Friday, January 14, 2011

பெண்களால் அழிந்த சாம்ராஜ்ஜியங்கள்

பெண்களால் அழிந்த சாம்ராஜ்ஜியங்கள்

ரேப் - ரேப் என்பது பரிணாமவியல் கோட்பாட்டில் தனக்குரிய பங்கை வகிக்கிறது.பல மிருக இனங்களில் ரேப் உண்டு.காரணம் அவற்றில் வலிமை வாய்ந்த ஆண் பல பெண் துணைகளை தன் அந்தபுரத்தில் சேர்த்து கொள்ளும்.பலவீனமான ஆண் மிருகங்கள் ஒன்று பிரம்மச்சாரியாக காலம் கழிக்க வேண்டும், அல்லது..

இப்படி பரிணாமவியலில் ஒரு பங்கை வகிக்கும் ரேப்பை மனித இனம் துஷ்பிரயோகம் செய்வது போல மற்ற மிருக இனங்கள் செய்வதில்லை.மிருகங்கள் செய்யும் ரேப் பெரும்பாலும் இனவிருத்திக்கு.ஆனால் மனிதர்கள் செய்யும் ரேப் பல சமயங்களில் பழிவாங்கும் நோக்கில் மட்டுமே அமைகிறது.கெங்கிஸ்கான் சொன்னதுபோல "இருப்பதிலேயே மிகபெரும் மகிழ்ச்சி என்னவெனில், உன் எதிரியை தோற்கடித்து,அவனை உன் காலில் மண்டியிட வைத்து,அவன் நாடு,நகரங்களை தரைமட்டமாக்கி,அவன் மகள்களையும்,மனைவிகளையும் அடைதல்.."..இந்த கொள்கையை எல்லை மீறி பின்பற்ற்றிய கெங்கிஸ்கான் கடைசியில் தான் கைபற்றிய சீன ராஜகுமாரியால் பாபிட் செய்யபட்டு அந்த வலியிலேயே உயிரை விட்டான் என்பது உபரி செய்தி.

மனோகரா

உஸ்பெகிஸ்தான் மன்னனான தைமூருக்கும் துருக்கி சுல்தான் பெயசித்துக்கும் பலநாட்களக அவமானகரமான கடித போக்குவரத்து நடைபெற்று வந்தது.பெயசித் தனக்கு சமமான மன்னன் என தைமூரை கருதவில்லை.குறுநில மன்னனுக்கு அனுப்புவது போல தைமூருக்கு கடிதம் எழுதி வந்தார்.கோபமடைந்த தைமூர் பெயசித் மேல் படை எடுத்தான்.அந்த காலத்தில் பேயசித்தை எதிர்க்கும் மன்னனே உலகில் இல்லை.ஐரோப்பிய மன்னர்கள் அனைவரையும் தோற்கடித்து ஐரோப்பாவை பிடிக்கும் ஆற்றல் பெற்றிருந்தார் பேயசித்.செர்பிய மன்னன் அவரிடம் போரில் தோற்று தன் தங்கை டெஸ்பினாவை அவருக்கு திருமணம் செய்து வைத்து தன் நாட்டை காப்பாற்றி கொண்டான்.

இத்தகைய வலிமை வாய்ந்த மன்னர் மத்திய ஆசிய நாட்டோடி கூட்டம் ஒன்றின் தலைவனான தைமூரை தனக்கு சமமானவனாக ஏற்காததில் வியப்பில்லையே?எப்படியோ..போர் மூண்டது. தோல்வியே அடையாத ஆட்டோமான் படை ஒரே நாளில் தைமூரிடம் தோற்று பேயசித் தன் குடும்பத்துடன் தைமூரிடம் பிடிபட்டார்.பெயசித்தை கூண்டில் அடைத்து வைத்த தைமூர் அவர் கண்முண் டெஸ்பினாவை பலாத்காரம் செய்தான்.அதன்பின் அவரை விடுதலையும் செய்துவிட்டான்.

அவமானமடைந்த பேயசித் அதன்பின் ரொம்பநாள் உயிரோடு இருக்கவில்லை.அதன்பின்னர் ஆட்டோமான் வம்சத்தில் பத்துராணி என ஒருவர் இருக்கும் வழக்கமே ஒழிந்து விட்டது.பட்டத்து ராணி இருந்தால் தானே இப்படி அவமரியாதைக்கு உள்லாவார்கள்?மன்னர் யாரையும் கல்யாணம் செய்துகொள்லாமல் அடிமைகளாக மட்டுமே பெண்களை வைத்திருந்தால்??

அதன்பின் இருநூறு வருடங்களுக்கு ஆட்டோமான் சுல்தான்கள் யாரும் பட்டத்து அரசிகளை வைத்திருக்கவில்லை.ஆட்டோமான் வம்சத்தின் ஒப்பற்ற மாமன்னரான சுல்தான் சுலைமான் மட்டுமே இந்த பழக்கத்தை உடைத்தெறிந்து உக்ரேனிய அழகி ரோக்சலீனாவை மணந்துகொண்டார்.ரோக்சலினாவும் ஒன்றும் சாதாரண பெண் இல்லை.ஆட்டோமான் வம்சத்தையே முடித்து கட்டியவர் என வரலாற்றில் திகிலுடன் கூறபடுபவர்.

ரோக்சலினாவும் கைபற்றபட்ட அடிமைதான்.அனால் மன்னரை வெகுவிரைவில் மயக்கி தன் கைபிடிக்குள் கொண்டுவந்துவிட்டார்.மன்னரின் முதல் மனைவிக்கு பிறந்த மூன்று குழந்தைகளை மன்னரை கொல்ல வைத்தார்.மன்னரின் நம்பிக்கைக்கு உரிய வசீரையும் கொல்ல வைத்தார். வசீர் (மந்திரி) அன்றைய ஐரோபாவின் நிகரற்ர ராஜதந்திரி. மன்னரின் நெருங்கிய நண்பர்."நான் உயிருடன் இருக்கும் வரை உனக்கு எந்த ஆபத்தும் இல்லை" என மன்னர் அவருக்கு உறுதிமொழி அளித்திருந்தார்.ஆனால் ரோக்சலீனாவுக்கு இத்தகைய ஆபத்தான ஆள் மந்திரியாக இருப்பது பிடிக்கவில்லை.வசீரை மன்னரை விட்டே கொல்ல வைத்தார்.."நீங்கள் தூங்கும்போது வசீர் கொல்லபட்டால் அது உங்கள் சத்தியத்தை மீறியதாகாது" என்ற ரோக்சலினாவின் ஐடியாவுடன்..

இப்படி போட்டியாளர்கள் அனைவரையும் கொன்று தன் மகனை அரியணையில் ஏற்றினார் ரோக்சலினா.

இது அப்படியே மனோகரா படத்தில் வருவது போன்ற கதை.மன்னரின் முதல் மனைவி குல்பஹார்( பத்மாவதி).அவர் மகன் முஸ்தஃபா (மனோகரன்) மாபெரும் வீரன்.அவன் மட்டும் சுலைமானுக்கு பிறகு ஆட்சிக்கு வந்திருந்தால் ஆட்டோமான் வம்சமே எங்கோ போயிருக்கும் என்பார்கள்.ஆனால் வசந்தசேனை சித்தி ரோக்சலினா மனோகரனை தந்தையின் கையால் கொல்ல வைத்தார்.தன் மகனான திறமையற்ற சலீமை (வசந்தகுமாரன்) அரியணையில் ஏற்றினார்.

ஆட்டோமான் வரலாற்றை சலிமுக்கு முந் சலிமுக்கு பின் என இரு பிரிவுகளாக பிரிக்கலாம்.சலீமுக்கு முந்தைய பத்து ஆட்டோமான் சுல்தான்களும் நிகரற்ற வீரர்கள்.சலீமும் அவரது வம்சாவழியினரும் புஸ்வாணங்கள் தான்.சலீம் காலத்தில் லிபாண்டே போர்க்களத்தில் ஒன்றினைந்த ஐரோப்பிய கடல்படையிடம் ஆட்டோமான் படை தோல்வி கண்டது.அதுதான் ஐரோப்பியர்களின் எழுச்சியின் முதல்படி.ஆட்டோமான்களின் வீழ்ச்சிக்கும் முதல்படி.

இத்தனைக்கும் காரணம் என ஆய்வாளர்கள் குற்றம் சாட்டுவது ராணி ரோக்சலீனா மேல் தான்.ஆனால் அவர் ஒரு கைபற்றபட்ட அடிமை.தன்னை அடிமையாக்கிய அரச வம்சத்தினரை சரியாக பழியெடுத்தார் எனவும் மறுதரப்பு சொல்கிறது.

No comments: