Sunday, February 19, 2012

பசுமைவாதிகளின் பஞ்சுமிட்டாய்: சூரியசக்தி மின்சாரம்



பசுமைவாதிகளின் பஞ்சுமிட்டாய்: சூரியசக்தி மின்சாரம்

கட்டுரை ஆசிரியர்: ஜான் லாம்பர்க்

மொழிபெயர்ப்பு மற்றும் மசாலா சேர்த்தல் ஆசிரியர்: செல்வன்




பூமி முழுக்க ஒரு வருடத்துக்கு தேவைப்படும் மின்சாரத்தை ஒருமணிநேர சூரியவெளிச்சத்தை கொண்டு அடையமுடியும். உலகம் முழுக்க தேவைப்படும் எரிசக்தியை சகாரா பாலைவனத்தில் 2.5% நிலபரப்பை சோலார் பேனலால் மூடுவதால் மட்டுமே அடைய முடியும்.!!!

இதனால் சூரியசக்தி மின்சாரம் பசுமைவாதிகளின் இட்டுகட்டப்பட்ட புவிவெப்பம பிரச்சனையை தீர்க்கும் புதிய லேகியமாக ஆகிவிட்டது. இந்த ஜோக்கர்களின் விஷபரிட்சைக்கு ஐரோப்பிய நாடுகள் தான் பரிசோதனை கூடங்களாகின.ஜெர்மனி அரசு சூரியசக்தி மின்சாரத்துக்கு $130 பில்லியனை மானியமாக அள்ளி வழங்கியது.போனவருடம் மாத்திரம் ஜெர்மானியர்கள் 7.5 கிகாவாட் அளவு சோலார் பேனல்களை நிறுவினார்கள்.இது ஜெர்மன் அரசு கணக்குபோட்டதை விட இரு மடங்கு அதிகம்.இதன் விளைவு ஜெர்மனி மின்பயனாளர் ஒவ்வொருவருக்கும் தலா வருடம் $260 அளவு மின்கட்டணம் அதிகரித்தது.

இதனால் ஜெர்மன் சான்சிலர் ஏஞ்சிலா மார்க்கலின் அமைச்சரவையில் சூரியசக்தி மின்சாரம் "பணத்தை தொலைக்கும் புதைகுழி" என்ற கூக்குரல்கள் எழ துவங்கிவிட்டன.ஜெர்மானிய பொருளாதார அமைச்சர் பிலிப் ராஸ்லர் "சூரியசக்தி மின்சாரம் நாட்டின் பொருளாதாரத்துக்கு வந்த கேடு" என புகார் கூறியுள்ளார்.

நல்லதொரு கனவு இப்படி நைட்மேராக மாற காரணம் என்ன?

சூரியசக்தி இலவசம்.ஆனால் துரதிர்ஷ்டவசமாக சோலார் பேனல்கள் மிக்க விலை உயர்ந்தவை. நிலக்கரி, அணுமின்சாரம் ஆகியவற்றை விட சூரிய மின்சாரம் நான்கு மடங்கு விலை உயர்ந்தது. ஜெர்மனி பவுதீக விஞ்ஞானிகள் சங்கம் கூறூவது போல "இத்தனை கோடி செலவில் நிறுவப்பட்ட சோலார் பேனல்களால் ஜெர்மனியின் ஒரே ஒரு மின் உற்பத்தி நிலையத்தை கூட மூட வைக்க முடியவில்லை".காரணம் ஜெர்மனியின் 1.1 மில்லியன் சோலார் அமைப்புகள் சேர்ந்து செய்யும் ஒட்டுமொத்த மின் உற்பத்தியும் மூச்சை பிடித்து கொள்ளுங்கள். ஜெர்மனியின் மின் உற்பத்தியில் வெறும் 0.3% மட்டும்தான்.....

இத்தனை கோடிகலை கொட்டியும் எந்த பலனும் இல்லாததன் விளைவாக ஜெர்மனி பக்கத்து நாடான பிரான்சில் உற்பத்தியாகும் அணு மின்சாரத்தை அதிக விலை கொடுத்து வாங்கவேண்டி இருக்கிறது.2022ல் அனைத்து அணு உலைகளையும் மூடுவோம் என அறிவித்துவிட்டு அணுமின்சாரத்தை பிரான்சில் இருந்து இறக்குமதி செய்வது ஜெர்மனி வேலைகளை பிரான்சுக்கு ஏற்றுமதி செய்வதுபோல் தான்.

இத்தனை சோலார் பேனல்களை நிறுவியதால், இத்தனை கோடிகளை செலவு செய்ததால் புவிவெப்பமய பிரச்சனை எந்த அளவு தீர்ந்தது?சோலார் பேனல்களில் கொட்டப்பட்ட பணத்தால் நூறு ஆண்டுகள் கழித்து அதிகரிக்கவிருக்கும் புவிவெப்பம் 23 மணிநேரம் தள்ளி போகும் என கண்டுபிடித்துள்ளார்கள்.அதாவது உலகம் 2112 பிப்ரவரி 18ல் அடையும் வெப்பத்தை ஒரு நாள் தள்ளி 2112 பிப்ரவரி 19ல் அடையும்.இதற்கு இப்போது 130 பில்லியன் டாலர் செலவு.

கெட்ட செய்திகள் மேலும் வருகின்றன.அதாவது கேப் அன்ட் டிரேட் விதிமுறைகளின்படி ஜெர்மனி சோலார் பேனல்களில் சேமித்த கார்பன் எமிஷன் ஐரோப்பிய யூனியன் முழுவதற்கும் சொந்தம் என்பதால் இதனால் கிரேக்கமும், ஸ்பெயினும் அதிக அளவில் கார்பனை வெளியிடலாம். ஆக ஒட்டுமொத்தத்தில் ஜெர்மனி சேமித்த கார்பனை மற்ர நாடுகள் வெளியிடுவதால் உலகம் 2112 பிப்ரவரி 18ல் அடையும் வெப்பத்தை அன்றே அடைந்துவிடும்.ஒரு நாள் கூட தள்ளிபோகாது.ஜெர்மனி வரிசெலுத்துபவர்களுக்கு 130 பில்லியன் தண்ட செலவு ஆனது மட்டும் அப்படியே இருக்கும்.

சரி..சோலார் பேனல்கள் உற்பத்தியால் வேலைவாய்ப்புகளாவது அதிகரித்ததா என கேட்கிறீர்களா?ஆம்..சீனாவில். சோலார் பேனல்கள் பெருமளவில் உற்பத்தி ஆவது சீனாவில் என்பதால் ஜெர்மானியர்கள் கொட்டிகுவித்த பணத்தால் சீனாவில் நிறைய வேலைவாய்ப்புகள் அதிகரித்தன. பிரான்சில் இருந்து அணு மின்சாரத்தை வாங்குவதால் பிரான்சில் வேலைவாய்ப்புகள் அதிகரித்தன. ஜெர்மனி அணு உலைகளை 2022ல் மூட இருப்பதால் அவர்களுக்கு இதனால் வேலை இழப்பு மாத்திரமே மிச்சம். ஜெர்மனி பணமும், ஜெர்மானியர்களின் வேலைகளும் பிரான்சு, சீனாவுக்கு வேலைவாய்ப்புக்களை அதிகரித்தன. சோலார் பேனல்களை நிறுவுதல், பழுது பார்த்தல் போன்ற வேலைகள் மட்டுமே ஜெர்மானியர்களுக்கு மிச்சம்.அந்த வேலைகள் ஒவ்வொன்றுக்கும் சுமார் $175,000 அளவு செலவானது என மதிப்பிடபடுகிறது.இந்த அளவு செலவில் வேலைகளை உருவாக்கியும் அதில் இருந்து மின்சாரம் கிடைக்காததால் இது வெறும் டெட் இன்வெஸ்ட்மெண்ட் மட்டுமே.

ஆக மொத்தத்தில் பசுமைவாதிகளின் இட்டுகட்டப்பட்ட புவிவெப்பமய நோய்க்கு அவர்களே தயாரித்த போலிலேகியமான சூரியசக்தி மின்சாரம் புவிவெப்பயமத்தையும் குறைக்கவில்லை, மின்கட்டணத்தையும் உயர்த்தியது, மின்சாரத்தையும் கொடுக்கவில்லை, ஜெர்மனியில் இருக்கும் வேலைகளையும் அழித்து, சீனாவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கியது என்பதுதான் மிச்சம். ஆனால் இதில் வியப்படைய எதுவும் இல்லை. சின்னபசங்க வெள்ளாமை வீடு வந்து சேராது என்பார்கள்.ஒரு நாடே சிறுவர்களின் பேச்சை கேட்டு ஆடினால் விளைவு எப்படி இருக்கும்?இதோ இப்படிதான்.



No comments: