Thursday, May 10, 2012

டைனசார் குசு விட்டதால் புவிவெப்பமயம் உண்டானது



---------- Forwarded message ----------
டைனசார் குசு விட்டதால் புவி வெப்பமயம் உண்டாக்கி டைனசார்கள் அழிந்தன

என்ன சிரிக்கிறீர்கள்? இது சிரிக்கும் விஷயம் அல்ல. புவிவெப்பமய ஜோக்கர்கள் சீரியசாக அறிவியல் ஜர்னல்களில் விவாதிக்கும் விஷயம் இது.

இங்கிலாந்தின் ஜான் மூர் பல்கலைக்ழக பேராசிரியர்கள் நடத்திய ஆய்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. இது கரண்ட் பயாலஜி எனும் ஜர்னலில் பதிப்பிக்கபட்டுள்ளது

இந்த ஆய்வறிக்கையில் டைனசார்கள் குசு விட்டதில் 57 கோடி டன் மீதேன் வாயு வெளியானதாக கணித்துள்ளனர். இது இன்றைய ஆடு,மாடு முதலிய அனைத்து வளர்ப்புபிராணிகளும் விடும் குசுவில் உள்ள மீதேன் எண்ணிக்கைக்கு சமமாம்.

அதிலும் சாராபோட் எனும் டைனசாரின் குசுவில் மீதேன் மிக அதிகமாம். மிக பெரிய சைசில் மரத்தின் உச்சியில் உள்ல இலைகளை தின்னும் அளவு வளர்ந்திருந்த இந்த சாராபோட் மிக அதிக நேரம் உணவை உடலில் தேக்கி வைத்திருந்ததால் குசுவை டன் கணக்கில் விட்டு தள்ளும், அதில் ஏராளமான மீதேன் வரும் என சீரியசாக கணிக்கிறது இந்த ஆய்வு.

அதிலும் இந்த சாராபேட் சனியன் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றி கடைசி டைனசார் அழியும் 65 மில்லியனாவது ஆண்டுவரை இருந்ததால் அது எண்ணிக்கையில் அடக்க இயலாத அளவு குசுவிட்டு புவிவெப்பமயம் வந்து டைனசார்கள் அழிந்தன என கட்டுரை கூறுகிறது.

-------------

இந்த டைனசார்கள் கம்மியாக குசுவிட்டு புவிவெப்பமயத்தை கட்டுக்குள் கொண்டு வந்திருக்கலாம். கிறுக்கு டைனசார்கள் குசுவிட்டே அழிந்துபோயுள்ளன!!!

இதுமாதிரி கட்டுரைகள் வெறுமனே சிரித்து விட்டு ஒதுக்க கூடியவை அல்ல. புவிவெப்பமயத்திலிருந்து மனித இனத்தை காப்பாற்ற குசு மீது வரி விதிக்க சீரியசான முயற்சிகள் நடந்து வருகின்றன. என்ன சிரிக்கிறீர்கள்?அட நிசமாதாங்க..நாம எது எல்லாம் அபத்தம் , காமடின்னு நினைப்பமோ அதை செய்வதுதானே கோமாளிகளில் வழக்கம்?அப்புறம் புவிவெப்பமய கோமாளிகள் மட்டும் என்ன விதிவிலக்கா?
 
 
 நியூசிலாந்தில் மனிதர்களை விட நாலுமடங்கு எண்ணிக்கையில் செம்மறி ஆடுகள் உள்ளன. அவை குசுவிடுவதால் புவிவெப்பமயம் அதிகரிக்கும் என பீதியை கிளப்பி நியூசிலாந்து அரசு ஆடுகளுக்கு குசுவரி என்றே ஒரு வரியை போட்டு விவசாயிகளை அசர அடித்தது.
 
அமெரிக்காவிலும் "சுற்றுபுற சூழல் பாதுகாப்பு மையம்" மாடு ஒன்றுக்கு $175 குசு வரி விதிக்க புரபோசலை தீட்டி அரசிடம் கொடுத்து ரிபப்ளிக்கன்களின் கடும் எதிர்ப்பால் அதை திரும்ப பெற்றுகொண்டுவிட்டது.
 
அவ்வளவு ஏன் ஐநா சபையும் உலக மாடுகள் அனைத்தின் மீதும் குசு வரி விதிக்கவேண்டும் என ரிப்போர்ட் தயாரித்துள்ளது. உலக க்ரீன் ஹவுஸ் வாயுக்களின் எண்ணிக்கையில் 6% அளவு வாயுக்களை விடுவதாகவும் இந்த வாயில்லா பிராணிகள் மேல் ஐநா சபையின் உணவு மற்றும் விவசாய துறை குற்றம் சுமத்தி உள்ளது
 
இனி மனிதர்கள் மேலும் இம்மாதிரி வரிகளை போட்டு புவிவெப்பமயவாதிகள் புவிவெப்பமயத்தை கட்டுக்குள் கொண்டுவர முயன்றாலும் ஆச்சரியம் இல்லை. உருளைகிழங்கு வாயு என்பதால் அதுக்கும் வரியை போட்டு தீட்டலாம்..?யார் கண்டார்கள்?புவிவெப்பமயவாதிகள் தான் துக்ளக்கை தோற்கடிக்கும் கோமாளிகள் ஆச்சே?.

அதனால் உலக மக்களே, மாடுகளே, மற்ற விலங்குகளே உலகை காப்பாற்ற வாயு குறைவா இருக்கும் உணவுகளை சாப்பிடுங்கப்பா...இல்லன்னா டைனசார் கதிதான் நமக்கும்:-))

1 comment:

Swapna 2v said...

hii.. Nice Post

Thanks for sharing