காற்றாலை மின்சாரம் பசுமைவாத அமைப்புகளால் மரபுசார் மின்சக்திக்கு (நிலக்கரி, நீர், எரிவாயு, அணு) மாற்றாக முன்வைக்கபடுகிறது. காற்றில் சுழலும் காற்றாடிகள் மூலம் மின்சாரம் உற்பத்தி ஆவதால் அது பசுமையானதாக கருதபடுகிறது. காற்ராலைகளை நாடெங்கும் நிறுவி மின்சாரம் எடுத்து மரபுசார் மின்சார அமைப்புக்களை நாளடைவில் மூடிவிட பசுமைவாதிகள் கனவு காண்கின்றனர். அவர்கள் கனவு நிறைவேறுவதில் உள்ள தடைகளை மேலே உள்ள கட்டுரை விளக்குகிறது.
காற்றாலை மின்சாரத்தில் என்ன பிரச்சனை?
காற்று எங்கே, எப்போது அடிக்கிறது, மின்சாரம் எங்கே, எப்போது தேவைபடுகிறது என்பது தான் காற்றாலைகளில் உள்ள மிக முக்கிய பிரச்சனை. மின்சாரம் பெரும்பாலும் சென்னை,கோவை, நெல்லை மாதிரி பெருநகரங்களில் தேவைபடுகிறது. பெருநகரங்களில் காற்று அதிகம் அடிப்பதில்லை. ஆள் நடமாட்டம் குறைந்த வயல்வெளிகளில் தான் அடிக்கிறது. அதுவும் வாடைகாலத்தில் தான் காற்று மிகுதியாக அடிக்கிறது.
இருப்பதிலேயே செலவு குறைந்த மின்சாரம் புனல் மின்சாரம். அதனால் அதிக அளவில் அணைகட்டுகள் கட்டபட்டு மின்சாரம் எடுக்கபடுகிறது. கோடை காலத்தில் ஆற்றில் நீர்வரத்து குறையும்போது கடும் மிந்தட்டுபாடு ஏற்படுவது வாடிக்கை.துரதிர்ஷ்டவசமாக கோடைகாலங்களில் காற்றும் அதிகம் அடிப்பதில்லை என்பதால் காற்றாலைகள் இம்மாதங்களில் அதிகம் மின் உற்பத்தி செய்வதில்லை.ஆக மின்சாரம் தேவைபடும் நகரங்களுக்கு, தேவைபடும் கோடை மாதங்களில் காற்றாலை மின்சாரம் கை தருவதில்லை.
ஆரம்பகாலகட்டத்தில் காற்ராலை மின்சாரத்தை ஊக்குவிக்க தமிழக அரசு செய்த இன்னொரு செயல் அதற்கு வினையாக வந்து முடிந்தது.அதாவது கம்பனிகள் காற்றாலைகளை நிறூவ அரசு மானியம் அறிவிக்கபட்டது, கம்பனிகள் காற்றாலை மின்சாரத்தை நிறுவி அதில் உற்பத்தி ஆகும் மின்சாரத்தை மின்வாரியத்துக்கு வழங்கிவிட்டு தாம் இருக்கும் இடத்தில் அந்த மின்சாரத்தை மின்வாரியத்திடமிருந்து பெற்றுகொள்ளலாம் என ஒரு சேமிப்பு திட்டத்தை அரசு அறிவித்தது.
இது கம்பனிகளுக்கு நல்ல லாபமாகவும், அரசுக்கு பேரிழப்பாகவும் அமைந்தது. காரணம் என்னவெனில் தமிழக மின்வாரியம் மின்சாரத்தை விவசாயிகளுக்கு இலவசமாகவும், வீடுகளுக்கு சராசரியாக யூனிட் ஒன்றுக்கு 1.10 ரூபாய் விலையிலும் வழங்குகிறது. காற்றாலை மின்சாரத்தை கம்பனிகளிடம் யூனிட் ஒன்றுக்கு 3 ரூபாய் என்ற விலையில் வாங்குகிறது. ஆக வீடுகள், விவசாயிகள் ஆகியோருக்கு விற்கும் யூனிட் ஒவ்வொன்றிலும் அரசுக்கு நஷ்டமே ஏற்படுகிறது. இந்த நஷ்டத்தை கம்பனிகளிடம் அதிக மின்கட்டணம் வசூலித்துதான் (யூனிட்டுக்கு 5.75) அரசு சமாளித்து வந்தது.
கம்பனிகள் காற்றாலைகளை நிறுவியதும் மின்சாரம் அதிகம் தேவைபடாத வாடைகாலத்தில் அவை பெரும் அளவில் மின்சாரத்தை உற்பத்தி செய்தன.அதை அரசுக்கு கொடுத்துவிட்டு வருடம் முழுவதும் அந்த மின்சாரத்தை அரசிடம் வாங்கின. ஆக சென்னையில் இருக்கும் கம்பனி கன்யாகுமரி அருகே ஆரல்வாழ்ய்மொழியியில் காற்ராலையை நிறுவி வாடைகாலத்தில் ஆயிரம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்து அரசுக்கு கொடுத்துவிட்டு சென்னையில் ஆயிரம் யூனிட் மின்சாரத்தை பெற்றுகொண்டது. வாடை, மழை காலங்களில் மின் தட்டுபாடு குறைவு என்பதால் அந்த மின்சாரத்தால் அரசுக்கு பலனேதும் இல்லை. முக்கியமாக உற்பத்தி செய்த மின்சாரத்தை சேமிக்க இயலாது என்பதால் அதிக மின்சாரம் அரசின் கையிருப்பில் இருந்தால் அதை சேமிக்க இயலாது. தேவைக்கு மேல் உற்பத்தி ஆன ஒவ்வொரு யூனிட்டும் வீண்தான்.
இன்னொரு உதாரணம் சொல்லவேண்டுமெனில் "கிராமத்தில் இருக்கும் என் வீட்டு கிணற்று நீரை பஞ்சாயத்துக்கு வழங்கிவிட்டு அதே அளவு நீரை சென்னை குடிநீர் வாரியத்திடம் பெற்றுகொள்வது". மழைகாலத்தில் நான் ஆயிரகணகான லிட்டர் நீரை பஞ்சாயத்துக்கு வழங்குவேன். பஞ்சாயத்து என் வீட்டில் இருந்து குடிநீர் தொட்டிக்கு செலவு செய்து குழாய் அமைத்து நீரை கொண்டு செல்லும். மழைகாலத்தில் நான் அளிக்கும் நீரால் எந்த பயனும் இல்லை. அதே சமயம் கடும் குடிநீர் தட்டுபாடு இருக்கும் சென்னையில் அதே அளவு நீரை நான் ஜம் என பெற்றுகொள்வேன்.
இதை விட முக்கிய பிரச்சனை என்னவெனில் காற்ராலைகளில் உருவாகும் மின்சாரத்தை க்ரிட்டுகள் மூலம் தேவைபடும் இடங்களுக்கு வினியோகம் செய்வது. சுண்டைகாய் கால்பணம், சுமைகூலி முக்கால் பனம் என்பதற்கேற்ப காற்ராலை சுழன்று மின்சாரம் உற்பத்தி செய்தாலும் அதை க்ரிட்டுக்கு கொண்டு செல்ல கம்பிகள் நிறுவுதல், நிலம் கையகபடுத்தல் என அரசுக்கு ஏகபட்ட செலவு. உதாரணமாக கோவை நெகமத்தில் நூறு காற்ராலைகள் இயங்கி மின்சாரம் எடுக்கின்றன. அந்த மின்சாரத்தை சரியாக வினியோகிக்க மின் நிலையத்தை நெகமத்தில் அமைக்க முடியாது.காரணம் காற்ராலை சீசனல் மின்சாரம். வருடத்தில் 3 மாதம் மட்டுமே இயங்கும்.இதை நம்பி என்னவென மின்நிலையத்தை அமைப்பது?அதனால் கம்பிகளை நிறுவி மின்சாரத்தை கோவை மின்நிலையத்துக்கு அனுப்பி அதில் 40% டிரான்ஸ்மிஷன் லாஸ் ஆகும்.பல சமயம் இம்மாதிரி க்ரிட் பிரச்சனையால் காற்ராலை மின்சாரம் உற்பத்தி ஆனாலும் அதை அரசால் எங்கும் வினியோகம் செய்ய இயலாமல் அது வீண் மட்டுமே ஆனது.
யோசித்து பாருங்கள். ஊருக்கு ஒதுக்குபுரமாக பட்டிகாட்டு பகுதியில் நூறு காற்றாலை வருடம் நான்கு மாதம் ஓடும். அதை நகருக்கு கொண்டுசெல்ல அரசு ஏகபட்ட செலவு செய்யவேண்டும். நிலம் கையகபடுத்தி, கம்பிகளை நூற்றுகணகான மைல்கள் இழுத்து மின் நிலையங்கள் திவாலாகும் நிலையை இது உருவாக்கியது.கம்பனிகள் ஜாலியாக இம்மாதிரி பயனற்ற இடத்தில், பயனற்ற மின்சாரத்தை உற்பத்தி செய்து சென்னை மாதிரி இடங்களில் நம்பகமான அணுமின்சாரம், நிலக்கரி மின்சாரம் ஆகியவற்றை பெற்றுகொண்டன. வருமானத்துக்கு வருமானம் நஷ்டம், செலவுக்கு செலவும் தண்டம்.
கூட்டி கழித்து கணக்குபோட்டு தமிழக அரசு மின்சேமிப்பு முறையை ரத்து செய்துவிட்டது.பலகோடி ரூபாய்களை நிலுவையில் வைத்தும் விட்டது. அரசின் இம்மாதிரி மானியத்தை நம்பி துவக்கபட்ட காற்ராலைகள் மூடபடும் நிலையும் உருவாகிவிட்டது.
பசுமை இயக்கத்தினரின் கனவு மின்சாரமான காற்றாலை மின்சாரம் தமிழகத்தில் அம்பேலான கதை இதுவே.காற்றாடிகளை நம்பி அணு உலையை மூட சொல்லும் கோமாளிகளுக்கு தான் அன்றே "அரசனை நம்பி புருஷனை கைவிடுதல்" என்ற பழமொழியை தமிழ் மூதறிஞர்கள் சொல்லி வைத்தார்கள்.இவர் திருந்தவில்லை, மனம் வருந்தவில்லை..அந்த மேலோர் சொன்னதை மறந்தார்!
3 comments:
செல்வன் மிகுந்த ஒருதலைப்பட்சமான பதிவு. தமிழகத்தில் மிக அதிகளவு காற்றாலைகள் நிறுவப்பட்டுள்ள பகுதிகள் ஆரல்வாய்மொழி - பணகுடி, கயத்தாறு, பல்லடம் - தாராபுரம் போன்றவை. இங்கெல்லாம் வாடைக்காலத்தில் காற்று குறைவு. காரணம் இவை அமைந்துள்ள மேற்குத்தொடர்ச்சி மலைக் கணவாய்ப்பகுதிகளில் கோடை காலத்தில்தான் மிக அதிகளவு காற்று வீசும் (அதாவது மார்ச் முதல் அக்டோபர் முன்பாதிவரை), நீங்கள் குறிப்பிட்டுள்ள வாடைக்காலத்தில் வடகிழக்கு பருவக்காற்று வீசும். அப்போது இக்காற்றாலைகள் அதிகம் பயன்தராது.
நிர்வாகக் குளறுபடிகள்தான் மின்சாரப் பற்றாக்குறைக்குக் காரணமாக இருக்கலாமே ஒழிய காற்றாலைகள் அல்ல.
தங்கவேல்,
கீழ்காணும் சுட்டியில் உள்ள மேப்பில் (பக்கம் 24) தமிழக காற்றாலை உற்பத்தி "மே முதல் ஆகஸ்டு வரை" பீக்கில் இருப்பதையும் அக்டோபர் முதல் ஏப்ரல் வரை குறைவதையும் விளக்கியுள்ளனர்.
http://www.shaktifoundation.in/cms/UploadedImages/india%20wind%20energy%20potential%20reassessement_092011apfinal.pdf
கீழே உள்ள சுட்டியில் மாதவாரியாக தமிழ்நாட்டில் பெய்யும் மழை அளவு குறிப்பிடபட்டுள்ளது.
http://www.whereincity.com/india/tamilnadu/
அதன்படி ஜனவரி முதல் ஏப்ரல் வரை தான் தமிழகத்தில் மழை அளவ் மிக குறைவு (25 மிமி அளவை தாண்டுவதில்லை).மழை அளவு மிக குறைவாக இருக்கும் ஜனவரி முதல் ஏப்ரல் வரை காற்ராலை மின்சார உற்பத்தி அதிகம் இல்லை.
மே மாதம் முதல் மழையின் அளவு சராசரி 52 மிமியாக அதிகரிக்கிறது. இப்படி மழையின் அளவு அதிகரிக்கும் நிலையில் தான் காற்றாலை உற்பத்தியும் அதிகரிக்கிறது. தமிழகத்தின் கோடை என மார்ச்,ஏப்ரல், மே மாதங்களை சொல்லலாம். மேயில் அக்கினி நட்சத்திரம் பீக்கில் இருக்கும்.அதன்பின் படிப்படியாக வெயில் குறைந்து மேயிலேயே சராசரியாக 52 மிமி மழை பெய்ய துவங்குகிறது.இது ஏபரலை விட சராசரியாக இரு மடங்கு அதிக மழை
http://panchabuta.com/2011/07/28/half-of-wind-turbines-in-tamil-nadu-put-off-the-grid-due-to-evacuation-problems-20million-units-of-power-wasted/
Half of Wind Turbines in Tamil Nadu put off the grid due to evacuation problems; 20Million Units of power wasted
According to reports, about 50% of the windmills in the state were put off the power grid due to which nearly 20 million units of power was wasted, said K Kasthurirangaian, chairman of the Indian Wind Power Association.
Post a Comment