Sunday, August 21, 2011

அய்யய்யோ ரஷ்யா

பால் தெராக்ஸின் "ரைடிங் த ஐயர்ன் ரூஸ்டர் (இரும்புகோழி மேல் சவாரி விடுதல்)" எனும் நூலை படித்து கொண்டிருக்கிறேன். தெராக்ஸ் லண்டன் முதல் பெய்ஜிங் வரை ரையிலில் போய் 1973ல் பரபரப்பை ஏற்படுத்தியவர்.அவரது "தெ கிரேட் ரயில்வே பசார்" எனும் நூல் டிராவல் ஜெனரில் ஒரு கிளாசிக்.

தெராக்ஸ் அந்த பயணத்தில் தன் பெண்டாட்டிக்கு துரோகம் இழைத்ததை ஒத்துகொண்டார்.ஆனால் வீட்டுக்கு திரும்பி போகும்போது அங்கே தன் பெண்டாட்டி இன்னொருவனுடன் குடும்பம் நடத்துவதை கண்டதும் தெராக்ஸுக்கு கடும்கோபம் வந்துவிட்டது."என் பெட்டில், என் வீட்டில் தவறு செய்வதா/" என அதற்கு சமாதானம் சொல்லிகொண்டு பெண்டாட்டியை டிவர்ஸ் செய்துவிட்டு 1986- 87ல் மீண்டும் லண்டன் டு சீனா பிரயாணம் மேற்கொள்கிறார்.

அவர் அந்த பயணம் மேற்கொள்ளும்போது கோர்பசேவ் அதிபர். தெராக்ஸ் கீவ் நகரை கடந்த ஒரு நாட்களில் அங்கே செர்னோபில் விபத்து ஏற்படுகிறது.ஆனால் அதன் விபரீதம் தெராக்ஸ் மங்கோலியாவை அடைந்தவுடன் தான் தெரிகிறது.

கோர்பசேவ் காலத்து ரஷ்யாவை தெராக்ஸ் விவரிக்கிறார்.மாஸ்கோவின் தெருக்களில் ஓல்கா, நடாஷா எனும் இரு பெண்களுடன் தெராக்ஸ் நடக்கிறார்.வழிகாட்ட வந்த பெண்கள் தெராக்சை ஒரு வீட்டுக்குள் அழைத்து செல்கின்றனர்.

51KMXuysluL._SS500_.jpg

"உனக்கு நடாஷாவை பிடித்திருக்கிறதா?"

"ஆம்"

"அப்ப நடாஷாவை காதலி.ஆனால் சீக்கிரம் அரைமணிநேரத்துக்குள் காதலை முடித்துவிடவேண்டும்"

"ஏன்?"

"அவளுக்கு டேப் ரெகார்டர் வேண்டும்.நாளை அவள் த கணவனுடன் சுற்றூபயணம் போகும்போது பாட்டுகேட்டுகொண்டே காரில் போகணும்.டேப் கடை இன்னும் அரைமணிநேரத்தில் மூடீவிடும்"

டேக்ரெகார்டருக்கு செக்சா என தெராக்சுக்கு பரிதாபம் வந்து "சரி வா செக்ஸ் எல்லாம் வேண்டாம் நானே டேக் ரெகார்டரை வாங்கி தருகிறேன்" என கடைக்கு கூட்டி போகிறார்.அங்கே போய் பார்த்தால் 20 டாலருக்கு அமெரிக்காவில் கிடைக்கும் டேப்ரெகார்டர் அங்கே 200 டாலர் என விற்கிறது.காரணம் ரஷ்யாவில் அப்போது அதற்கு அத்தனை தட்டுபாடு.

200 டாலரை இழக்க விரும்பாத தெராக்ஸ் நைசாக தப்பித்து ஓடிவிடுகிறார்.

"மாஸ்கோவின் தெருக்களில் நடக்கும்போது எல்லா பெண்களும் என்னையே பார்ப்பது போல் உணர்வு" என எழுதுகிரார் தெராக்ஸ்."அங்கே அப்போது சற்று நல்ல உடை அணீந்த வெளிநாட்டுகாரன் என்றால் அவன் பணம் உள்ளவன் என கருதி அத்தனை மவுசு.என்னை பார்க்கும் ஒவ்வொரு பெண்ணும் "வா டீலை முடிக்கலாம்" என ஏதோ பிசினஸ் பார்ட்னரை பார்ப்பது போல் தான் பார்த்தனர்" என்கிறார் தெராக்ஸ்.




No comments: