Monday, October 01, 2012

ஆரோக்கியம் & நல்வாழ்வு- தேங்காய் எண்ணெய்:



தேங்காய் எண்ணெய்:

மருத்துவர்கள், அமெரிக்க எப்டிஏ, உடல் நலம் குறித்த பத்திரிக்கைகள் அனைவரும் தேங்காய் எண்ணெய் என்றால் காததூரம் ஓடுவார்கள். இதயநோயாளிகள் தேங்காய் எண்ணெய் என்ற பெயரை கேட்டாலே அதிர்ச்சி அடைவார்கள். அப்பேர்ப்பட்ட வில்லனின் நிலை தேங்காய் எண்னெய்க்கு வர காரனம் அதில் உள்ல சேச்சுரேட்டட் ஃபாட் எனப்படும் கொழுப்பே ஆகும். ஆனால் உண்மை என்ன?

தேங்காய் எண்ணெயை போன்ற இதயத்துக்கு நலம் புரியும் எண்னெய் வேறு எதுவுமே இல்லை என்பது தான் ஆச்சரியமளிக்கும் உண்மை.உடனே தேங்காய் எண்னெயை போட்டு சமைக்க ஆரம்பிக்க வேன்டாம். முழு கட்டுரையையும் நிதானமாக படிக்கவும்:-)

அதாவது ஆசிய,பசிபிக் பகுதிகளில் வாழும் மக்களை ஆராய்ந்தவர்கள் அனைவரும் அவர்கள் தேங்காயையும், தேங்காய் எண்னெயையும் அதிக அளவில் உட்கொள்வதை கண்டுபிடித்தனர். ஆனால் இதனால் எல்லாம் அவர்கள் குண்டோதரர்களாக இருக்கவில்லை. தேங்காய் மற்றும் அதன் எண்ணேய் சாப்பிட்டதால் ஸ்லிம் ஆகவும், இதயம் மிக வலுவுடனும் ஆரோக்கியத்துடனும் அவர்கள் இருப்பதை கன்டனர்.

தேங்காய் எண்ணெயில் சாச்சுரேட்டட் கொழுப்பு இருப்பது உண்மை. ஆனால் எல்லா சாச்சுரேட்டட் கொழுப்பும் மோசம் அல்ல. தேங்காய் எண்ணெயில் உள்ல லாரிக் ஆசிட் எனும் கொழுப்பு மனிதனுக்கு கிடைக்க கூடிய உணவு பொருள் தேங்காய் எண்னெய்யை தவிர்த்து ஒன்றே ஒன்றுதான்.- தாய்ப்பால். பாலூட்டும் தாய்மார்கள் தேங்காய் எண்னெயை உட்கொன்டால் அவர்கள் தாய்ப்பாலில் லாரிக் ஆசிட் மூன்று மடங்கு அதிகம் சுரப்பதாக ஆவ்ய்வுகள் கூறுகின்றன. அத்துடன் பால்குடிக்கும் குழந்தைக்கு பாதுகாப்பளிக்கும் ஆன்டிமைக்ரோபியல்களும் இதனால் அதிகம் தாய்ப்பாலில் சுரக்கின்றன

தேங்காய் எண்னெயில் உள்ல கொழுப்பு இதயத்துக்கு நல்லது எனும் ஆச்சரியபடதக்க உண்மை பல ஆய்வுகளில் வெளிவந்துள்ளன. தேங்காய் எண்னெயில் உள்ல கொழுப்பு மீடியம் செயின் ட்ரைக்ளிசரைட் என்ற வகையை சார்ந்தது. இது இதயத்துக்கு மிக நல்லது. தைராய்டு சுரப்பிகளை வலுவாக்கும் சக்தி தேங்காய் எண்னெய்க்கு உன்டு. உசலின் ஒட்டுமொத்த மெடபாலிசத்தையே இது அதிகரித்து கலோரிகளை அதிக அளவில் எரிக்கும். தேங்காய் எண்னெயில் உள்ல கொழுப்பு உடலில் கொழுப்பாக சேர்வது இல்லை. உடனே அதி எரிக்கபட்டு விடுகிறது.

குளிர்பகுதிகளில் இருப்பவர்கள் உலர்ந்த சருமம் எனும் சிக்கலில் அவதிபடுவார்கள். இதற்கு கிரீம்களை பூசுவதை விட தேங்காய் எண்னெயை தடவி வந்தாலே போதும். தோலுக்கு மிக நன்மை அளித்து, வயதாவதையும் சுருக்கம் விழுவதையும் தடுக்கும். தலைக்கு தேங்காய் எண்னெயை தடவி வந்தால் முடிக்கு மிகவும் நல்லது என்பதை இந்தியர்களுக்கு சொல்ல வேன்டியதில்லை.

1940ல் தேங்காய் எண்னெயை தின்றால் குன்டோதரர்கள் ஆகிவிடுவோம் என பிரச்சாரம் நடந்ததை நம்பி பல விவசாயிகள் தம் மாடுகளை குண்டாக்க வேன்டி அவற்றுக்கு தேங்காய் எண்னெயை அளித்தனர். ஆனால் விளைவுகள் நேர்மாறாக இருந்தன. மாடுகள் குண்டாவதற்கு பதில் இளைத்தது மட்டும் இன்றி அவற்றுக்கு பசியும் எடுத்து, நல்ல ஆக்டிவ் ஆகவும் இருந்தன.

தேங்காய் எண்ணெய் வாங்க கடைக்கு கிளம்பியாச்சா? வேன்டாம். காரணம் கடையில் விற்கும் பாட்டிலில் அடைத்த தேங்காய் எண்ணெய் ஹைட்ரஜெனேட்டட் தேங்காய் எண்னெய் எனும் வகையை சேர்ந்தது. ஷெல்ஃபில் இவை கெடாமல் இருக்கவேண்டும் என்பதற்காக இவற்ரை ஹைட்ரஜன்நேட் செய்கிறார்கள். இதனால் இதுமுழுக்க டிரான்ஸ்ஃபேட் எனும் கொழுப்பு சேர்ந்து உடலுக்கு கெடுதலை விளைவிக்கிறது.இவற்றை வைத்து நடந்த ஆய்வுகளால் தான் தேங்காய் எண்னெயின் பெயர் மிகவும் கெட்டுவிட்டது.

அபப்டியானால் நல்ல தேங்காய் எண்னெய் என்பது எது? எக்ஸ்ட்ரா விர்ஜின் கோகநட் ஆயில் எனப்படும் இயற்கையான தேங்காய் எண்னெய்தான் இத்தனை நன்மைகளையும் அளிக்க கூடியது. அது என்னவெனில் பாரம்பரியமான முறையில் ஆயிரம், ஆயிரம் வருடமாக செக்கில் ஆட்டி இயற்கையாக எடுக்கபட்டு வந்த தேங்காய் எண்ணெய்தான். அப்படி இயற்கையான தேங்காய் எண்னெய் தமிழ்நாட்டு கிராமங்களில் கிடைத்தால் வாங்கி பயன்படுத்தவும். அதிலும் முடிந்தவரை சமைக்காமல் அப்படியே சாலட் போன்ரவற்றின் மேல் ஊற்றி பயன்படுத்துவது இன்னும் நல்லது. அப்படிப்படட் எண்ணெய் கிடைக்கவில்லை எனில் தேங்காய் துண்டுகள் சிலவற்றை அடிக்கடி உண்டு வாருங்கள். அதற்கு என மிக அதிக அளவில் உட்கொள்ல வேன்டாம். பஜ்ஜி,போன்டா மாதிரி கொழுப்புக்களை உண்பதற்கு பதில் ஒரு சில தேங்காய் துன்டுகளை உண்ணலாம்.

Thanks

http://www.huffingtonpost.com/dr-mercola/coconut-oil-benefits_b_821453.html

http://www.tropicaltraditions.com/what_is_virgin_coconut_oil.htm

http://www.susunweed.com/herbal_ezine/July11/nourish-yourself.htm




1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

கடையில் கிடைக்கும் தேங்காய் எண்ணெய் பற்றிய விளக்கத்திற்கு நன்றி...

என்னைப் பொறுத்தவரை :

சர்க்கரை குறைபாடு உள்ளவர்கள் தலையில் தேய்ப்பதோடு, மற்றவற்றை மறந்து விட்டால் நல்லது... இல்லையெனில், சர்க்கரை குறைபாடில் இந்தியா முதலிடம் வரலாம்...