Anna and the king of Siam என்ற நூலை படித்து கொண்டிருக்கிறேன்.அதில் வரும் தகவல்கள் வியப்பூட்டுகின்றன.
அன்னா லியானோவன்ஸ் 19ம் நூற்றாண்டின் முற்பகுதியில் (இது சிப்பாய் கலகத்துக்கு முந்தைய இந்தியா.) சிறுமியாக இருக்கும்போது இந்தியா வருகிறார்.மும்பை மாநகரம் அவருக்கு பெரும் வியப்பை ஊட்டுகிறது. ஒரு விருந்தில் சக ஆங்கிலேயர் "இந்தியர்களை வைக்க வேண்டிய இடத்தில் வைக்கவேண்டும்" என பேசுகையில், அதற்கான திட்டங்கள் வகுக்கபடுகையில் அன்னா அதிர்ச்சி அடைகிறார். "இது இந்தியர்கள் நாடு.அவர்களை வைக்க வேண்டிய இடத்தில் வைக்க நீங்கள் யார்?" என்ற கேள்வி அவர் மனதில் எழுகிறது,.
அவருக்கு இருந்த இந்த அறவுணர்ச்சி கூட இன்றி அங்கே ஆங்கிலேயருடன் வளைய வந்த, இந்தியர்களை ஆங்கிலேயருடன் சேர்ந்து அவமதித்த இந்திய பிரபுக்களை காண்கையில் அன்னாவுக்கு மனதில் பீதியும் வியப்பும் ஏற்படுகின்றன."ஐயோ...இந்தியர்களை இவர்கள் இப்படி மிருகம் மாதிரி நடத்துகிறார்களே?எந்த நிமிடத்தில் எந்த இந்தியன் கொதித்தெழுந்து நம்மை கத்தியில் குத்துவானோ?" என்ற பீதியில் பல நாட்கள் இருக்கிறார்.ஆனால் அப்படி எந்த இந்தியனும் செய்யவில்லை.ப்ரிட்டிஷார் நம்மை ஆள முழுதகுதியும் படைத்தவர்கள்,நாம் அவர்களை விட இழிவானவர்கள் என்ற நம்பிக்கை இந்தியர்கள் மனதில் இருப்பதை காண்பதாக அன்னா எழுதுகிறார்.
அதன்பின் ப்ரிட்டிஷ் ஆர்மி ஆபிசர் ஒருவரை மணக்கிறார்.மிக இனிமையான காதல் வாழ்க்கையின் பயனாக இரு குழந்தைகள் பிறக்கின்றன.சிப்பாய் கலகத்தின்போது அன்னா சிங்கபூரில் (அப்போது அது மலேஷியாவின் ஒரு மாநிலம்) இருக்கிறார்.சிப்பாய் கலகத்தில் பல வங்கிகள் இந்தியாவில் கவிழ்கின்றன.அன்னாவின் சொத்துக்கள் அனைத்தும் பறிபோகின்றன.சிப்பாய் கலகத்தில் கர்னகொடூரமான வன்முரைகள் இந்திய வீரர்களால் ப்ரிட்டிஷார் மேல் நிகழ்த்தபடுகின்றன.அன்னாவுக்கு தெரிந்த அனைவரும் அதில் இறக்கின்றனர்.ஆனாலும் அன்னாவால் இந்தியர்களை குறை சொல்ல இயலவில்லை."அது அவர்கள் நாடு.அங்கே நாம் போனது மிகபெரும் தவறு.வன்முரை மூலம் அவர்கள் நாட்டை பிடுங்கியதால் பதில் வன்முறை மூலம் அதை பிடுங்குகிறார்கள்" என எழுதுகிறார்.
அதன்பின் அவரது கணவனும் ஒரு புலிவேட்டையில் இறக்க அன்னா இரு குழந்தைகளூடன் நிர்க்கதியாக நிற்கிறார்.
அதன்பின் வேறு வழியின்றி பிழைப்புக்காக ஆங்கில பள்ளி ஒன்றை துவக்கி நடத்துகிறார்.அப்போது பல அமெரிக்கர்களுடன் பரிச்சயம் ஏற்படுகிறது.அவர்கள் அப்போது அமெரிக்காவில் அடிமைகளின் விடுதலைக்காக போராடும் ஆபிரகாம் லிங்கனின் வரலாற்ரை எடுத்துரைக்கின்றனர்.இந்தியாவில் இந்தியர்கள் அடிமைகளாக நடத்தபட்டதை கண்ட அன்னாவுக்கு லிங்கனின் செயல் மிகுந்த மனமகிழ்ச்சியை அளிக்கிறது.
அவரை அணுகிய தாய்லாந்து அரசு அதிகாரிகள் தாய்லாந்து மன்னர் நான்காம் ராமரின் பிள்ளைகளுக்கு ஆங்கிலம் சொல்லிதர அவரை தாய்லாந்து வரும்படி அழைப்பு விடுக்கின்றனர்.மாத சம்பளம் $100.
அந்த அழைப்பை ஏற்று அன்னா தாய்லாந்து செல்கிறார்.
மன்னரின் அந்தபுரம் முழுக்க அடிமை பெண்களும், வைப்பாட்டிகளும் நிரம்பி வழிகின்றனர்.மன்னர் முன் யாரும் நின்று கூட பேசுவது இல்லை.தரையில் விழுந்து சேவித்தபடி தான் பேசவேண்டும்.அடிமை வியாபாரம் தாய்லாந்தில் கொடிகட்டி பறக்கிறது.மலேசியாவில் இருந்து இளம்பெண்கள் பிடிக்கபட்டு தாய்லாந்து கொண்டுவரப்பட்டு மந்திரிகள்,மன்னர்,பணகாரர்களின் அந்தபுரங்களீல் அடிமைகளாக விற்கபடுகின்ரனர்.
ஆசிய பெண்களின் இந்த நிலை அன்னாவின் மனதில் பெரும் துயரை ஊட்டுகிறது.மன்னரின் மகனுக்கு ஆங்கிலம் சொல்லிதர வந்தவர் ஆபிரகாம் லிங்கனையும், அடிமை முறையை ஒழிக்க லிங்கன் நடத்திய உள்நாட்டு யுத்தத்தையும் சொல்லிதருகிறார்.மனம் மாறிய இளவரசன் மன்னனானதும் தாய்லாந்தில் அடிமை வணிகத்தை ஒழிக்கிறான்.தன் ஆசிரியை சொல்லிதந்த பல சீர்திருத்தங்களை நாட்டில் கொண்டுவருகிறான்.
ஆக தாய்லாந்தில் அடிமை முறை ஒழிந்ததற்கு ஒரு விதத்தில் இந்தியாவும், ஆபிரகாம் லிங்கனும், ஒரு ஆசிரியையும் காரணம்.ஆசிரியர்கள் சமூகத்தில் எத்தகைய நல்ல மாற்றங்களை உண்டாக்க முடியும் என்பதை அன்னா லியோவான்ஸ்
No comments:
Post a Comment