Wednesday, February 15, 2012

தடுக்கி விழுந்த நொண்டிகுதிரை



மின்வெட்டுக்கு அணு உலை வராமல் இருப்பது காரணம் அல்ல என சில அறிக்கைகள் இணையத்தில் வலம் வருகின்றன. அணு உலை எதிர்ப்பால் மின்வெட்டு வந்ததை மறைக்க அதில் பல தவறான தகவல்கள் தரப்பட்டுள்ளன.

அதில் உள்ள முதல் தகவல் பிழை

1994ல் இருந்து தமிழக அரசு சொந்தமாக மின்சாரம் உற்பத்தி செய்ததை தடுத்தது இந்திய அரசு.

இது தவறான தகவல்.சான்றாக ஜூன்4 2011ல் வள்ளூரில் 500 மெகாவாட் திறனுள்ள மின் உற்பத்தி நிலையத்தை துவக்கி உள்ளது தமிழக அரசு. 1994 முதல் மின்சார உற்பத்திக்கு தடை என்றால் இந்த நிலையம் எப்படி வந்தது?மேலும் தமிழக அரசு பட்ஜெட் உரையில் ஜெயலலிதா மின் உற்பத்தி நிலையங்களை துவக்க உள்ளதாகவும் கூறி உள்ளார்.

அடுத்து மத்திய அரசு தரவேண்டிய ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை தராமால் ஏய்த்ததாக்வும் ஒரு புகார் உள்ளது. இதுவும் தவறு. சொல்லபோனால் தனது பங்கை விட அதிக அளவு மின்சாரத்தை மத்திய தொகுப்பிலிருந்து உறிஞ்சுயதற்கு தமிழகத்துக்கு ஷோகாஸ் நோட்டிஸ் மத்திய அரசினால் வழங்கபட்டுள்ளது.

அடுத்து தனியார் மின் நிலையங்களிடம் மின்சாரம் வாங்கிய தமிழக அரசு அதற்கு பணம் தராததால் அந்த மின் நிலையங்கள் 700 மெகாவாட் மின்சாரத்தை தராமல் நிறுத்தி வைத்ததாகவும், அதை அவை கொடுத்தால் மிந்தட்டுபாடு நீங்கிவிடும் எனவும் புகார் கூறுகிறார்கள்.

நான் தெரியாமல் தான் கேட்கிறேன். நீங்கள் யாராவது "சம்பளம் தரமாட்டேன், ஆனால் நீ என்னிடம் வேலை செய்யவேண்டும்" என உங்கள் முதலாளி சொன்னால் ஒத்துகொள்வீர்களா?சம்பளம் வாங்காமல் வேலை செய்வீர்களா? மாட்டீர்கள். அப்படி வேலை செய்ய உங்களுக்கு என்ன பைத்தியமா பிடித்துள்ளது?

இதே மாதிரி தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள் ஓசியில் எப்படி வேலை பார்ப்பார்கள்? அவர்கள் உற்பத்தி செய்யும் பொருளை வாங்கிகொண்டு அரசு பணம் தராமல் இருந்தால் முதலாளி எதை வைத்து அவர்களுக்கு சம்பளம் தருவார்?

ஆக நண்பர்கள் லாஜிக்படி அரசு பணம் தராவிட்டாலும் தனியார் கம்பனிகள் மின்சாரத்தை தொடர்ந்து சப்ளை செய்யவேண்டும்..நல்ல லாஜிக்...ஹா.ஹா...இழை தலைப்பை மறுபடி படிக்கவும்





2 comments:

ILA (a) இளா said...

ahahahha

எல் கே said...

செல்வன், உங்களுக்கு தெரியாதா இணையத்தில் அணு உலை எதிர்ப்பவர்கள் மாபெரும் விஞ்ஞானிகள்