எல்லா நாடுகளிலும் சாக்கடை அடைத்தால் அதை ஒரு மனிதன் தான் இறங்கி சுத்தம் செய்யவேண்டும்.
ஆனால் கொடுமை என்னவெனில் அடிப்படை பாதுகபபு உபகரணம் (கிளவுஸ், ஹெல்மெட்) கூட சாக்கடை அடைப்பு எடுப்பவர்களுக்கு நம் நாட்டில் கொடுக்கபடுவது இல்லை,. கையில் அல்லது குச்சியை வைத்து சாக்கடை அடைப்பை தோண்டி எடுக்கிறார்கள்.அமெரிக்காவில் சாக்கடைக்குள் ஒரு ஆள் இறங்கி ஒரு லாரியில் உள்ள வேக்வம் குழாயை அடைப்பில் செருகினால் அது மிக வேகமாக அடைப்பை உறிஞ்சி எடுத்துவிடும்.குச்சியை வைத்து நோண்டுவது எல்லாம் அங்கே இல்லை.அதற்கும் துரப்பணம் மாதிரி உபகரணம் உண்டு,
நம் மாநகராட்சிகளில் இதற்கான உபகரணங்களுக்காக பணம் "ஒதுக்கபடுகிறது".ஆனால் அது எல்லாம் வாங்கபட்டதாக பேப்பரில் கணக்கு மாத்திரம் உள்ளது.வாங்குவதாக சொல்வதை நிஜமாகவே வாங்கினால் கூட சாக்கடை தொழிலாளர்கள் நிலை உயரும்.
இவர்களுக்கு ஒரு கிளவுஸ் கூட நம் நாட்டில் கொடுக்கபடுவது இல்லை.எந்த உபகரணமும் இல்லை.கீழே இருக்கும் புகைபடத்தையும் பார்க்கவும்.இருவரும் செய்வது ஒரே தொழில்தான்
2 comments:
செல்வன்,
வணக்கம், நலமா? அவரே தான் இவரா /இவரே தான் அவரா? என ஒரு சந்தேகம் :-)) ரொம்ப நாளாச்சு பார்த்து, ஆனாலும் அப்படியே தான் நாட்டு நடப்புகள் இருக்கு.
முன்னரும் யாரோ ஒருவர்ப்பதிவில் சாக்கடை /மலம் அல்ல நேரிடையாக மனிதர்களைப்பயன்ப்படுத்தும் அவலத்தைப்பேசினேன், அனேகமாக நீங்களும் பேசினீர்கள் என நினைக்கிறேன்.
காலம் மாறினாலும் நிலை மாறாமல் இருக்கு :-))
இதற்கே பாதள சாக்கடையில் மனிதர்களை இறக்க கூடாது, இன்னும் அவர்களுக்கான பாதுகாப்பு கருவிகள் பற்றி எல்லாம் ஒரு வழக்கில் உயர் நீதிமன்றம் தெளிவான தீர்ப்பே கொடுத்துள்ளது.ஆனாலும் அதிகாரிகள் மசியவில்லை. வறுமைக்கு வாழ்க்கைப்பட்ட மக்களுக்கு இந்த வேலையும் கிடைக்காமல் போய்விடுமோ என்று வாயையும் மூக்கையும் பொத்திக்கொண்டு வேலைக்கு வருகிறார்கள். இதுல ஒரு வேடிக்கைப்பார்த்தீங்கன்னா ... விளிம்பு நிலையில் இருந்தாலும் இட ஒதுக்கீடு கொடுக்க கூடாது என்று சொல்லுபவர்கள் இது போன்ற வேலையிலும் பங்கு கேட்பதில்லை, கலெக்டர் வேலை செய்ய மட்டும் தான் போட்டிப்போடுவாங்களா :-))
சென்னையில கூட ஒரு லாரில மெசின் வச்சு டர்ர்ர்னு ஓட்டி சுத்தம் செய்றாங்க, அதெல்லாம் அடைப்பு லேசா இருந்தாலோ அல்லது முக்கிய சாலைகளிலோ தான் போல, மற்றபடி மனித ஆற்றல் தான் அதிகமா இருக்கு.
--------
நில உச்சவரம்பு பத்தி உங்க பதிவு பார்த்தேன், என்ன சொல்வது இன்னமும் பழமைவாத முதலாளித்துவம் இருக்கேனு சிரித்துக்கொண்டேன், ரொம்ப நாள் பிறகு பார்த்ததால் கருத்து எதுவும் சொல்லவில்லை :-))
வாருங்கள் வவ்வால்..நலமா?பல வருடங்கள் கழித்து சந்திப்பதில் மகிழ்ச்சி.
அவரேதான் இவர், இவரேதான் அவர்:-).
சாக்கடை சுத்தி தொழிலாளர் பற்றி நினைத்தாலே விரக்தி தான் மிஞ்சுது. இதை தனியார் நிர்வாகத்தில் விட்டால் அதிலும் அரசு புகுந்து ஊழல் செய்யுது.அதனால் இதற்கு ஒரு தீரவாக இவர்களுக்கு சம்பளத்தை கன்னா,பின்னான்னு ஏத்தலாம். வருஷம் ரெண்டு லட்சம் ரூபாய் என்ர அளவில் கொடுத்தால் அவர்களாவது வேண்டும் உபகரணங்களை வாங்கிகொள்வார்கள்.அவர்கள் பிள்ளைகளுக்கு ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம். மெடிக்கல் சீட்களில் முதல் இடம், முன்னுரிமை வழங்கி அவர்கள் சந்ததிகளையாவது இந்த தொழிலில் இருந்து மீட்கலாம்.
நில உச்சவரம்பு சட்டம் பற்றி நான் எழுதியதில் உறுதியோடு உள்ளேன்:-).அது பழங்கால முதலாளித்துவமா?:-)முதலாளித்துவமே மனித இனம் போல் மிக தொன்மையானது என்பதால் அது பழங்கால கான்செப்ட் தான்:-).மார்க்சியம் மார்க்சுக்கு முந்தி தோன்றவில்லை.அவருடனே அது இறந்தும் விட்டது:-)
Post a Comment