சொர்க்கம் மதுவிலேரஜினி படம் எல்லாம் ஒரு நாலஞ்சு வருஷம் கழிச்சு பார்த்தால் பிடிக்காது என முன்பு சொன்னார்கள்.சமீபத்தில் முரட்டுகாளை பார்த்தேன்.தலைவர் பின்னி பெடல் எடுத்து இருக்கிறார்.கிராமம், பலாத்காரம் செய்யும் பண்ணையார்,கோபகார கிராமத்து இளைஞன், ஹீரோவர்ஷிப் செய்யும் அறிமுக பாடல் என பல படங்களுக்கு டெம்ப்ளேட்டை அமைத்து கொடுத்த படம்.ரஜினி படம் எல்லாம் ஒயின் மாதிரி.நாள்பட,நாள்பட தான் சுவை ஏறும். அரசும் ஆப்பும் - 1தமிழ்நாட்டு மாணவர்களுக்கு மேல்படிப்புக்கான செலவை முழுக்க அரசே ஏற்பதாக ஒரு அரசாணை வந்தது.இதை நம்பி பல ஏழைமாணவர்கள் கல்லூரியில் அப்ளிகேஷன் போட்டார்கள்.இந்த அரசாணை இல்லையெனில் இவர்கள் எல்லோரும் கல்லூரியை நினைத்தே பார்த்திருக்க முடியாதாம்.இப்படி கலர் கனவுகளுடன் அப்ளிகேஷன் போட்டு கல்லூரியில் சேர்ந்த மாணவர்களை தலைக்கு ஐயாயிரம் தான் தர்வோம் என சொல்லி பேரதிர்ச்சிக்கு ஆளாக்கியது அரசு.ஐயாயிரம் பீஸில் இன்று எல்.கே.ஜி கூட படிக்க முடியாது என்ற நிலையில் மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள்.கல்லூரி நிர்வாகங்களும் "கவர்மெண்ட் பணத்தை தந்தா உன்கிட்டேயே குடுக்கறோம்.நீ முதலில் பீசை கட்டு" என மாணவர்களை நெருக்கி வருகின்றன. அரசும் ஆப்பும் - 2சில மாதங்களுக்கு முன்பு திரைப்பட தொழிலாளருக்கு இலவசமாக வீடு கட்டி தருவதாக அறிவித்து அதற்கு அவர்கள் மூணுநாள் லீவு போட்டு பாராட்டுவிழா எடுத்தார்கள்.அப்புறம் சென்னையை விட்டு ஐம்பது மைல் தொலைவில் இடத்தை கொடுத்து "வீடு நீயே கட்டிகோ" என சொல்லிவிட்டது அரசு.வீட்டையும் அரசு கட்டி தரும் என நம்பியிருந்த தொழிலாளர்கள் பேரதர்ச்சி அடைந்தனர்.வீட்டை கட்டி கொடுத்தால் திட்டத்துக்கு ஆயிரம் கோடி செலவாகுமாம்.அதனால் தான் அரசு பின்வாங்கிவிட்டதாம்.அப்ப்றம் நிலத்தை வாங்குவோம், வீட்டை பெப்ஸி கட்டிதரும் என சொல்லி நிலத்தை வாங்கினார்கள்.அப்புறம் பார்த்தால் வீட்டுக்கு பத்து லட்சம் செலவு வரும், அதை இரண்டு வருடத்தில் திருப்பி கட்டு என்கிறதாம் பெப்ஸி. இரண்டு வருடத்தில் பத்து லட்சத்தை எப்படி சம்பாதிப்பது என நாள்கூலி வாங்கும் லைட்மேன்கள், மேக்கப்மேன்கள் யோசித்து கொண்டிருக்கிறார்களாம்அரசும் ஆப்பும் - 3மத்திய அரசும், மாநில அரசும் சேர்ந்து கிராமபுறத்தில் 21 லட்சம் குடிசைகளை அகற்றி அங்கே கான்க்ரீட் வீடுகள் கட்டுகின்றன.இதனால் தமிழத்தில் வரும்காலத்தில் குடிசை என்பதை மியூசையத்தில் பார்க்கும் நிலை தான் உருவாகும் என சொன்னார்கள்.இதுக்கு மத்திய அரசு 45,000 ரூபாயும், மாநில அரசு 15,000 ரூபாயும் தருகின்றன.அறுபதாயிரம் செலவில் வீடு எப்படி கட்டுவது என யோசிக்கிறீர்களா?அதுவும் அரசு கட்டி தரும் வீடு எப்படீருக்குன்னு யோசிக்கறீங்களா?அட போங்கப்பா..சந்தேககார தாமஸ்களா
No comments:
Post a Comment