Monday, July 11, 2011

மேனன் என்பது படிச்சு வாங்கின பட்டமா?

செய்தி: ஜாதி பெயர் வைத்துள்ள ஸ்வேதா மேனன், கவுதம் மேனன் போன்ற வெளிமாநில திரைதுறையினரை புறக்கணிக்க தங்கர் பச்சான் அறிக்கை விடுத்தார்.

gautham-menon.jpg
விமர்சனம்:

வெளிமாநிலங்களில் ஜாதிபெயரை வைத்து கொள்வது பாரம்பரியம்.ஸ்வேதா மேனன் என வைத்து கொள்வதால் அவர் ஜாதி வெறியர் என்றோ அல்லது ஜாதி பற்றி அவருக்கு அதிகமான அளவுக்கு புரிதல் இருக்கும் என சொல்ல முடியாது.புத்ததேவ் பட்டசார்யா, ஜோதி பாசு, லாலு பிரசாத் யாதவ், விபிசிங் என சமூகநீதி, ஜாதி ஒழிப்பு போராளிகள் பலரும் ஜாதி பெயர்களுடன் உலா வருபவர்கள் தான்.காரணம் அவர்கள் ஊரில் அதுதான் வழக்கம்.

வெளிமாநிலத்தவரை பெயர் மாற்ற சொல்லி கோரிக்கை விடுவது வேறு..அவர்களை தமிழ்படத்தில் நடிக்க விடாமல் தடுப்போம் என்ற ரேஞ்சுக்கு போவது வேறு.

இன்று நடிகைகளை பெயரை மாற்ற சொல்பவர்கள் நாளை தமிழ்நாட்டில் இருக்கும் மலையாளிகள், சேட்டுகள், மார்வாடிகள் பக்கம் பார்வையை திருப்புவார்கள். அகர்வால் ஸ்வீட்ஸ் பெயரை மாற்று, நேமிசந் ஜெயின் கல்லூரி பெயரை மாற்று என ஆரம்பித்தாலும் அதிசயம் இல்லை.

இதை எல்லாம் செய்யுமுன் நம் தமிழ்நாட்டில் உள்ள ஜாதிகட்சிகளை ஒழித்துவிட்டு, தமிழ்நாட்டில் தீண்டாமையே இல்லை எனும் நிலையை உருவாக்கிவிட்டு பிறமாநிலங்கள் மேல் கவனம் செலுத்துவது நல்லது. இல்லாவிட்டால் நீ என்ன ஒழுங்கா என பிற மாநிலத்தவர் நம்மை கேட்கதான் செய்வார்கள்.


1 comment:

Anonymous said...

no i did nor agree with your concept, those who have caste identity in their names they are terrorist.