம் ஒன்று காணப்பட்டது!!!

அதாவது 1967ல் அந்த காமிராவை நிலவுக்கு அனுப்புகையில் அதை இன்ஸ்டால் செய்த தொழிலாளிக்கு சளி பிடித்து இருந்ததால் அவர் அந்த காமிரா மேல் பலமாக தும்மி விட்டார். அந்த தும்மலில் இருந்த சளியில் இருந்து பாக்டிரியாக்கள் காமிரா லென்ஸ் மேல் படர்ந்துவிட்டன. அவை நிலவுக்கும் கொன்டு செல்லபட்டு அங்கே மூன்று ஆண்டுகளை கழித்துவிட்டு பூமிக்கும் திரு8ம்பி வந்தன.

பூமிக்கு வந்த லென்ஸை ஆரய்ந்ததில் அதில் பாக்டிரியாக்கள் இருப்பது கன்டுபிடிக்கபட்டது. அத்துடன் விஞ்ஞானிகளுக்கு பேரதிர்ச்சி அளிக்கும் வகையில் அந்த பாக்டிரியாக்கள் உயிருடன் இருந்தன. பூமிக்கு வந்ததும் மறுபடி அவை இயல்பாக செயல்பட துவங்கின. ஆக காற்று,நீர், எதுவுமற்ற நிலவில் கடும் ரேடியேஷன் தாக்குதல்களுக்கு மத்தியில் மூன்று வருடங்கள் பாக்டிரியாக்கள் உயிருடன் இருந்துள்லன என்பது அறிவியல் உலகில் பரபரப்பை தோற்றுவித்தது. உயிர் என்பது எத்தகைய சூழல்களை தாங்கி தப்பி பிழைக்கும் என்பதன் எல்லைகளை இந்த விபத்து விரிவாக்கியது.

90களில் க்ரீன்லாந்தில் கிடைத்த பாறைபடிமங்களை ஆராய்ந்த விஞ்ஞானிகள் மிகபெரும் அதிர்ச்சி அளிக்கும் கன்டுபிடிப்பை வெளியிட்டனர். அதாவது பூமி தோன்றிய 3.9 பில்லியன் ஆண்டுகள் பழமையான பாறைபடிமங்கள் க்ரீன்லாந்தில் கிடைத்தன. அதை ஆராய்ந்ததில் 3.8 பில்லியன் ஆண்டுகள் பழமையான உயிர்கள் இருந்ததன் சுவடுகள் தெரிந்தன.

Inline image 1

3.8 பில்லியன் ஆண்டு பழமையான பாறைபடிமங்கள்

3.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே பூமியில் உயிர்கள் தோன்றின என தெரிந்ததும் விஞ்ஞானிகள் அதிர்ச்சி அடைந்தனர். உயிர்களின் தோற்றம் கிட்டத்டக்ட்ட உலகின் வயதுக்கு ஒப்பான தொன்மை வாய்ந்த விஷயம் என்பதை விஞ்ஞானிகளால் ஜீரணிக்க இயலவில்லை. 3.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நிலவே இன்னும் தோன்றவில்லை. பூமியில் சமுத்திரங்கள் உருவாகவில்லை, பூமி தற்போதைய வீனசுக்கு சமமாக கொதித்து, கொந்தளித்து எரிமலைகுழம்புகளுடன் காணப்பட்து. அப்போதைய பூமி இப்போது பல ஏலியன் கிரகங்கள் இருக்கும் சூழலில் தான் இருந்தது. ஆனால் அப்போதே உயிர்கள் பூமியின் வாழ்ந்துள்ளன என்றால்......

என்றால் ஏன் மார்ஸிலும், செவ்வாயிலும் உயிர்கள் தோன்றி இருக்க கூடாது? மார்ஸிலும், வீனஸிலும் முன்பு நதிகள், நீர்நிலைகள்,குளங்கள்,சமுத்திரங்கள் இருந்துள்ளன. அறிவியல் உலகில் ஏலியன் உயிர்களுக்கான தேடல் என்பது திரவ நிலையில் இருக்கும் நீருக்கான தேடல் என்பதாக மாற்ரம் பெற்றுவிட்டிருந்தது. திரவ நிலையில் நீர் எங்கே கன்டுபிடிக்கபடுகிறதோ அங்கே உயிர்கள் இருக்கலாம் என்பது விதி!!!மார்ஸில் திரவநிலை நீர் இருந்துள்ளது உறுதி. ஆக அங்கே உயிர்கள் இருந்ததும் உறுதியா?????

இதற்கான எவிடென்ஸ் வியப்ப்ட்டூம் வகையில் பூமியிலேயே கிடைத்தது. எரிகல் ஒன்றை ஆராய்ந்த விஞ்ஞானிகள் அது செவ்வாயிலிருந்து பூமிக்கு வந்த எரிகல் என்பதை கன்டுபிடித்தனர். எரிகற்கள் எங்கு இருந்தும் பூமிக்கு வந்திருக்கலாம். ஆனால் இந்த எரிகல்லில் சிறைபட்டிருந்த வாயு செவ்வாயில் இருந்து வைகிங் லான்டர் ஆய்வு செய்த வாய்வுக்கு சமமாக இருந்ததால் இது செவ்வாயின் கல் என்பதை கண்டுபிடித்தனர்.


Inline image 2

சமுத்திரங்களுடன் மார்ஸ்..சுமார் 4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு

அப்போதைய பூமி 4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு

Inline image 3
முன்பு செவ்வாயில் கடல்களு, சமுத்திரங்களும் இருந்து உயிர்கள் தோன்றின.அப்போது பூமி இப்போதைய வீனஸ் மாதிரி கொதி நிலையில் இருந்தது. அப்போது செவ்வாயில் மோதிய விண்கல் ஒன்று செவ்வாய் நிலபராஇ பேர்தெடுத்து விண்வெளியில் வீசியது. அதில் ஒரு கல் அதில் உள்ல நுண்ணுயிரியுடன் பூமியில் வந்து விழுந்து பூமியில் உயிரின் பரவலை துவக்கி வைத்தது.

விண்வெளியில் உயிர்கள் தப்பி பிழைக்க குடியும்.பல்லாண்டுகள் வாழமுடியும் என்பதை நிலவுக்கு போன பாக்டிரியாக்கள் வரலாறு உறுதிபடுத்துகிறது.ஆக இந்த தியரிபடி

1) உயிர் தோன்றியது மார்ஸில்.அங்கிருந்து விண்கற்கள் மூலம் அது பூமிக்கு 3.8 பில்லியன் ஆன்டுக்கு முன்பு வந்தது.

2) ஒரு காலகட்டத்தில் மார்ஸ் அழிந்தது.ஆனால் மார்ஸின் உயிர் வித்துக்கள் பூமியில் விழுந்து உயிரின் பரவலை உறுதிபடுத்தின. ஆக நாம் எல்லாரும் ஏலியன்கள், மார்ஸியர்கள்!!!!

நம் தாய்மண்னான மார்ஸ் கிரகத்துக்கு அனைவரும் நன்றி சொல்வோம். தாய்மண்ணுக்கு திரும்பவும் குடியேற ஆய்வுகளை நடத்துவோம். என்ன சொல்கிறீர்கள்?:-)

No comments: