உலகில் எங்கும், எப்போதும் சுதந்திரம் வேண்டும் என்றால் போராடதான் வேண்டும்.இந்தியா அமெரிக்கா/ப்ரிட்டன் மாதிரி மெச்சுர்டான ஜனநாயகம் அல்ல. சீனா, கியூபா மாதிரி சர்வாதிகாரமும் அல்ல.இரண்டுக்கும் மத்தியில் உள்ளது."மோசமான ஜனநாயகம் கூட நல்ல சர்வாதிகாரத்தை விட சிறப்பானது" என்பார்கள்.அதுதான் இங்கும் நடக்கிறது.
இன்றைய ஜனநாயக அரசுகளிடம் மோதும்போது நீங்கள் மோதுவது பெரும்பான்மையுடன்..அதாவது பெரும்பான்மை மக்களுடன்.அவர்கள் ஆதரவு இல்லாமல் உங்கள் போராட்டம் ஜெயிக்காது.அரவழியில் போராடும் எல்லா கோரிக்கையும் பலனளிக்கும் என்ற பொருளும் இல்லை.அறவழியோ,ஆயுதவழியோ எந்த வழியை தேர்ந்தெடுத்தாலும் வெற்றியை போலவே தோல்வி அடையும் சாத்தியகூறும் உண்டு.பர்மாவில் ஆங்க்சான்சூகி அரவழியில் முப்பது ஆண்டுகளாக போரிடுகிறார்.அவர் போராட்டம் பர்மிய அரசால் கடுமையாக ஒடுக்கபடுகிறது.சூகி 20 ஆண்டுகளுக்கு மேலாக ஜெயிலில் இருக்கிறார்.அதேசமயம் பர்மா அரசு உலகநாடுகள் பலவற்றால் ஒதுக்கபட்டு சர்வதேசகுற்ரவாளி ரேஞ்சில் சர்வதேச சமூகம் முன்பு தலைகுனிந்து நிற்கிறது.சூகியின் தலைமுறையில் அந்த போர் வெற்றி அடையாவிட்டாலும் வரும்காலத்தில் வெற்றி அடையும் வாய்ப்பு அதிகம்.இதே சூகி ஆயுதம் ஏந்தியிருந்தால் அது பர்மிய உள்நாட்டு போராக மாறி ரத்தாறு ஓடி ஏதோ ஒருதரப்பு வெற்றியும் இன்னொரு தரப்பு தோல்வியும் அடைந்திருக்கும்.இலங்கை நிலை அங்கேயும் வந்திருக்கலாம்.
ஜனநாயக நாடுகளில் "ஜனநாயகம் தோற்றுவிட்டது, காந்தியம் தோற்றது" என புலம்புகிறவர்கள் போர்க்களத்தின், போராட்டத்தின் அடிப்படை அறியாதவர்கள்.ஊறுகாய் மாதிரி ஒரு சில அகிம்சை வழி போராட்டங்களை தொட்டுகொண்டு "இதோ அகிம்சையை கையில் எடுத்தேன்.போராட்டம் தோற்றது.இனி அடுத்து ஆயுதம் எடுப்பேன்" என கூறதான் அவர்கள் விரும்புகிறார்கள்.அகிம்சை மூலம் கோரிக்கை வைத்தீர்கள்.நடக்கவில்லை...அடுத்து ஆயுதம் ஏந்தினீர்கள்.அப்பவும் எதுவும் கிடைக்கவில்லை..அடுத்து என்ன செய்ய போவதாக உத்தேசம்?பேக் டு ஸ்க்யுஅர் ஒன்?
ஜனநாயக நாடுகளில் போராட்டங்கள் வெற்றி பெற மக்கள் ஆதரவு வேண்டும்.அதை ஜனநாயக முறையில் அடைதல் வேண்டும்.பெரும்பான்மையுடன் உரையாடி அவர்கள் மனதை மாற்றி அவர்கள் ஆதரவை பெற்று அரசியல்வாதிகளுக்கு அழுத்தம் தந்து அல்லது நாமே ஆட்சியை பிடித்து மாற்றத்தை கொண்டுவரவேண்டும்.இங்கே நடந்த அரசியல்புரட்சிகள் எல்லாம் அப்படி உருவானவையே.இதில் சில கோரிக்கைகள் நமக்கு என்னதான் நியாயமாக தென்பட்டாலும் பொதுமக்களுக்கு ஏற்பில்லாமல் போகலாம்.அப்போது போராட்டம் தோல்வி அடையும்..இதை செய்ய சோம்பேறிதனபட்டு "உண்னாவிரதம் இருந்தேன்.போலிஸ் அடித்துவிட்டது.அதனால் கத்தி எடுத்தேன்" என சிறுபிள்ளைதனமாக பேசி ஆயுதம் எடுப்பவர்கள் அதை கீழே போட முடியாமல் காடுகள்,மலைகள் என பதுங்கி பதுங்கி ஓடி உயிர்வாழ்கிறார்கள்.அவர்கள் எடுத்த கத்தி அவர்கள் குடும்பம்,ஊர்,உறவு,சுற்றம் என பலநூறு பேரை பலிவாங்கிவிட்டு தான் ஓய்கிறது.
அருந்ததி மாதிரி போலிமுற்போக்குவாதிகள் மக்களுக்காக போராடுவதோ எழுதுவதோ கிடையாது. பிரச்சனைகளை தீர்க்கவேண்டும் என்பதும் அவர்கள் நோக்கம் கிடையாது.தண்டகாரண்ய பிரச்சனை பற்றி லாஸ்வேகஸ் ஜர்னல் ரிவ்யூவில் கட்டுரை எழுதுவதுதான் அவர்கள் நோக்கம்.கட்டுரை எழுதினால் பணமும்,புகழும்,விருதும் கிடைக்கும்.அதுக்கு மேல் அவர்கள் எதையும் எதிர்பார்ப்பதுமில்லை.பிரச்சனையை தீர்ப்பதுமில்லை. ஒரு ராமதாஸ், விஜயகாந்திடம் இருக்கும் பிராக்டிகல் அப்ரோச் கூட இவர்களிடம் இல்லை. ஒரு பிரச்சனை என வந்தால் ராமதாஸ், விஜயகாந்த் களத்தில் இரங்குகிறார்கள்.பொராடுகிறார்கள்.இப்படி களத்தில் இறங்கி வேலைசெய்வது அல்லது பிரச்சனையை தீர்ப்பது அருந்ததிக்கு உவப்பானதே இல்லை.அவர் வழக்கமான டெம்ப்ளேட் ஒன்ரை எல்லா கட்டுரைக்கும் வைத்திருப்பார். "காலனி ஆதிக்க அரசு, குரூரமான போலிஸ் இயந்திரம், லஞ்ச ஊழல் அரசியல்வாதிகள், அப்பாவி மக்கள், அவர்களை காக்க வந்த அவதாரபுருஷனாக ஒரு இயக்கம்,தலைவன்" இதுதான் இவரது டெம்ப்ளேட். வடதுருவம் முதல் தென் துருவம் வரை உள்ல எல்லா பிரச்சனைகளையும் இதே டெம்ப்ளேட்டை வைத்தே அவர் அணுகுகிறார்.விளைவு எல்லா பிரச்சனைகளிலும் தோல்வி, மக்களால் புரக்கணிக்கபடுதல். ஒரு சின்ன சர்க்கிளில், அவர் மாதிரியே நம்பிக்கைகளை கொண்ட சர்க்கிளில் மட்டுமே அவரது புலம்பல்களுக்கு அங்கீகாரம் கிடைக்கிறது.
மக்களை திரட்டி, அரசியலுக்கு கொண்டுவந்து போராடி பெரும்பான்மை மக்களிடம் உரையாடி அவர்கள் ஆதரவை பெற்ரால் அந்த போராட்டத்துக்கு தோல்வி என்பதே கிடையாது.அதை செய்ய இயலாத போர்கள் ஜனநாயகத்தில் தோல்வியையே சந்திக்கும்.உண்னாவிரதம் இருப்பதோ, சாலைமறியல் செய்வதோ வெற்றியை தேடி தராது.மக்கள் ஆதரவை உங்கள் கோரிக்கைக்கு திரட்ட இயலுகிறதா இல்லையா என்பதே வெற்றியை தீர்மானிக்கும்.அரசும் போலிசும் அனைத்து கட்டங்களிலும் அதற்கு முட்டுகட்டை போடும்.உங்களை ஆயுதம் ஏந்தவைக்கவே அது விரும்பும்.ஆயுதம் ஏந்தியவர்களை சமாளிப்பது அரசுக்கு எளிது.ஆயுதம் ஏந்தாதவர்களை சமாளிப்பது அரசுக்கு எளிதான விஷயமல்ல.
எந்த போரிலும் வெற்றி,தோல்வி சகஜம், ஜனநாயகத்தில் வெற்றி என்பது மக்கள் ஏற்பே.அதை உங்களால் செய்ய இயன்றால் உங்கள் போர் வெல்லும்.அதை உங்களால் செய்ய இயலாது என்றால் உங்கள் கோரிக்கையை மூட்டை கட்டி வைத்துவிட்டு ரெஸ்ட் எடுப்பது நல்லது.சினேகா என்னை கல்யானம் செய்யவேண்டும் என்ர கோரிக்கைக்கு உண்னாவிரதம் இருக்க பலர் தயார்.அந்த போருக்கு மகக்ள் ஆதரவு கிடைக்குமா?
No comments:
Post a Comment