Sunday, September 25, 2011

மரணதன்டனைகெதிராக மீண்டும் ஒரு பிரெஞ்சு புரட்சி

ட்ராய் டேவிஸ் எனும் காப் கில்லர் சென்ற வாரம் விஷ ஊசி போட்டு கொல்லபட்டான்.அவனை கொல்வதற்குள் மரணதண்டனை எதிர்ப்பாளர்களும், மனித உரிமை மகாத்மாக்களும் ஆடிய நாடகங்களுக்கு ஆஸ்கார் விருதே தரலாம்.

ட்ராய் டேவிஸின் பின்புலம்

1989ல் பர்கர் கிங் எனும் துரித உணவக வளாகத்தில் ட்ராய் டேவிஸும் அவன் கூட்டாளி ஒருவனும் ஹோம்லஸ் ஒருவரை போட்டு தாக்கி கொண்டிருந்தார்கள்.அதை கண்ட காவலர் மார்க் மெக்பில் அடிவாங்கிகொண்டிருந்த ஹோம்லஸ் நபரை காக்க முயன்றார்.உடனே ட்ராய் டேவிஸ் தன் துப்பாக்கியை எடுத்து ஆபிசரை முகத்திலும், மார்பிலும் சுட்டான்.இதற்கும் காவலர் மார்க் மெக்பில் தன் துப்பாக்கியை உருவவோ,ட்ராய் டேவிஸை தாக்கவோ கூட முனையவில்லை. இது ஒரு கோல்ட் பிளட்டட் மர்டர்.

இந்த சம்பவம் நடந்ததற்கு 34 நேரடி சாட்சிகள் உண்டு.சாட்சிகள் என்பது சாதாரன சாட்சிகள் அல்ல.கொலை நடந்தது ட்ராய் டேவிஸின் வீட்டருகே என்பதால் சாட்சிகளில் பலருக்கும் ட்ராய் டேவிஸை நன்கு தெரியும்.அதில் மூன்று விமானபடை அதிகாரிகளும் அடக்கம்.இதுபோக ஆபிசர் மார்க் மெக்பில்லை சுட்ட துப்பாக்கி குண்டுகள் ட்ராய் டேவிஸின் துப்பாக்கியில் இருந்தவை என்பதும் ஆதாரபூர்வமாக நிருபிக்கபட்டது.எப்படி எனில் இதற்கு முன் ட்ராய் டேவிஸ் அதே துப்பாக்கியை பயன்படுத்தி இன்னொருவரை கொல்ல முயன்றான்.அந்த வழக்கில் அதே துப்பாகியும், அதில் இருந்த குண்டுகளும் ஆதாரமாக பயன்பட்டது.

இந்த காரணங்களால் ட்ராய் டேவிஸ் குற்றவாளி என்பதை நிருபிக்க நீதிமன்றத்துக்கு எந்த சிரமமும் இருக்கவில்லை.7 கருப்பின ஜூரர்களும், 5 வெள்ளை இன ஜூரர்களும் அடங்கிய நீதிமன்றம் ட்ராய் டேவிஸுக்கு மரணதண்டனை விதித்தது.

ட்ராய் டேவிஸ் கருப்பினம்.இறந்த காவலர் வெள்லையர்.அதனால் உடனே இனவெறி எதிர்ப்பு இயக்கங்கள் மற்றும் வழக்கமான மனித உரிமை ஆதரவு இயக்கங்கள் ட்ராய் டேவிஸுக்கு ஆதரவாக களத்தில் இறங்கின.அமெரிக்க மக்களில் 80% பேர் மரனதண்டனை ஆதரவாளர்கள்.அதனால் ட்ராய் டேவிஸை காப்பாற்ற வேறு விதமான குயுக்திகளில் இந்த இயக்கங்கள் இறங்கின.அவர்கள் எடுத்து வைத்த வாதம்

1) ட்ராய் டேவிஸ் நிரபராதி

2) ட்ராய் டேவிசுக்கு மரணதண்டனை அளிப்பது இனவெறி

இந்த வாதங்களை மட்டும் வைத்துகொண்டு இந்த கோமாளிகள் அமெரிக்காவின் ஒவ்வொரு அப்பீல் கோர்ட்டாக ஏறி தோற்றார்கள்.சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு நடந்து அனைத்து நீதிபதிகளும் ஏகமனதாக ட்ராய்டேவிஸ் குற்ரவாளி எனவும் மரணதண்டனை விதிக்கபட்டது சரியே எனவும் தீர்ப்பளித்தார்கள்.

அதன்பின் கருணை மனு போட்டுவிட்டு ட்ராய் டேவிஸ் நிரபராதி என நாடகம் ஆடினார்கள்.34 சாட்சிகளில் 7 பேர் பல்டி அடித்துவிட்டதாக மீண்டும் சுப்ரீம் கோர்ட் போனார்கள்.சுப்ரீம் கோர்ட் அந்த வழக்கை மீண்டும் எடுத்து நடத்த உத்தரவிட்டது.அந்த 7 சாட்சிகளில் இருவரை கோர்ட்டுக்கு வந்திருந்தும் கூண்டில் ஏற்ற ட்ராய் டெவிஸின் வழக்கறிஞர் மறுத்துவிட்டார்.கூண்டில் ஏற்ரபடாத சாட்சிகளில் ட்ராய் டேவிஸால் தாக்கபட்ட ஹோம்லஸ் நபரும் அடக்கம்.அவர் கோர்ட்டுக்கு வந்து சாட்சி சொல்ல தயாராக இருந்தும் அவரை கூண்டில் ஏற்ற ட்ராய் டேவிஸின் வழக்கறிஞர் விரும்பவில்லை.

கூண்டில் ஏறி வாக்குமூலம் அளித்த 7 பேரில் ஐந்து பேர் தாம் எந்த பல்டியும் அடிக்கவில்லை என்பதை தெரிவித்தனர்.மீதமுள்ல இரண்டுபேரின் சாட்சிகள் சந்தேகத்துக்கு இடமானவை என முன்பே கோர்ட்டு தள்ளுபடி செய்திருந்தது.அவர்களை மீண்டும் கோர்ட்டில் ஏற்றி விசாரித்து தண்டனையை தாமதபடுத்தியதுதான் இந்த முற்போக்குவாதிஅக்ளின் நோக்கமே ஒழிய வேறு எதுவும் இல்லை.அதனால் இந்த வழக்கை மீண்டும் கோர்ட்டு தள்ளுபடி செய்து ட்ராய் டெவிஸின் மரனதண்டனையை ஊர்ஜிதம் செய்தது.

அதன்பின் இந்த முற்போக்குவாதிகள் ட்ராய் டெவிஸை விடுவிக்க மிகபெரும் ஊடகயுத்தத்தை துவக்கினர். "இது இனவெறி படுகொலை, ட்ராய் டேவிஸ் கருப்பன் என்பதால் கொல்லபடுகிரான்" என சொல்லி ஏதோ வீதியில் போய்கொண்டிருந்த அப்பாவி கருப்பினத்தவர் ஒருவரை பிடித்து தூக்கில் போடபட்டது போல் பிரமையை இந்த முற்போக்கு,இடதுசாரி,லிபரல் ஊடகங்கள் உண்டாக்கின."7 பேர் பலடி அடித்துவிட்டார்கள்" என திரும்ப, திரும்ப ஊடகங்கள் எழுதினவே ஒழிய அந்த வழக்கே தள்ளுபடி செய்யபட்டது, 7 ஜூரர்கள் கருப்பர்களாக இருந்தௌ என எதையும் அவர்கள் எழுதவில்லை.

"ஐ ஏம் ட்ராய் டேவிஸ்" என வாசகங்கள் எழுதப்பட்ட டிசர்ட்டுகளை சேகுவேரா டிசர்ட் ரேஞ்சுக்கு விற்று தீர்த்தன.ஐரோப்பாவில், லண்டனில் அவற்ரை அணிந்துகொண்டு விவரம் தெரியாத கல்லூரி இளைஞர்கள், இடதுசாரிகள் ஆகியோர் அமெரிக்க தூதரகங்கள் முன்னே ஊர்வலம் வந்தனர். அம்னெஸ்டி இன்டெர்ன்நேஷனலின் தலைவரே போராட வீதியில் இறங்கி அமெரிக்க தூதரகத்துக்கு எதிரே போராட்டம் நடத்தினார். போப் பெனடிக்ட், முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர் முதலானோரிடம் ட்ராய் டேவிஸை விடுவிக்க கோரும் பெட்டிஷன்களில் கையெழுத்து வாங்கபட்டது.இதை எல்லாம் ஊடகங்கள் ஊதி பெரிதாக்கி ஏதோ பிரெஞ்சு புரட்சியே மீண்டும் மண்ணில் நடப்பது போன்ர பிரமையை உண்டாக்கின.

Troy+Davis+17.jpg

2966971955_2cf98fb353.jpg

இந்த போராட்டங்களில் கலந்துகொண்ட அமெரிக்க லிபரல்கள் "நான் அமெரிக்கன் என சொல்ல வெட்கபடுகிறேன்" என்பது போன்ர கோஷங்களை எழுப்பி தாம் தேசதுரோகிகள் என உலகமே அறிந்த ரகசியத்தை மீண்டும் பகிரங்கமாக முழக்கமாக எழுப்பிகொண்டு ஊர்வலம் போனார்கள்."ட்ராய் டெவிஸை கொல்ல இருப்பதால் ஜார்ஜியாவில் தயாரிக்கபடும் எந்த பொருளையும் வாங்காதீர்கள்" என ஜார்ஜியாவை சேர்ந்த முற்போக்குவியாதிகளே பேட்டி கொடுத்து கொண்டிருந்தார்கள்.லிபரல் ஊடகங்கள் "விஷ ஊசி போடுவது எப்படி உலகிலேயே வலிமிகுந்த சாவு" என்பதை சில நடிகர்களை வைத்து நேரடியாக டிவியில் டெமான்ஸ்டிரேட் செய்து காட்டினார்கள்.அதில் கருனையே உருவான மரணதண்டனை கைதி ஒருவரும், விஜயகாந்த் படத்தில் வருவது போன்ர ரவுடிகளை போன்ர காவலர்களும் காட்டபட்டனர்.

ட்ராய் டேவிஸின் மரண நாள் நெருங்க,நெருங்க இவர்களின் ஹிஸ்டீரியா உச்சிக்கு ஏறியது.சிரைசாலை காவலர்களை ஸ்ட்ரைக் செய்ய சொல்லி அழைப்பு விடுப்பது, அன்று காவலர் அனைவரையும் லீவு எடுக்க சொல்லுவது, ட்ராய் டெவிஸின் மரணதண்டனையை உறுதி செய்த ஜூரர்களின் முகவரிகளை இனையத்தில் ஏற்றுவது என்ர ரேஞ்சுக்கு சென்ரார்கள்.

இது அனைத்தையும் தூக்கி சாப்பிடும் விதத்தில் கொல்லபபட்ட காவலர் மார்க் மெக்பில்லின் குடும்பத்தை கேவலமாக நரமாமிச காட்டுமிராண்டிகள் போல் சித்தரித்து பிரச்சாரம் நடக்க துவங்கியது.அதற்கு காரணம் கொல்லபட்ட காவலரின் குடும்பத்தினர் ட்ராய் டெவிஸை விடுவிக்க கோரும் பெட்ட்சிஷனில் கையெழுத்திட மறுத்ததுடன் "ட்ராய் டெவிஸுக்கு மரணதண்டனை வழங்கபட்டே ஆகவேண்டும்" எனும் நிலையிலிருந்து கடைசிவரை பின்வாங்கவில்லை என்பதுதான்.

"இராக்கில் பல லட்சம் பேரை கொன்ற புஷ்,செனியை கொல்லும்படி ஏன் நீங்கள் கோரிக்கை விடுக்கவில்லை" போன்ர அதிபுத்திசாலி கேள்விகளை கொல்லபட்ட காவலரின் குடும்பத்தை நோக்கி எழுப்பினார் நடிகர் அலெக் பால்ட்வின்.

alec-baldwin-tweet_504x263.png

இது அனைத்தையும் கண்டு துளியும் கலங்காமல் உறுதியாக நின்றது ஜார்ஜிய அரசு."எங்கள் மாநில விவகாரத்தில் தலையிட எவனுக்கும் உரிமை இல்லை" என்பது சுதந்திரத்தை விரும்பும் ஜார்ஜியர்களின் தாரகமந்திரம்.இடதுசாரிகள் ஒப்பாரி ஊர்வலம் நடத்திய ப்ரிட்டனிலும் கூட மூன்றில் இரண்டு பங்கு மக்கள் மரணதண்டனைக்கு ஆதரவாகவே உள்லனர்.ஆனால் மக்கள் விருப்பத்தை தாண்டி பிளாக்மெயில் டெக்னிக்குகளால் இங்கிலாந்தில் மரணதண்டனை ஒழிக்கபட்டது.ஆக மரணதண்டனை ஒழிப்பாலர்கள் திரிப்பதுபோல் மரணதண்டனை அளிப்பது சர்வாதிகாரமல்ல, அளிக்காமல் இருப்பதுதான் மக்கள் கருத்தை புறக்கணிக்கும் சர்வாதிகாரம்.இது ஐரோப்பாவில் வேலை செய்யலாம்.ஆனால் சுதந்திரத்தை விரும்பும் ஜார்ஜியாவில் வேலை செய்யாது.

ஆக, அனைத்து ஒப்பாரிகளையும் தாண்டி ட்ராய் டேவிஸ் சென்ற வாரம் விஷ ஊசி போட்டு கொல்லபட்டான்.

அவன் கொல்லபட்ட சிறை முன் (கண்ணில் கண்ணீரே வராமல்) அழுத மனித உரிமை ஆர்வலர்கள் "அடுத்த கைதியை கொல்ல முற்படும்போது மீண்டும் போராட போவதாக" உறுதிமொழி எடுத்தவாறு தம் வீடுகளுக்கு சென்றார்கள்.

தொடரும்.....*

*(கட்டுரை அல்ல மரணதண்டனை எதிர்ப்பு போராட்டம்)


No comments: