ஐடி, சட்டம் ஒழுங்கு, போஸ்ட் லிபரலிச பொருளாதார வளர்ச்சி என கடந்த 10 - 15 ஆண்டுகளாக வட மாநிலங்களை தாண்டி வளர்ந்த தென்னகம் இன்று மீண்டும் பின் தங்குவதாக தெரிகிறது.அதிலும் தமிழகத்தின் நிலைமை மிக கவலைக்கிடம்.
இது குறித்து மெக்கின்ஸி நிறுவனம் அளித்த அறிக்கை:
கடந்த 2005 முதல் 2010 வரை தேசிய வளர்ச்சி விகிதம் 8.7%.தென்னக வளர்ச்சி விகிதம் 7.85%.
அதில் கர்னாடகா.8.7% என தேசிய சராசரியை தொட்டது.கேரளா 8.1% என கொஞ்சம் பரவாயில்லை நிலை.தமிழ்நாடும், ஆந்திராவும் 7.4% வளர்ச்சியை மட்டுமே அடைந்தன,.
ஒப்பீட்டளவில் மிக பின் தங்கி இருந்த பிகாரும், மத்திய பிரதேசமும் இக்காலகட்டத்தில் 16% மற்றும் 14% வளர்ச்சியை அடைந்தன. குஜராத், ஹரியான ஆகியவை ஆரோக்கியமான முறையில் 11.3% வளர்ச்சியை அடைந்தன.
இதுபோக தென்மாநிலங்களில் சூழல் கெட்டுவருவதாக மெக்க்சின்ஸி நிறுவனம் கவலை தெரிவிக்கிறது.தெலுங்கானா விவகாரம் ஆந்திராவின் வளர்ச்சியை பாதிப்பதாகவும், கர்னாடகாவில் அரசியல் சூழல் மிக கவலை அளிப்பதாகவும் கூறும் மெக்கின்ஸி அறிக்கை தமிழகத்தில் வரலாறு காணாத ஊழல்களும், இலவச திட்டங்களும், மின்சார பற்ராகுறையும் தமிழகத்தை வரும்காலத்தில் கடுமையாக பாதிக்கும் என தெரிவிக்கிறது. தமிழகத்தின் மின் தட்டுபாடு மிக்க கவலை அளிக்கும் விஷயம் என கூறும் மெக்கின்ஸி தமிழகத்தின் மின் உற்பத்தி 7000 மெகா வாட் தான் எனவும் ஆனால் மின் தேவை 12000 மெகா வாட் எனவும் கூறுகிறது.
தென்னாட்டை விட வடநாட்டில் ஊழல் குறைவு எனவும் தென்னகத்தின் வளர்ச்சியை ஊழலே தின்று தீர்த்துவிடும் எனவும் தெரிய வருகிறது.
மெக்கின்ஸி வார்னிங் பெல்லை அடித்து விட்டது. தமிழக மக்கள் விழிக்காவிடில் விரைவில் வீழ்ச்சி காத்துள்ளது.
Courtesy: http://www.outlookindia.com/article.aspx?277941
No comments:
Post a Comment