ஸ்டைல் மன்னன் என்று ரஜினியை சொல்வதுண்டு.ஆனால் ரஜினியிடம் கேட்டபோது 'ஸ்டைல் மன்னன் என்பதெல்லாம் சும்மா. எனக்கும் மேலே ஸ்டைல் சக்ரவர்த்தி ஒருவர் இருக்கிறார்.அவர் தான் நடிகர் திலகம்" என்றார்.
அந்த சிவாஜி ஸ்டைலில் கலக்கிய ஒரு பாடலை யுடியூபில் கேட்டேன்."நீரோடும் வைகையிலே" என துவங்கும் அந்த பாடல் என் மனதை கொள்ளை கொண்டது.
இருந்தாலும் என் குறுக்குபுத்தி என்னைவிட்டு எங்கே போகும்?அதனால்
ஸ்டைல் சக்ரவர்த்திக்கும் கவியரசனுக்கும் என் கேள்விகள்
1) ஸ்டைல் சக்ரவர்த்தி.....இத்தனை அழகான இரண்டு குழந்தைகளையும், மனைவியையும் பக்கத்தில் வைத்துகொண்டு சிகரெட் குடித்தால் செகண்ட் ஹாண்ட் ஸ்மோக் அவர்களை பாதிக்கும்னு தெரியாதா?
2) கவியரசே...
"நான் காதலெனும் கவிதை சொன்னேன் கட்டிலின் மேலே" என்று தலைவனையும்
"அந்த கருணைக்கு நான் பரிசு தந்தேன் தொட்டிலின் மேலே" என்று தலைவியையும் பாடவைத்திருக்கிறாயே?காதல் என்பது தலைவன் தலைவிக்கு அளிக்கும் கருணையா?இது நியாயமா?
60களில் உன்னிடம் இருந்த இந்த மனபோக்கு "ஆதிக்கநாயகன் சாதிக்க வந்தால் அடங்குதல் முறைதானே?" என்று 80களிலும் தொடர்ந்திருக்கிறதே?
இது நியாயமா கவியரசே?
6 comments:
குறுக்குப் புத்தின்னாலும் கருத்தான விஷயம்தான். கடைசியில் நியாயமா கவியரசரே என்று கேட்டிருக்கக் கூடாது. கண்ணதாசன் அதை நியாயம் என்றே சொல்லுவார். உங்கள் பிளாக்ஸ்பாட்டின் உச்சியில் இருப்பதைப்போலவே அவர் வழி அவருக்கு. உங்கள் வழி உங்களுக்கு. நேரான வழின்னு எந்த புண்ணாக்கும் இல்லை.

ஆமாம்.அவர் வாழ்ந்த காலகட்டம் அப்படி.அது எனக்கு தெரிந்துதான் இருக்கிறது.இருந்தாலும் பாட்டை கேட்டவுடன் டக்குன்னு மனதில் தோன்றிய ஆதங்கத்தை எழுதினேன்.நன்றி சிவஞானம்
இந்த விழிப்புணர்ச்சி இல்லாத காலகட்டத்தில் இருந்த ஒரு நிகழ்வைக் கவிஞர் பதிந்திருக்கிறார். அதை இப்போது வந்து அமெரிக்காவில் உட்கார்ந்துகொண்டு கேட்பதில் நியாயமில்லை செல்வன்!
அடுத்து, அந்த கவிதை, கருணை சமாச்சாரம்!
அது அந்த இரண்டு பேருக்குள் நடந்த ஒரு நிகழ்வு. அவளுக்கு அது கருணையாகப் பட்டது. தாய்மை என்பது கிட்டாத ஒரு சிலரைக் கேட்டுப் பாருங்கள். இந்தக் கருணையைப் பற்றி இன்றும் சொல்லுவார்கள்! அந்தப் படத்தை முழுதுமாகப் பார்த்தால் சௌகார் தாய்மைக்காக ஏங்கியது புரியவரும்!
எங்க ஸ்டைல் மன்னனையும், கவியரசையும் சும்மனாச்சும் போற போக்குல சொன்னா விட்டுருவோமா?!!:))
எஸ்கே
கவிஞர் இன்று இருந்திருந்தால் என் தாத்தா வயது அவருக்கு.அவர் வாழ்ந்த காலகட்டத்தையும் அப்போதைய மதிப்பீடுகளையும் பற்றி நீங்கள் சொல்வது உண்மை.இது அந்த நேரத்தில் அந்த பாட்டை கேட்டபோது தோன்றிய உணர்வு.உடனே பதிவெழுதிவிட்டேன்.
தாய்மை சவுகாருக்கு கிட்டாதபோது சிவாஜிக்கும் தந்தையாகும் வாய்ப்பு கிட்டவில்லை தானே?இருவரும் ஒருவருக்கொருவர் வழங்கிகொண்ட காதலை கருணை என்பது பொருத்தமாக தோன்றலை.மற்றபடி கவிஞரின் ஒற்றை வார்த்தையை வைத்து மல்லுகட்டுவதில் எனக்கு விருப்பமில்லை.அது எதுகை மோனைக்காக மட்டும் எழுதப்பட்ட ஒன்று என வைத்துகொள்கிறேன்:)
நெய்யூறும் கானகத்தில் கைகாட்டும் மானே என்று கூட எதுகை மோனைக்கு எழுதினார்....அந்த வரியில் சுத்தமாக எதுவும் பொருளே கிடையாது.நெயூறும் கானகத்தில் எந்த மான் கைகாட்டுது? சரி எதுகை மோனைகாக எழுதினது என்ன நினைத்துகொண்டேன்:)
Post a Comment