பாகவத புராணத்தில் சொல்லபட்டுள்ள இந்தியாவின் முதல் காதல் கடிதம்.

உலகில் மிக அழகு பொருந்திய ஆண்மகனே,
உன் கல்யாண குணங்கள் என் செவிவழி நுழைந்து இதய வலிகளை தணித்தன. உன் அழகை கேள்விபட்டதில் மட்டுமே நான் என் கண்களின் முழு பயனையும் அடைந்தேன். பெண்களுக்கு உரித்தான வெட்கத்தை விட்டுவிட்டு என் இதயம் உன்னை நாயகனாக வரித்துவிட்டது.
ஒ முகுந்தா. ஆண்களில் சிங்கம் போன்றவனே. உன்னை கணவனாக அடைய விரும்பாத உத்தம பெண்கள் யார் இருக்கிறார்கள்?மனித மனதில் இருக்கும் மகிழ்ச்சியின் முழுவடிவம் நீ. அழகு, அறிவு, செல்வம், வீரம், கருணை, கொடை என எதிலும் யாருடனும் ஒப்பிட இயலாதவன் நீ.
ஆதனால் என் இறைவா, நான் உன்னையே என் காதலனாக ஏற்று என்னை உன்னிடம் ஒப்புகொடுத்துவிட்டேன். சிங்கத்தின் உனவை சிறுநரி கவர்வது சிங்கத்தின் பெருமைக்கு அழகல்ல. அதுபோல உனக்கு சொந்தமான என்னை சிசுபாலன் அடையவிடாமல் தாமரைகண்ணா நீ இங்கே என்னிடத்துக்கு வந்து என்னை கவர்ந்து செல்.
வெல்லற்கரிய வீரனே. எனக்கு நிச்சயிக்கபட்ட மணநாளுக்கு ஒரு நாள் முந்தி இங்கே வந்து உன் வீரத்தால் சிசுபாலனை தோற்கடித்து, என்னை கைபிடித்து அழைத்துசெல்.உன் பாதத்தை இந்த பிறவியில் தரிசிக்க இயலாவிடில் நான் என்னுயிரை மாய்த்துகொள்வேன். தவம் புரிந்து இன்னும் ஆயிரம் ஆயிரம் ஜென்மங்கள் கழித்தேனும் உன் மலரடியை அடைவேன்.
ருக்மிணி
No comments:
Post a Comment