Thursday, August 27, 2009

412.வர்ணங்கள்


வர்ணங்கள் சுவற்றுக்கு மட்டுமே இனி இருக்கட்டும்

புவியெங்கும் சமத்துவம் பூக்கட்டும்

நந்தனார்கள் தீட்சிதர்கள் ஆகட்டும்

திருப்பாணாழ்வார்கள் சங்கராசாரிகள் ஆகட்டும்

சேரியும்,அக்கிரகாரமும் ஒரே ஊராகட்டும்


புலையருக்கும் பூணூல் அணிவித்தவன் பாரதியன்றோ?

மதுரையில் ஆலயபிரவேசம் நடத்தியவன் வைத்தியநாத ஐய்யரன்றோ?

நம் தாய்தமிழை மீட்டெடுத்தவன் சாமிநாத ஐயரன்றோ?

பிராமணரும் பஞ்சமரும் நெருங்கிவிட்டார்

மாயாவதியை ஆட்சியில் அமர்த்திவிட்டார்


அன்று நடந்து பழங்கதை

இன்று நடப்பது புதியவரலாறு

பழங்கதைகள் பஞ்சாங்கமாய் மாறட்டும்

பழையபகைகள் போகியோடு ஒழியட்டும்

குக்கிராமமான உலகில் ஏது பார்ப்பனும் பஞ்சமனும்?

அனைவரும் இனிஒருதாய் மக்களே

பாரததாயின் புதல்வரே

No comments: