Tuesday, July 31, 2007

319.அஞ்சேல் எனாத ஆண்மை

யோங்க்யாங் - கெசோங் சாலையில் அந்த ஜீப் மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தது. வடகொரியாவில் தனியார் வாகனம் என்பதே கிட்டத்தட்ட இல்லை எனலாம். ஒஷாரா ஆசிரம துறவிகள் வேடத்தில் ஜீப்பில் சென்றதால் தடையின்றி செல்ல முடிந்தது.

"கெசாங்கில் உளவாளிகளின் தலைவர் சுதர்சன் நம்மை சந்திப்பார். உமாவுக்கு தெரிந்த அந்த ரகசியத்தை சொன்னால் நமக்கு தப்பிக்க உதவுவார். தென்கொரியாவுக்குள் எப்படியாவது நுழைந்துவிட்டால் அங்கே ஒரு ஹெலிகாப்டர் தயாராக இருக்கும் என்று சொல்லியிருக்கிறார்...சியோல் போய் அங்கிருந்து இந்தியா போய் விட வேண்டியதுதான்" இளங்கோ திட்டத்தை விவரித்துக் கொண்டே வந்தார்.

கெசாங்குக்கு 10 கிமி தொலைவில் ஜீப்பை நிறுத்தினார் இளங்கோ. சுதர்சன் அங்கே அவர்களுக்காக காத்திருந்தார்.

"வட கொரிய எல்லையை தாண்டுவதுதான் கடினம்.உமாவுக்கும் பாலமணிக்கும் தேசிய அலர்ட் விடப்பட்டுள்ளது. கண்டவுடன் சுட்டு கொல்வார்கள்.அனேகமாக வடகொரியாவில் இருக்கும் இந்தியர்கள் நாமாகத்தான் இருப்போம். நம்மை கண்டுபிடிப்பது மிக எளிது. எல்லை இங்கிருந்து 40 மைல் தூரம்தான். ஆனால் எல்லையில் மிக கடுமையான காவல் இருக்கும்..என்ன செய்வது என தெரியவில்லை" என்றார் சுதர்சன்.

"உடைக்க முடியாத எல்லை எதுவுமில்லை" என்றாள் பாலாமணி. "ஒரு திட்டத்தை சொல்கிறேன் கேளுங்கள்"

******

கெசாங்க் சாலையில் அந்த பெட்ரோல் லாரி ஊர்ந்து கொண்டிருந்தது. வழியில் சைக்கிள்களைத்தவிர எந்த டிராபிக்குமில்லை...ஆனால் ஒரு திருப்பத்தில் ஜீப் ஒன்று ரிப்பேராகி நிற்பதை கண்ட லாரி டிரைவர் லாரியை நிறுத்தினார்.கீழே இறங்கினார்.காலை கீழே வைத்ததும் முகமூடி அணிந்த இரு உருவங்கள் அவரை பிடித்தன.

"என்னிடம் காசு இல்லை.லாரியை வேண்டுமானால் ஓட்டிக்கொண்டு போங்கள்.ஆனால் சப்ளை வந்து சேரவில்லை என்றால் அப்புறம் போலிஸ் படை கிளம்பிவிடும்" என்றார் டிரைவர்.

"வாயை மூடு" என முகமூடி அணிந்த உருவம் அதட்டியது.

திடீரென ஹாரன் அடிக்கும் சத்தம் கேட்டது. பின்னால் இர்ண்டாவது பெட்ரோல் லாரி ஒன்று வந்து நின்றது."என்னப்பா கலாட்டா?" என்றவாறு இரண்டவாது லாரி டிரைவர் கீழே இறங்கினார்.

ஐந்து நிமிடம் கழித்து இரு லாரி டிரைவர்களும் கைகள் கட்டப்பட்டு பக்கத்திலிருந்த புதருக்குள் உருண்டு கொண்டிருந்தனர்.லாரிகளையும் காணோம், ஜீப்பையும் காணோம்.

********

"விசிலடிக்காமல் வேலை செய். பெரிய எஸ்பிபின்னு நினைப்பு" தேன்மொழி திட்டிக்கொண்டே மூங்கில் வெட்டினாள்.

"என்னை திட்டாவிட்டால் உனக்கு பொழுதே போகாது இல்லையா?" என்று கேட்டுக்கொண்டே உற்சாகமாக வேலை செய்தான் அரவிந்த்.

"நீ ஏன் விசிலடிக்கிறாய் என்பது தெரியும்.இந்தியா போனதும் உன் விசில் சத்தத்தை எப்படி நிறுத்தவேண்டும் என்பதும் தெரியும்" என முணுமுணுத்தாள் தேன்மொழி.

"இந்தியா போனதும் என்ன செய்வாய்?" என கேட்டான் அரவிந்த்.அவனது முகத்தில் ஒரு பயம் படர்ந்தது.

"நடந்தது எல்லவற்றையும் உமாவிடம் சொல்வேன். அப்புறம் அவள் உன்னை திரும்பிக்கூட பார்க்கமாட்டாள். சந்துருவுடன் போய்விடுவாள்" என்றாள் தேனு.

"என்ன சத்தம்? வேலையை பாருங்கள்" என திட்டினார் இளங்கோ.

அனைவரும் மும்முரமாக வெட்டினர்.சீக்கிரத்தில் மூங்கில்களை வெட்டி மலையாக குவித்து விட்டனர்.

************

"இந்த மூங்கில் காடு தென்கொரிய எல்லைக்குளும் பரவியிருக்கிறது. நமது நல்ல நேரம் மூங்கில்கள் கோடை வெப்பத்தில் காய்ந்து கிடக்கின்றன.நன்றாக காற்று அடிக்கும் சமயத்தில் பற்ற வைத்தால் மூங்கில் காடு முழுக்க தீப்பற்றி எரியும். வட கொரியாவில் தீயணைப்பு படை என்று எதுவுமே கிடையாது. தீக்கு பயந்து எல்லையில் இருக்கும் ராணுவம் விலகிவிடும்.அந்த சமயத்தில் கவனமாக எல்லை தாண்டவேண்டும்" என்றாள் பாலாமணி.

"எல்லையில் இருக்கும் கேட்டில் அரை கிலோமீட்டர் சுற்றளவுக்கு மூங்கில் கிடையாது" என்றார் சுதர்சன்.

"தீ வெப்பத்தில் அங்கிருப்பவர்களும் தப்பி ஓடினால் அதிசயமில்லை. அப்படி அவர்கள் ஓடாவிட்டாலும் மாற்று திட்டம் கைவசம் இருக்கிறது" என்றாள் பாலமாணி.

பெட்ரோலை சுற்றிலும் ஊற்றினார் இளங்கோ. அனைவரும் பாதுகாப்பாக மூங்கிலை வெட்டிய பகுதிட்யில் நின்றுகொண்டனர். ஒரு லாரி பெட்ரோலை கொட்டி தீ வைத்தார் இளங்கோ. தென் திசை நோக்கி அடித்த காற்றின் வேகத்தில் தீ மள, மள என பரவியது.விரைவில் மூங்கில் காடு முழுக்க எரிந்தது.

*******

கொரிய எல்லையில் ஒரு பெரிய கேட் இருந்தது. அதன்முன்னே ஒரு டாங்கி நின்றுகொண்டிருந்தது. அதை சுற்றி பத்து வீரர்கள் மட்டுமே நின்றுகொண்டிருந்தனர்.

"இவர்களை மட்டும் தாண்டினால் போதும்" என்றாள் பாலாமணி. பைனாகுலரை கீழே வைத்தாள்."எல்லோரும் ஜீப்பில் ஏறுங்கள்..சுதர்சன்..சொன்னது நினைவிருக்கிறதா?"

"தற்கொலைக்கு ஒப்பான முயற்சி...இருந்தாலும் உனக்காக செய்கிறேன்" என்றார் சுதர்சன்.

பாலாமணி மீதமிருந்த பெட்ரோல் லாரியில் ஏறினாள்.ஆக்சிலரேட்டரை வேகமாக அமுக்கினாள்.

*******

பற்றி எரியும் காட்டுக்குள்ளிருந்து தலைதெறிக்கும் வேகத்தில் பெட்ரோல் லாரி ஒன்று பாய்ந்து வருவதைக்கண்ட கொரிய வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.லாரியில் ஏற்கனவே நெருப்பு பற்றி எரிந்து கொண்டிருந்தது....சாலையின் பள்ளமான இடத்தில் டாங்கியும் கேட்டும் இருந்தன.

"லாரியின் டயர்களை சுடுங்கள்" என அலறினான் ஒருவன்.

"டயர் என்ன டயர்?கிடைத்த இடத்தில் சுடுங்கள்" என உத்தரவு போட்டார் அதிகாரி.

பாலமணி கட்டை ஒன்ரை எடுத்தாள்.ஸ்டியரிங் வீலுக்குள் நுழைத்து ஆகிசிலரேட்டரை கட்டையால் அமுக்கினாள். கட்டையின் அடிப்பாகத்தில் ஷூ ஒன்று கட்டப்பட்டிருந்தது.ஆகிசிலரேட்டரை தரையோடு தரை அழுத்தி விட்டு கட்டையை ஸ்டியரிங்வீலில் கட்டிவிட்டு கதவை திறந்துகொண்டு வெளியே குதித்தாள்.

பின்னால் வந்த ஜீப் பிரேக் போட்டு நின்றது.சுதர்சனும் அரவிந்தும் இரங்கி பாலமணியை தூக்கி ஜீப்பில் போட்டனர்.

முன்னே கொலைவெறியுடன் லாரி கேட்டை நோக்கி ஓடியது.

துப்பாக்கிகுண்டுகள் லாரி டயரை சுட்டு பஞ்சராக்கின.இருந்தாலும் டயர்கள் தரையில் தேய்ந்து பொறிபறக்க டாங்கியில் மோதியது லாரி. கேட்டும் டாங்கியும் வீரர்களும் துண்டுகளாக வெடித்து சிதறினர்.

மீதமிருந்த கேட்டின் பகுதியை உடைத்துக்கொண்டு எல்லையை தாண்டி தென்கொரியாவினுல் நுழைந்தது ஜீப். ஐந்தாவது நிமிடத்தில் ஜீப்பை தென்கொரிய வீரர்கள் சூழ்ந்தனர்.

"தப்பிவிட்டோம்" என்றார் சுதர்சன்."உங்கள் அதிகாரியுடன் பேசவேண்டும்.நாங்கள் வருவது அவருக்கு தெரியும்" என வீரர்களிடம் சொன்னார்.

*****

பத்து நிமிடம் கழித்து எல்லையிலிருந்து ஹலிகாப்டர் ஒன்று அவர்களை ஏற்றிக்கொண்டு சியோல் நோக்கி விரைந்தது.

சில நிமிடம் கழித்து பின்னால் இன்னொரு ஹெலிகாப்டர் தொடர்ந்தது. துப்பக்கியால் சுட்டது.

"வட கொரிய ஹெலிகாப்டர்.எல்லை தாண்டி வருகிரது" என்றார் சுதர்சன்.

"நமது ஹெலிகாப்டரில் துப்பாக்கி இல்லை" என்றார் பைலட்."ரொம்ப நேரம் தப்பிக்க முடியாது. இருந்தாலும் சற்று போக்குகாட்டி பார்க்கிறேன்"

வடகொரிய பைலட் இயந்திர துப்பக்கியை எடுத்தான்.முன்னே சென்றுகொண்டிருந்த ஹெலிகாப்டரை குறிவைத்தான்.

(அடுத்த பகுதியில் முற்றும்)

5 comments:

வெட்டிப்பயல் said...

பயங்கர ஸ்பீடா போகுது கதை..

அடுத்த பகுதிக்காக ஆவலுடன்,,,,

Unknown said...

நன்றி பாலாஜி. அடுத்த பகுதி நாளைக்கு எழுதுகிறேன்

Anonymous said...

DMZ பற்றி கொஞ்சம் விக்கிபீடியாவில் தேடி இருந்தீர்கள் என்றால் மிகவும் மெருகேற்றி இருக்கலாம்...

அந்த ஏரியாவில் ஏற்கனவே சுற்றியதால் கதை கொஞ்சம் காமெடியாகவே தோன்றியது எனக்கு...

வடகொரியா ஹெலி எல்லாம் தென் கொரியாவுக்கும் வரமுடியாது....அடிக்கொரு அமெரிக்க சோல்ஜர் டீ மிலிட்டரைஸுடு ஜோனில் உட்கார்ந்திருக்கான்...

இருந்தாலும் கதை செல்லும் வேகம் பிடித்திருக்கிறது...தமிழ் சினிமா போல் லாஜிக் பற்றி சிந்திக்காமல் படித்தால் ரசிக்கலாம்...:)

வெட்டிப்பயல் said...

அடுத்த பகுதி எங்கே?

Unknown said...

ரவி

கொரியா பற்றிய தகவலுக்கு நன்றி.ஊர் போகுமுன் கடைசியாக மட்டுறுத்திய பின்னூட்டம் உங்களுடையது.அதனால் அப்போதே பதில் போட முடியவில்லை.

பாலாஜி

ஒரு வாரம் வாஷிங்டனில் சுற்றிவிட்டு வந்ததால் எழுத முடியவில்லை.நாளை அடுத்த பகுதியை போட்டுவிடுகிறேன்.நன்றி