Wednesday, August 10, 2011

லண்டன் கலவரம்: நலன்புரி ராணிகளின் காட்டுமிராண்டிதனம்

லண்டனில் கலவரம் நடக்கிறது என எல்லோருக்கும் தெரியும்.ஏன் நடக்கிறது என யாருக்கும் தெரியாது.காரணம் பொலிட்டிகல் கரெக்ட்னஸ் கருதி ஊடகங்கள் இதில் அடக்கி வாசிப்பதுதான்.

லண்டனில் நடப்பது இனக்கலவரம் அல்ல.கருப்பர், வெள்ளையர் என அனைவரும் சேர்ந்து தான் கலவரம் செய்கின்றனர்.இதில் ஆசியர்கள் தாக்கபட்டது உண்மை.ஆனால் இது ஆசியர்களுக்கெதிரான கலவரமும் அல்ல.

article-2024284-0D5EF54700000578-390_468x288.jpg

லண்டனில் வேலை வெட்டி இன்றி, அரசாங்க காசில் நலன்புரி திட்டங்கள் மூலம் பலனடைந்து, நாட்டுக்கு பாரமாக, வீட்டுக்கு சுமையாக உலாவும் இளைஞர் கூட்டம் இருக்கிறது.இந்த தண்டசோற்று தடிராமன்களுக்கு உழைப்பு என்றால் என்னவென்றே தெரியாது.படித்து, வேலைக்கு போய், கல்யாணம் செய்துகொண்டு குழந்தைகளை பெற்றுகொண்டு நாட்டையும், வீட்டையும் முன்னேற்றும் எண்ணம் இவர்களுக்கு இல்லை. வயதுவரும் வரை அப்பன் , அம்மாவிடம் காசை பிடுங்கி கொண்டு பள்ளிக்கு போகாமல் கஞ்சாவும் தண்ணியும் அடித்துகொண்டு, வயது வந்து அப்பன் அம்மா துரத்தி விட்டதும், அரசிடம் வேலை இல்லாதவர்களுக்கு கொடுக்கபடும் உதவி போன்ற நலன்புரி திட்டங்கள் மூலம் கிடைக்கும் உதவிகளை பெற்றுகொண்டு, அந்த காசில் பிளாக்பெர்ரி, ஐபோனை வாங்கிகொண்டு திரியும் படிக்காத/உழைக்காத முண்டங்கள் அடங்கிய கூட்டம் தான் இது.இதுகளுக்கு தெரிந்ததெல்லாம் தண்ணி அடித்து கொண்டு ரோட்டில் கலவரம் செய்து இரவானால் தன்னை போல இன்னொரு முண்டத்திடம் காசுவல் செக்ஸ் வைத்துகொண்டு காலையில் மீண்டும் ஓபி அடிப்பது.

ஆசிய நாடுகளில் ஏழைகள் உண்டு.ஆனால் அவர்கள் கனவிலும் இம்மாதிரி வன்முறைகளில் இறங்குவதில்லை.காரணம் அவர்கள் உழைக்கும் வர்க்கம்.உழைத்தும் ஏழையாக இருக்கும் வர்க்கம்.அம்மா, அப்பா, அண்ணன்,தங்கை என குடும்ப சூழலில் வளர்ந்தவர்கள் ஆசியதேச ஏழைகள்.லண்டனிலிம் பிர ஐரோப்பிய தேசங்களிலும் இதுபோல உழைத்தும், போதிய வருமனாமின்றி ஏழைகளாக இருப்பவர்கள் உண்டு.ஆனால் இந்த வன்முறையில் ஈடுபடும் லண்டன் மாநகர நகர்புற இளைஞர்கள் ஏழைகளாக இருக்க காரணம் அவர்களின் சோம்பேறிதனமும், உழைக்க,படிக்க மறுப்பதும்தான்.இவர்களை கட்டுபடுத்த வீட்டில் தாய்,தகப்பன் என ஒரு குடும்பம் இல்லை.அல்லது அப்படி இருந்தாலும் அவர்கள் சொல்பேச்சை இவர்கள் கேட்பது இல்லை.

இதுகள் படிக்காமல் இருக்க காரணம் ஏழ்மை அல்ல.அரசு அங்கே இலவச கல்வியை அளிக்கிறது.இதுகள் வேலைக்கு போகாம்ல் இருக்க காரணம் வேலை இல்லா திண்டாட்டம் அல்ல.சோம்பேறிதனம்.இந்த சோம்பேறிதனத்துக்கு உரமூற்றி வந்த நலன்புரி திட்டங்களை சமீபத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் ப்ரிட்டிஷ் அரசு குறைத்ததும் இந்த மிருகங்கள் கலவரத்தில் இறங்கிவிட்டன.இதுகள் பணக்காரர்களின் கடைகள், வீடுகள் ஆகியவற்றை அடித்து உடைத்து தம் இயலாமையை வெளிகாட்டுகின்றன.இது வர்க்க போராட்டம் கூட அல்ல. இது அவர்களுக்கு நல்ல பொழுதுபோக்கு.கொள்ளை அடிக்க கிடைத்த நல்ல வாய்ப்பு.இதுவரை விடியோ கேம்ஸில் செய்ததை எல்லாம் நிஜத்தில் செய்ய கிடைத்த ஒரு வாய்ப்பு.

article-2024284-0D54D6B600000578-623_468x286.jpg

article-2024284-0D5F039800000578-324_468x286.jpg

இந்த மிருகங்கள் (மிருகம் என கலவரம் செய்வதால் மட்டும் சொல்லவில்லை.தின்றுவிட்டு படிக்காமல்/உழைக்காமல் சுற்றி திரிவதால் சொல்வது) கலவரம் செய்ய அடிப்படையில் நோக்கம் "பணகாரர்களுக்கு எங்களால் என்ன செய்ய முடியும்" என்பதை காட்டுவதே.

லிபரல்களின் மூடதனமான நலன்புரி திட்டங்கள் இப்படிப்பட்ட சோம்பேறி கூட்டத்தை தான் நாளடைவில் வளர்த்து விடும். அப்புறம் இம்மாதிரி வாழ்க்கையை தொலைத்த இளைஞர் கூட்டம் மிருகங்களாக தெருவில் அலையும்.

மீடியா பொலிட்டிகல் கரெக்ட்னஸ் கருதி இதை சொல்வதில்லை."ஏதோ கலவரம்ந் அடக்கிறது" என மொட்டையாக எழுதுகிரார்கள்.

London rioters: 'Showing the rich we do what we want'http://www.bbc.co.uk/news/uk-14458424Two girls who took part in Monday night's riots in Croydon have boasted that they were showing police and "the rich" that "we can do what we want".

The pair who were drinking wine looted from a local shop at 09:30 BST on Tuesday morning, spoke to the BBC's Leana Hosea.

Croydon was one of several areas plagued by unrest on Monday night, on a third night of riots in the capital.

There were also violent scenes in several other English cities.

Post a Comment