Thursday, February 23, 2012

இந்திய விவசாயிகளை அழிவில் தள்ளிய சோஷலிச நில உச்சவரம்பு சட்டம்

இந்திய விவசாயிகளை அழிவில் தள்ளிய சோஷலிச நில உச்சவரம்பு சட்டம்

ஐ.ஐ.எம் பெங்களூரில் சந்தானகோபாலன் ஐ.ஏ.எஸ் (ஒரிசா விவசாயதுறை இயக்குனர்) ஆற்றிய உரை. உரையை ஒட்டி எழுதபட்ட கட்டுரை. உரையை அனுப்பிய நண்பர் அதியமானுக்கு நன்றி

நரகத்துக்கான பாதை நல்லெண்ணங்களால் நிரப்பபட்டுள்ளது என்பார்கள். அதுபோல நல்ல் எண்ணத்துடன் போடபட்டு மக்களை நாசமாக்கிய சோஷலிச சட்டங்கள் பல. அவற்றில் தலையாயது நில உச்சவரம்பு சட்டம்.

* நில உச்சவரம்பு சட்டம் இல்லையெனில் விவசாய தொழிலாளிகள் புரட்சியில் ஈடுபட்டிருப்பார்கள் என்பதே தவறு. அவர்களுக்கு தேவை நிலத்தில் பங்கு அல்ல. நல்ல கூலியே அவர்கள் வேண்டுவது.

*1950ல் உலகின் பணகாரர்கள் பட்டியலில் ஒரே இந்தியர் மட்டுமே இருந்தார்.ஐதராபாத் நிஜாம். இன்று எல்லா தொழில்துறைகளில் உள்ள இந்தியர்களும் அந்த பட்டியலில் இருக்கிறார்கள். ஒரே ஒரு துறையை சேர்ந்த இந்தியர் மட்டும் எந்த காலகட்டத்திலும் அந்த பட்டியலில் இடம் பிடிக்க முடியாது. அது விவசாயம். காரணம் நில உச்சவரம்பு சட்டம்.அமெரிக்காவில் உள்ள பல விவசாயிகள் உலகின் மிகபெரும் பணகாரர்கள் பட்டியலில் உள்ளார்கள்.

*ஒரிசாவில் ஒரு குடும்பம் (கவனிக்க தனிநபர் அல்ல. குடும்பம்) வைத்திருக்க கூடிய அதிக பட்சம் நிலம் 18 ஏக்ரா மட்டுமே.இந்த நிலத்தில் விளையகூடிய கோதுமையின் அதிகபட்ச மதிப்பு 4.5 லட்சம் ரூபாய் மட்டுமே. கவனிக்க...இது உற்பத்தி தொகை, லாபம் அல்ல.4.5 லட்சம் மட்டுமே வருடம் டர்ன் ஓவர் செய்யும் வியாபாரி குறு வியாபாரி பட்டியலில் தான் அடங்குவார்.ஆக குறுவியாபாரி நிலையை தாண்டி விவசாயிகள் முன்னேற நில உச்சவரம்பு சட்டம் அனுமதிப்பதில்லை.

*இந்த 4.5 லட்சம் டர்ன் ஓவரில் வரும் லாபம் அந்த விவசாயியின் குடும்பத்தை வறுமைகோட்டை தாண்டி கொஞ்சம் பணத்தை மட்டுமே அளிக்கிறது என்பது வேதனை அளிக்கும் உண்மை. இந்திய விவசாயிகள் விவசாயம் மூலம் பணம் சேர்க்க நம் சட்டம் அனுமதிப்பதில்லை.அதனால் அவர்கள் ஏழ்மையில் தொடர்ந்து வாழ சட்டப்படி நிர்பந்திக்கபடுகிறார்கள். 

*நில உச்சவரம்பு சட்டத்தின் விளைவு விவசாயிகள் சட்டபடி ஏழ்மையில் உழலவேண்டும் என்பதே.அதனால் விவசாயம் லாபமற்ற தொழிலாக இருப்பதிலும், விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதிலும் என்ன அதிசயம் இருக்கிறது?


No comments: