Wednesday, September 26, 2012

ஆரோக்கியம் & நல்வாழ்வு

ரீந்தர் சிங் குமான்

பஞ்சாபை சேர்ந்தவர். நடிகர். மிஸ்டர் இந்தியா பட்டம் வென்றவர். உலக அரங்கில் பாடிபில்டிங் துறையில் நுழைய முயற்சி எடுத்து அதில் ஓரளவு வெற்றியும் பெற்று வருகிறார். ஆஸ்திரேலியன் கிராண்ட் ப்ரியில் ஒன்பதாவது இடம் பெற்றுள்ளார்.

சினிமாவில் சம்பாதிக்கும் காசை வருமானம் அற்ற பாடிபில்டிங் துறையில் செலவு செய்து வரும் இவர் மாதிரி பிரபலங்களால் தான் நமக்கு இம்மாதிரி துறைகளில் கொஞ்சம் ஈடுபாடு அதிகரிக்கும். அமெரிக்காவில் 70களில் பாடிபில்டிங் இப்படிதான் இருந்தது. அர்னால்டும், சில்வஸ்டர் ஸ்டாலனும் திரைப்படங்களில் புகழ் பெற துவங்கியதும் அந்த துறை பக்கம் அமெரிக்க இளைஞர்கள் கவனத்தை திருப்பினார்கள். அதன்பின் சிக்ஸ் பேக் இருந்தால் தான் அமெரிக்க படங்களில் ஹீரோவாக முடியும் என்ற நிலை எல்லாம் ஒரு காலத்தில்.

குமான் பஞ்சாப் படங்களில் நடித்து புகழ் பெற்று இப்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார். இவரை கலிபோர்னியாவில் நேரில் சந்தித்த இவரது ஆதர்ச நாயகர் அர்னால்டு சுவார்சனேகர் இவர் சைவர் என்பதை அறிந்து மிக வியப்படைந்தார்.
 
வரிந்தரின் உயரம் ஆறு அடி இரண்டு அங்குலம். எடை 136 கிலோ

Inline image 1
 
Inline image 2
--


--

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

யம்மாடி...

பகிர்வுக்கு நன்றி...