Sunday, March 04, 2012

திருமணம் மூலம் விபச்சாரத்துக்கு முழுக்கு போட்ட கிராமம்


திருமணம் மூலம் விபச்சாரத்துக்கு முழுக்கு போட்ட கிராமம்


குஜராத்தில் வாடியா என்ற கிராமத்தில் சாரணியா என்ற சமூக மக்கள் வாழ்ந்து வந்தனர். பரம்பரையாக இந்த கிராமத்தில் இந்த பெண்கள் விபசார தொழிலில் மட்டுமே ஈடுபடுவது வழக்கம். ஆண்கள் எந்த வேலைக்கும் போவதும் இல்லை. திருமணம் ஆகாத தம் மகள், அக்கா, தங்கைகளை இந்த தொழிலுக்கு அனுப்பி, அவ்வபோது ஆள்பிடிக்கும் வேலையையும் செய்து அந்த வருமானத்தில் ஜாலியாக வாழ்வதுதான் ஆண்களின் வாடிக்கை. வருமானம் குறையும்போது குடும்பத்தில் அடுத்த பெண் இந்த தொழிலை மேற்கொள்வாள்.விபச்சாரம் செய்துவந்த பெண் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிடுவாள்.அதன்பின் விபசாரத்தில் அவள் ஈடுபடுவது இல்லை.

இந்த சாரணியா சமூக மக்கள் பூர்விகம் ராஜஸ்தான். மன்னரின் படைகள் போருக்கு போகும்போது வீரர்களை மகிழ்விக்க பெண்களும், கத்தியை தீட்டுதல் போன்ற வேலைகளை செய்ய இந்த சமூக ஆண்களும் பயன்படுத்தபட்டு வந்தனர். படைகள் ஒரு இடத்தில் நிற்காமல் நகர்ந்து கொண்டே இருந்ததால் இந்த சமூக மக்களும் அப்படியே நகர்ந்து வந்து ஒரு கட்டத்தில் குஜராத்தில் செட்டில் ஆகிவிட்டனர்.

Inline image 4



ப்ரிட்டிஷ் ஆட்சியில் குற்ற பரம்பரையாக அறிவிக்கபட்ட இந்த சமூகத்தில் சமீபகாலம் வரை எந்த மாற்றமும் இல்லை.வாடியா என்ராலே ஜல்சாபுரி என்ற அளவுக்கு இந்த கிராமத்தின் பெயர் கெட்டு கிடந்தது. அரசும் பல அமைப்புகளும் இவர்களை மீட்க செய்த எந்த முயர்சியும் பலன் அளிக்காத நிலையில் இந்த கிராம மக்களை மீட்க "விசார்த்த சமுதாயன் சமர்த்தன் மஞ்" என்ற அமைப்பு களத்தில் இறங்கியது.இந்த அமைப்புக்கு குஜராத் அரசும், அதிகாரிகளும் , மற்ற அமைப்புகளும் பெருமளவில் உதவின.குறிப்பாக அந்த மாவட்ட கலெக்டர் திரு ஓரா

மற்றவர்களை போல "இந்த தொழில் தவறு" என அர்கள் உபதேசிக்க ஆரம்பிக்கவில்லை. இரு வேளை உணவுக்காக மட்டுமே இந்த தொழிலில் பெண்கள் ஈடுபடுவதை அறிந்த அமைப்பினர் அரசு உதவியுடன் போர்வெல்கள் போன்ரவற்றை அமைத்தனர்.இது அனைத்தையும் விட முக்கியமாக மக்களுடன், குறிப்பாக ஆண்களுடன் பேசி சமூக மாற்றத்தை ஏற்படுத்தினர்.

ஒரு நல்ல நாளில் அந்த கிராமத்தில் இருந்த திருமணம் ஆகாத நூறு பெண்களையும் அந்த கிராம ஆண்களுக்கு திருமணம் செய்து வைத்தனர். இப்போது அந்த கிராமத்தில் திருமணம் ஆகாத பெண்னே இல்லை. திருமனம் ஆன பெண் விபச்சாரத்தில் ஈடுபடுவது சமூக குற்றம் என அந்த கிராம மக்கள் கருதுவதால் இந்த திருமணங்களால் சுத்தமாக அந்த கிராமத்தில் விபச்சாரம் ஒழிந்தே விட்டது.

"இத்துடன் இதை நிறுத்த போவதில்லை என்றும் தொடர்ந்து இந்த கிராமத்தை கண்காணித்து அரசு உதவிகள் மற்றும் பெண்கள் முன்னேற்ற திட்டங்களை தொடர்ந்து நடத்தபோவதாக கூறுகிரார் கலெக்டர் ஓரா.

வாழ்த்துக்கள்!!!

Inline image 5

(வாடியா நகர் திருமன புகைப்படங்கள்)

Inline image 2



No comments: