Saturday, October 09, 2010

காந்தி

காந்தி

இந்த கட்டுரைக்கு கோபமான எதிர்வினைகள் வர காரணம் இதில் உள்ள சொற்பிரயோகங்களே."காந்தி மனிதனே இல்லை" என்று கட்டுரையாளர் எழுதியிருக்கிறார்.இம்மாதிரி அதீதமான சார்புநிலைகள்,வார்த்தைகளே இதற்கு இத்தனை கடுமையான எதிர்வினைகளை சில நண்பர்களை அளிக்க தூண்டியிருக்கும் என கருதுகிறேன்.

இதில் கூறப்பட்ட கருத்துக்கள் அனைத்துக்கும் இதே இழையில் பதில் அளித்தேன்.காந்தியை பிடிக்காதவர்கள் அதனால் திருப்தியடைவார்கள் என நான் எதிர்பார்க்கவில்லை.நாள்பட,நாள்பட தான் மனதில் ஆழபதிந்த கருத்துக்களை மாற்ர இயலும்.

இந்த கட்டுரையில் காந்தி மீது சுமத்தபடும் குற்றசாட்டுகள் பெரும்பாலும் கான்ஸ்பைரசி தியரி.தாஜ்மகால் சிவன் கோயிலாக இருந்தது, நிலவில் மனிதன் காலடி எடுத்து வைக்கவில்லை, ஒபாமா ஒரு முஸ்லிம், 9/11 நிகழ்த்தியது யூதர்கள்/அமெரிக்க அரசு என்பது போல ஆதாரமே இல்லாத, வரலாற்று ஆய்வாளர்களால் புறக்கணிக்கபட்ட/ஒதுக்கப்பட்ட கான்ஸ்பைரசி தியரிகள்.கான்ஸ்பைரசி தியரிகளுக்கு ஒரு சந்தை உண்டு.அதை நம்புகிறவர்களை மாற்ரவே இயலாது.அடிப்படையில் நமக்கு காந்தியை பிடிக்காது என்றால் அவர் மேல் சுமத்தபடும் எந்த குற்றசாட்டையும் ஏற்கும் மனோநிலைக்கு தள்ளபடுவோம்.அவரது சாதனைகள் சாதனைகளே இல்லை என வாதிடுவோம்.அதேபோல் தான் இங்கேயும் நடக்கிறது.நேதாஜியை காந்தி கொன்றார், பகத்சிங்கை காப்பாற்றவில்லை, இந்திய சுதந்திரம் கிடைக்க காந்தி காரணம் அல்ல, கடற்படை ஸ்ட்ரைக்கே காரணம் என்பது எல்லாம் அடிப்படை ஆதாரம் இல்லாத, மெயின்ஸ்ட்ரீம் வரலாற்று ஆசிரியர்களால் நிராகரிக்கபட்ட தியரிகள்.

வெல்பவர்களால் வரலாறு எழுதபடுகிறது என்பது உண்மை.அந்த லாஜிக்படி இங்கே வரலாறு காந்தியின் சீடர்களால் எழுதபட்டதே வென்றது காந்திதான் என்பதை அல்லவா காட்டுகிறது?உலகெங்கும் உள்ல வரலாற்று ஆசிரியர்கள், மாபெரும் ஞானிகள், தலைவர்கள், மேதைகள், பொதுமக்கள் அனைவரும் காந்தியின் ஆளுமை குறித்தும் அது உலக வரலாற்றில் ஏற்படுத்திய மாற்றம் குறித்தும் பேசுகிறார்கள்.நோபல் அமைதி விருதுக்கு காந்தியின் பெயர் பலமுறை பரிசீலிக்கபட்டு அன்றைய அரசியல் சூழல் காரணமாக,ப்ரிட்டனை பகைத்துகொள்ள விருப்பாததன் காரனமாக காந்திக்கு வழங்கபடவில்லை.கருப்பர்களின் விடுதலை இயக்க பேரொளிகளான மார்ட்டின் லூதர் கிஙும், மண்டேலாவும் காந்திய வழிமுரையே தமக்கு ஆதர்சத்தை அளித்தது என்கிரார்கள்.அதே அகிம்சையை பயன்படுத்தி வெற்றி அடைகிறார்கள்.அப்புறமும் காந்தி கயவன் என கூறுபவர்களுக்கு வரலாற்று புரிதல் எந்த அளவுக்கு உள்லது என்பதே எனக்கு சந்தேகமாக உள்லது.ஒரு பரந்துபட்ட வரலாற்று பார்வை இவர்களிடம் இல்லை.ஒரு சித்தாந்தத்தின் ஊடாக நின்று அதனுள் நிற்காத அனைவரையும் எதிரிகளாக,மூடர்களாக பார்க்கும் மனபோக்கு மட்டுமே இவர்களிடம் உள்ளது.பொதுமக்கள் மூடர்கள், உலக மக்கள் மூடர்கள், காந்தி நயவஞ்சகர் அனைவரையும் ஏய்த்து வரலாற்று புத்தகத்தில் இடம்பெற்று விட்டார்.நான் தான் அதிமேதாவி.இதை உலகுக்கு எடுத்து சொல்லி அனைவரையும் திருத்த போகிரேன் என்ர மனஒப்போக்கு தான் இங்கே காந்தி மனிதனே இல்லை என கூறுபவர்களிடம் காணபடுகிறது.

"காந்தி மகாத்மா இல்லை, மனிதன் மட்டுமே" என இன்னொரு தரப்பு கூறுகிறது.இதை முதலில் யாரும் மறுக்கவில்லை.காந்தி மனிதர்,ஆனால் அவர் சாதாரண மனிதர் அல்லர்.அசாதாரணமானவர். உலக வரலாற்றில் காணகிடைத்த மனிதர்களில், தலைவர்களில் மிக மேன்மையானவர்.அவருக்கு ஒப்பான விடுதலை போராட்ட தலைவர்களை காண்பதே மிக அரிது.மொழியால், இனத்தாம்,மதத்தால் பிரிந்து கிடந்த மக்களை கட்டி இனைத்து ஒரு தேசத்தை உருவாக்கியவர்.சூரியனே அஸ்தமிக்காத ப்ரிட்டிஷ் அரசை வெறும் முப்பதாண்டு கால போரில் தோற்கடித்து காட்டியவர். ராஜதந்திரத்தால் இந்தியாவை கைபற்றி ஆண்ட ப்ரிட்டிஷாரை அதே ராஜதந்திரத்தால் ஜெயித்து காட்டிய ஸ்ட்ராடஜிஸ்ட்.காந்தியின் நிர்வாக மேலாண்மை திறன்கள் என ஒரு புத்தகமே எழுதி கல்லூரியில் வைக்கும் அளவுக்கு ராஜதந்திரத்தில் கைதேர்ந்தவர்.

சுயநலனை துறந்து,பொதுநலனை,தேசநலனை மட்டுமே சிந்தித்த தலைவர்.அவர் பதவி வெறியர், சர்வாதிகாரி என குற்றம் சாட்டுபவர்கள் அவர் எதற்கு அதிகாரத்தை விரும்பினார் என்பதை மறந்துவிடுகிரார்கள்.அவர் என்ன காசுக்கும், பதவிக்குமா அதிகாரம் கேட்டார்?அவர் அப்படிப்பட்டவராக இருந்திருந்தால் இந்தியாவின் ஒருங்கினைந்த பிரதமராக அவரால் ஆகியிருக்க முடியும்.அவர் அதை முற்றிலும் மறுத்தவர்.காசு பனம் சேர்க்காதவர்.வாரிசுகளை அரியணையில் அமர்த்தாதவர்.தன் உயிர்மூச்சான சத்தியாகிரக கொள்கையிலிருந்து கட்சி விலை செல்வதை தடுக்கவே அவர் நேதாஜியை சகலவிதமான ராஜதந்திரஙக்ளை பயன்படுத்தியும் வென்றார்.அவரை வழிநடத்தியது அவரது கொள்கை.அந்த கொள்கைக்கு தான் அவர் உயிர்வாழ்ந்தார்.அதனாலேயே உயிரையும் இழந்தார்.

இப்படிப்பட்ட மனிதரை உலகவராற்றில் எங்கும் காண்பது அரிது.காந்திக்கு ஒப்பன மனிதனே பூமியில் இதுவரை பிறந்ததில்லை.இனியும் பிறக்க வாய்ப்பு இல்லை.காந்தி ஏசுவை போன்ற கருணாமூர்த்தி, ஜார்ஜ் வாஷின்டனை போன்ற தேச தந்தை, கார்ல் வான் க்ளாஸ்விட்சையொத்த ராஜதந்திரி, கரிபால்டியை போன்ற அப்பழுக்கற்ற தேசபக்தர், முனிவர்களை ஒத்த ஆன்மிகவாதி, வள்ளுவரை ஒத்த செக்யூலரிஸ்ட், இத்தனைபேரையும் ஒரு தராசில் நிறுத்தி மறுதராஅசில் காந்தியை நிறுத்தினால் வேண்டுமானால் காந்திக்கு சமமானவர்கள் கிடைத்தார்கள் என கூறலாமே ஒழிய காந்திக்கு சமமான இன்னொருவரை உலகவராலற்றில் நாம் எங்கும் கானவே இயலாது.இத்தகையவருக்கு மகாத்மா பட்டம் பொருந்தாது என கூறினால் அப்புறம் அது வேறு யாருக்கு தான் பொருந்தும் என்பதை அறிய நான் ஆவலாக இருக்கிறேன்.

காந்தியிடம் தவறுகள் இல்லையா?இருந்தது.பெரும் தலைவர்கள் அனைவரிடமும் காணப்படும் தவறுகள் காந்தியிடமும் இருந்தது.மார்ட்டின் லூதர் கிங் விபசாரிகளுடன் க்ரூப் செக்ஸ் வைத்து கொண்டவர், மண்டேலா பெண்கள் விசகய்த்தில் படுவீக், ஜார்ஜ் வாசிங்க்டன் அடிமைகளை வைத்திருந்தவர்,,,அடுக்கிகொண்டே போகலாம்...குரைகள் இல்லாத மனிதன் இல்லை.நான் சொல்லுவது குறை,நிறை இரண்டையும் வைத்து ஒரு மனிதனை அளவிடுங்கள் என்பதே.அந்த அளவீட்டின்படி பார்த்தால் காந்திக்கு அருகே கூட யாரும் தென்படவில்லை.ஒப்புயர்வற்ற மாபெரும் மனிதர் அவர்.அவரை பற்றி உங்களுக்கு நல்ல கருத்து இருக்கோ, கெட்டவர் என்ற கருத்து இருக்கோ..அது வேறு விஷாய்ம்.அவரை குழுவதும் படியுங்கள் உள்வாங்குங்கள்.ஒற்றைபரிமான கண்ணோட்டங்களையும், சித்தாந்த பின்புலத்தின்பாற்பட்டும் அவரை அணுகாதீர்கள்.அதன்பின் காந்தி மகாத்மாவா,மனிதனா,கயவனா என யாரும் சொல்லாமலே உங்களுக்கே புரியும்.

3 comments:

vasu said...

அருமையான கட்டுரை...


//இந்த கட்டுரைக்கு கோபமான எதிர்வினைகள் வர காரணம் இதில் உள்ள சொற்பிரயோகங்களே."காந்தி மனிதனே இல்லை" என்று கட்டுரையாளர் எழுதியிருக்கிறார்.//

எந்த கட்டுரையை குறிப்பிடுகிறீர்கள்...

Unknown said...

Dear vasu,

This is the katturai

http://groups.google.com/group/panbudan/msg/1241a5ed25342de0?&q=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E2%80%9C%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E2%80%9D

vasu said...

நன்றி...
//This is the katturai//

:)