செவ்வாய் செல்வதை பற்றி மீண்டும் ஒரு டாகுமெண்டரியை நேற்று சயன்ஸ் சானலில் பார்த்தேன். முன்பே இது பற்றி கட்டுரை எழுதி உள்ளேன். இருப்பினும் இது வேறு டாகுமெண்டரி, அதனால் வேறு பல சுவையான செய்திகள் கிடைத்தன.
அதாவது செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் டெக்னாலஜி தற்போதைய மனித இனத்திடம் இல்லை. ஆனால் இந்த நூற்ராண்டு முடிவதற்குள் அது சாத்தியமாக கூடும் என எதிர்பார்க்கிறார்கள். காரணம் என்னவெனில்
1) செவ்வாய்க்கு மனிதனை ஏற்றி செல்லும் ராக்கெட்டே எந்த நாட்டிடமும் இல்லை. அப்படி ஒரு ராக்கெட்டை தயார் செய்வதே சிரமம் என்கின்றனர். காரணம் செவ்வாய்க்கு ஆறு பேர் அடங்கிய டீமை அனுப்ப குறைந்தது 520,000 கிலோ எடையுள்ள பொருட்களை ஏற்றி செல்லும் ராக்கெட்டுகள் தேவைபடுமாம். நம்மிடம் தற்போது 120 டன் எடையை மட்டுமே விண்ணில் அனுப்பும் சக்தி வாய்ந்த ராக்கெட்டுகள் உள்ளன. அ
ஆறு ராக்கெட்டுகளை ஏவி இந்த பிரச்சனையை தீர்க்கலாம் என ஒரு ஐடியா உள்ளது. விண்ணில் ஒரு மிகபெரும் ஸ்பேஸ் ஸ்டேஷனை நிறுவி அங்கிருந்து ராக்கெட்டை அனுப்பலாம் எனவும் ஒரு ஐடியா உள்ளது. ஆனால் விண்ணில் இருந்து ராக்கெட்டை லாஞ்ச் செய்யும் டெக்னாலஜி மனிதனிடம் இதுவரை இல்லை.
நிலவில் கிராவிட்டி குறைவு என்பதால் நிலவில் காலனி அமைத்து அங்கிருந்து ராக்கெட்டை அனுப்பும் தீர்வும் உள்ளது. ஆனால் இவை எதுவுமே தற்போது சாத்தியமாகும் வாய்ப்பு இல்லை.
நாசாவில் இதற்கு பிராக்டிகலான தீர்வு ஒன்று முன்மொழிய படுகிறது. அதாவது பெட்ரோல் மாதிரி திரவ எரிபொருளை ராக்கெட்டில் நிரப்பி அனுப்புகையில் அந்த எரிபொருளே மிக பெரும் எடையை ராக்கெட்டுக்கு அளிக்கிறது. சுமார் 12 லட்சம் லிட்டர் எரிபொருள் ஒரு ராக்கெட் லாஞ்சுக்கு தேவைபடுகிறது. இதற்கு பதில் அணுசக்தியை பயன்படுத்தினால் எடுத்து செல்லவேன்டிய எரிபொருளின் எடை பல மடங்கு குறையும் என்பதுடன் செவ்வாய்க்கு செல்லும் வேகமும் அதிகரித்து 18 மாத பயணம் 1 வருட பயணமாக குறையலாம்.
அடுத்து ராக்கெட்டை எப்போது அனுப்புவது என்பதிலும் கணிதவியல் ரீதியாக பிரச்சனை உள்ளது. அதாவது செவ்வாயும் சூரியனை சுற்றுகிறது, பூமியும் சுற்றுகிறது. 18 மாதங்களுக்கு ஒரு முறை செவ்வாய் பூமியை மிக நெருங்கி வருகிறது. அப்போது செவ்வாயில் லேண்ட் ஆவது போல் ராக்கெட்டை அனுப்பினால் எரிபொருள் செலவு பலமடங்கு மிச்சமாகும். ஆனால் இதில் சிக்கல் என்னவெனில் மீண்டும் அந்த குழுவினர் பூமிக்கு திரும்ப 18 மாதம் செவ்வாயில் காத்திருக்க வேண்டும் என்பதே.
18 மாதம் செவ்வாயில், ஒன்றரை முதல் இரண்டு வருட ஒன்வே பயண தூரம் என இது ஏழு வருட புராஜக்ட். இதற்கு முன்மொழியபடும் இன்னொரு திட்டம் என்னவெனில் வீனஸ் கிரகத்துக்கு ராக்கெடை அனுப்பி வீனஸின் கிராவிட்டியை வைத்து ராக்கெட்டை வேகமாக நகர்த்துவது என்பது. ஆனால் கரணம் தப்பினால் மரணம் என்பது மாதிரி திட்டம் இது.
விஞ்ஞானிகளை மிரள வைக்கும் இன்னொரு விஷயம் எடையின்மை. மிர் ஸ்பேஸ் ஸ்டேஷனில் எடையற்ற விண்வெளியில் ஆறு மாதம் இருந்த அஸ்ட்ரனாட்டுகள் பெருமளவு சதை,எலும்பு, வலு ஆகியவற்றை இழந்தனர். செவ்வாய் கிரக பயணத்தின் முடிவில் பூமிக்கு திரும்பும் எந்த அஸ்ட்ரநாட்டும் 90 வயது கிழவரின் எலும்புகளின் வலிமையையே பெற்றிருப்பார். அவர் எலும்புகள் மிக வீக் ஆகிவிடும். அழுத்தமாக ஒரு அடியை பூமியில் வைத்தாலும் எலும்பு முறிவு நிச்சயம்.
இதற்கு ஒரு குரூரமான தீர்வு முன்மொழியபடுகிறது. அதாவது 75,80 வயதான விண்வெளிவீரர்களை ஒருவழிபயணமாக மட்டுமே செவ்வாய்க்கு அனுப்புவது!!! திரரிடிகலாக அவர்கள் இருவழிபயணமாக தான் கிளம்புவார்கள். ஆனால் எலும்பு இழப்பு அவர்களை திரும்பி வர இயலாமல் செவ்வாயிலேயே மரணமடைய வைத்துவிடும். செவ்வாயில் இருக்கும் காலம் எல்லாம் அவர்கள் அங்கே ஒரு விண்வெளி நிலையத்தை அமைப்பதில் செலவிடுவார்கள். அப்போது மற்ற விண்வெளீவீரர்களின் பயணம் எளிமை ஆகும்.
ஆக மொத்தத்தில் செவ்வாய் பயணம் என்பது நிலவுக்கு மனிதன் சென்றதை விட 2000 மடங்கு தொலைவான பயணம் என்பதுடன் 2000 மடங்கு கடினமான விஷயமும் கூட. இன்றைய தலைமுறையிடம் அதை சாத்தியமாக்கும் டெக்னாலஜி இல்லை. பின்னாளைய தலைமுறையிடம் இருக்கலாம். ஆனால் அது தேவைபடாது என கூறுவோரும் உள்ளனர். காரணம் மனிதனை அனுப்புவதை விட ரோபாட்டை அனுப்புவது எளிது, குறைந்த செலவு பிடிக்கும் விஷயம் என்பதே. மார்ஸில் நாசாவின் கியூரியாசிட்டி ரோபோ இறங்கி ஜம் என வேலை செய்து கொன்டு உள்ளது. இனி மனிதனை அனுப்பி புதிதாக எதை கண்டுபிடிக்க போகிறோம்?
2 comments:
குரூரமான தீர்வு - திகைக்க வைத்தது...
நல்ல அலசல்... விளக்கமாக தகவல்கள்...
நன்றி...
Thanks dhanabalan
Post a Comment