Saturday, September 25, 2010

450.தன்னை அறிதல்

"நீ அடிப்படையில் மனித குரங்கு இனம்.மிருகம்.மிருக இயல்பே உன் இயல்பு.நீ மிருகம் இல்லை என நினைக்கும்போதுதான் முரண்பாடுகள் தோன்றுகின்றன.உன் அடிப்படையான மிருக குணத்தை இமேஜ் எனும் ஆடையால் மூட முயலுகிறாய்.மனிதன் எனும் போர்வையில் மனித குரங்காய் உலா வருகிறாய்"

"உன் மனசின் ஆழத்தில் தங்கியிருக்கும் கசடுகள், கழிசல்கள், கீழ்மைதனங்கள் அனைத்தும் நேற்று காலை பிறந்த கைகுழந்தைபோல் குற்றமொன்றும் இல்லாதவையே"

"இறப்பை பற்றிய பயமே மனிதனை சுவர்க்கம்,நரகம் பற்றி யோசிக்க தூண்டுகிறது.நீ வாழும்நாளில் அடையும் இன்பமும், துன்பமுமே உனக்கு சுவர்க்கமும் நரகமுமாகும்"

"நான் என்பது பர்ஸ்ட் பர்சன் சிங்குலர் புரோநவுன்.அதற்குமேலான அர்த்தம், உட்பொருள் எதுவும் அதற்கு இல்லை"

"உன்னை நீ அறிதல் என்பது குரங்கு தன்னை அறிதல் என்பதுக்கு சமம். குரங்கு யார்? உலகில் எதை சாதிக்க பிறந்தது? தன்னிலை அறிந்த குரங்கு என்ன செய்யும்? அதை புலி அடித்து தின்னுமா தின்னாதா?"

"நீ நல்லவன் என்பதற்காக உனக்கு தீங்குகள் நடக்ககூடாது என எதிர்பார்ப்பது நீ சைவன் என்பதற்காக உன்னை மாடு முட்டகூடாது என எதிர்பார்ப்பதற்கு சமம்"

"கடவுள் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம்.ஆனால் அவர் ஏன் உன்னை பற்றி கவலைபடவேண்டும்?அவரை பற்றி நீ அறிய முயல்வது உன் சக்திக்கு சாத்தியப்பட்ட விஷயமா?"

No comments: