சிகாகோவின் டவுன்டவுன் ஒரு காங்கிரீட் காடு.அதில் மூன்றுநாள் மூச்சுதிணறி போய்விட்டேன்.கையில் கத்தை கத்தியாக காசு இருந்தால் தான் டவுன் டவுனில் நடமாடவே முடியும்.காரை பார்க் செய்ய தினமும் முப்பது டாலர் கட்டணம்னா பார்த்துகுங்க.
கடைகளில் கொள்ளை விலை.எங்கூரில் 2 டாலருக்கு கிடைக்கும் பொருள் இங்கே நாலு டாலர்.இந்த காங்கிரீட் காட்டில் சாலைகளில் அத்தனை நெரிசல்.டிரைவர்களுக்கு ஹாரன் அடிப்பதென்றால் கொள்ளை பிரியம்.யாருக்கும் நிற்ககூட நேரமில்லை.
இத்தனை இயந்திரமயமான இடத்தில் வால்க்ரீன்ஸ் ஸ்டோருக்கு என் காரை எடுத்துகொண்டு கிளம்பினேன்.ஸ்டோரில் காரை நிறுத்த இடமில்லை.கூட வந்த நண்பரை கடைக்கு முன் இறக்கிவிட்டுவிட்டு அருகே இருந்த பார்க்கிங் கராஜுக்கு போனேன்.அரைமணிநேரத்துக்கு காரை நிறுத்த $9 கட்டணம்.நண்பர் உள்ளே போனது $2 மதிப்புள்ள மருந்தை வாங்க.
$2 மருந்துக்கு $9 பார்க்கிங் கட்டணம் என்று திட்டிகொண்டு காரை நிறுத்திவிட்டு உள்ளே போய் நண்பருடன் சேர்ந்து மருந்தை வாங்கிகொண்டு பார்க்கிங் கராஜுக்கு வந்தேன்.
"இத்தனை சீக்கிரம் வந்துவிட்டீர்கள்" என்றார் வியப்புடன் பார்க்கிங் அட்டெண்டெண்ட்.காசை நீட்டியபோது வாங்க மறுத்துவிட்டார்.
இந்த காங்கிரீட் காட்டிலும் மனிதம் சாகாமல் இருக்கிறது என்பது எனக்கு அப்போதுதான் புரிந்தது.
மனநிறைவுடன் வெளியே வந்து மக்கள் கூட்டத்தில் கலந்தேன்.
3 comments:
// காரை நிறுத்த $9 கட்டணம்.நண்பர் உள்ளே போனது $2 மதிப்புள்ள மருந்தை வாங்க.//
வண்டி பாஸ் போட டெண்டர் எடுத்துக்குடுங்க.
உங்களுக்கு மட்டும் இலவசம் என்ன சொல்லுரீங்க
:-))
GREETINGS FROM NORWAY! WRITE MORE WITHOUT MIXING ENGLISH WORD!YOU HAVE THE ABILITY TO WRITE!!!
கார்த்திக்,
நான் இலவசமா குடுத்தா பெனாயிலையும் இல்லா குடிப்பேன்?டெண்டரா எடுத்து தரமாட்டேங்கறேன்?:-)
நன்றி காந்தியிஸ்ட்
Post a Comment