Thursday, February 16, 2012

இந்தியாவில் ஒரு அமெரிக்க திருநங்கை


லீசா டசோல்ஸ் ஒரு அமெரிக்க அரவாணி (திருநங்கை). இந்தியாவுக்கு தன் காதலி ஜெனி சாங்குடன் சுற்றுபயணம் வந்த லீசா  அந்த அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்.
 
ஆறுமாதம் இந்தியாவிலும், ஆசியாவிலும் சுற்றியதில் எனக்கு முக்கிய பிரச்சனை பாத்ரூம்தான். எல்லா இடங்களிலும் பெண்கள் டாய்லட்டுக்குள் போனால் ஆண் நுழைந்துவிட்டதாக அதிர்ச்சி அடைந்து அடித்து துரத்துகிறார்கள். கஷ்டபட்டு விளக்கினாலும் மொழி பிரச்சனையில் பல இடங்களில் நான் சொல்வது ஒரு வார்த்தையும் புரிவதில்லை. சில இடங்களில் மாத்திரம் புரிந்துகொண்டு மன்னிப்பு கேட்கிறார்கள்.
 
 
(இடபுறம் ஜெனி..பாண்ட் சட்டை அணிந்திருப்பது லிசா)
 
இதில் மோசமான அனுபவம் என்னவெனில் உதய்பூர் அருகே ஒரு பஸ் நிலையம் அருகே என்னை பாத்ரூமிலிருந்து அடுத்து துரத்தி அதன்பின் எழுமணிநேரம் சிறுநீர் கழிக்காமல் டெல்லிவரை பஸ்ஸில் செல்ல நேர்ந்ததுதான்.
இதனால் எல்லாம் பாத்ரூம் செல்வதானால் என் ஷர்ட்டை கழற்றிவிட்டு என் க்ளீவேஜ் தெரியும் வகையில் டிஷர்ட்டை அணிந்துகொண்டு, கைகளை உயர்த்தி அங்கே இருப்பவர்களுக்கு ஹலோ சொல்லி என் திருநங்கைகுரல் அவர்களுக்கு கேட்கும் வகையில் செய்துவிட்டுதான் என்னால் பாத்ரூம் செல்ல இயல்கிறது.
 
இந்தியாவில் ஆண்-பெண் இடையே வலுவான எல்லைகோடு இருக்கிறது,.எங்கு போனாலும் இருவருக்கும் தனி வரிசைகள்.தனி உடைகள்.ஷாப்பிங் மால், சினிமா தியேட்டர் ஏன் தாஜ்மகாலில் கூட பெண்களுக்கு தனி வரிசை.ஏர்போர்ட்டிலும் தனி வரிசை.பெண்கள் வரிசையில் நின்றால் ஆண்கள் வரிசையில் வர சொல்லி செக்யூரிட்டி கார்டுகள் கத்துகிறார்கள்.ஆண்கள் வரிசையில் நின்றால் செக்யூரிட்டி சோதனையில் ஆண் செக்யூரிட்டிகள் உடலை தடவி சோதிக்கிறார்கள்.சோதனையில் அரவாணி என தெரிந்ததும் கண்டபடி திட்டுகிறார்கள் அல்லது அருவருக்கிறார்கள்.இதனால் மிக வெறுப்படைந்து இந்திய பெண்கள் ஆடை அணியலாமா என கூட யோசித்தேன்.ஆனால் அந்த உடை எனக்கு பழக்கமே இல்லை.
 
இந்த குழப்பத்தில் எனக்கு கிடைத்த நன்மை ஒன்று மட்டுமே.நானும் என் தோழி ஜெனியும் ஜூமா மஸ்ஜித் சென்றோம்.ஜெனியை தடுத்து நிறுத்திய காவலர்கள் உடல் முழுவதையும் மூடும் பர்தாவை கொடுத்து அதை அணிந்த பின்னரே உள்லே நுழைய அனுமதித்தனர்.என்னை எதுவும் சொல்லாமல் ப்ரீயாக உள்ளே விட்டார்கள்.முதலும் கடைசியுமாக எனக்கு இந்தியாவில் எனக்கு கிடைத்த பிரேக் அதுதான்

No comments: