சரியாக ஒரு வருடத்துக்கு முன்பு கிளைமேக்சில் நிறுத்திய தொடர்...தொடரை நிறுத்தினேனே தவிர அந்த கதை என் மனதை விட்டு அகலவே இல்லை....
இதோ சந்துருவின் கதை...மீண்டும்..
(கதை சுருக்கம்)
சந்துருவின் மனைவி உமா திடீரென்று கொரிய மடம் ஒன்றில் பிக்குணி ஆகி விடுகிறாள். அவளை தேடி சந்துரு மும்பை செல்கிறான்.அந்த மடத்தில் தன் மகளை இழந்த இளங்கோ எனும் டாக்டரை சந்திக்கிறான்.இருவரும் சேர்ந்து திட்டம் போட்டு மும்பை மட தலைமை பிட்சு அரவிந்சாமியை கடத்துகின்றனர்.பிட்சுவை அடித்து விஷயத்தை கறந்து ஒரிசாவிலுள்ள மடத்துக்கு போய் அங்கிருந்த 14 பிட்சுகளை கொல்கின்றனர்.ஆனால் உமாவும் இளங்கோவின் மகள் தேன்மொழியும் கொரியவில் இருப்பதாக அறிந்து பிட்சுவேடம் போட்டு உளவாளிகளூடன் சேர்ந்து வடகொரியாவில் போய் சேர்கின்ரனர்
இளங்கோவின் மகள் தேன்மொழியை சந்திக்கின்றனர்.மத தலைவர் ஒஷாரா நல்லவர் என தெரிகிறது.பிட்சு அரவிந்சாமி உமாவின் முன்னாள் காதலன் என்பது தெரிகிறது. உமா ராஜதுரோக குற்றம் சாட்டப்பட்டு கடும்காவலுக்கு மத்தியில் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.உமாவை காப்பாற்ற சந்துரு பெண்ணாக மாறும் ஆபரேஷன் செய்துகொண்டு பாலாமணி என்ற பெயரில் ஜெயிலுக்குள் போகிறான்.ஒஷாராவின் உதவியுடன் உமா இருக்கும் செல்லிலேயே அடைபடுகிறான்.உமாவுக்கு அவனை அடையாளம் தெரியவில்லை. இனி...
கீசக வதம்
"மணி 9 ஆச்சு..பசிக்குது" என்றாள் பாலாமணி.
சிறைகதவு திறக்கப்பட்டு இரு தட்டுகள் உருட்டப்பட்டன.
"நூறாயுசு" என்றாள் பாலாமணி.இருவரும் சாப்பிட துவங்கினர்.
ஒரே மூச்சில் சாப்பாட்டை பாலாமணி காலிசெய்தாள்.ஆபரேஷனுக்கு பிறகு அவள் உடல் எடை அதிகரித்திருந்தது.பின்விளைவாக டயாபடிஸ் அதிகரித்திருந்தது.
"பசிக்குதா?" என்றாள் உமா."என் சாப்பாடு கொஞ்சம் எடுத்து கொள்ளுங்கள்"
"வேண்டாம்" என்றாள் பாலாமணி."உடல் இளைக்கட்டும். நல்லதுதானே?"
கம்பிகளுக்கு பின்னே யாரோ வந்து நிற்பது தெரிந்தது.உமாவின் முகம் பயத்தில் வெளிறியது.
"உதவி ஜெயிலர்..என்னை பார்த்து ஆபாசமாக சைகை செய்தபடி இருப்பான்" என்றாள் உமா.
"டார்லிங்..உனக்கு ஒரு நல்ல செய்தி" என்றார் உதவி ஜெயிலர்..."பழைய ஜெயிலர் இன்றுகாலை மாரடைப்பில் இறந்து விட்டார்.அடுத்த ஜெயிலர் பதவி ஏற்கும் வரை நான் தான் ஜெயிலர்"
சஸ்பென்ஸ் வைத்து நிறுத்தினார் ஜெயிலர்.உமாவின் முகத்தில் தாண்டவமாடிய பயத்தை ரசித்தார்.தொடர்ந்தார்.
"உன்னை வரும் சனிக்கிழமையன்று தூக்கில் இட உத்தரவு வந்திருக்கிறது..நடுவே இரண்டு பகல் ஒரு இரவு இருக்கிறது. அதனால்..."
உமா மயக்கம் போட்டு விழுந்தாள்....
"இவள் எழுந்ததும் வேறு அறைக்கு மாற்றப்படுவாள்.தயாராக இருக்க சொல்" என பாலாமணியிடம் சொன்னார் ஜெயிலர். திரும்பினார்.
"சார்..ஒரு நிமிஷம்" என்றாள் பாலாமணி..
ஜெயிலர் திரும்பினார்.."என்ன?" என்றார்.
"சாயந்திரம் வரை நேரம் கொடுங்கள்.நான் பேசி சரி செய்கிறேன்.பதிலுக்கு என்னை ஜெயிலில் அடிக்காமல் நல்லபடியாக கவனித்து கொள்ள சொல்லுங்கள்.."
"டன்" என்றார் அதிகாரி."இவள் ஒழுங்காக இருந்தால் என் க்வார்டர்சுக்கே கூட்டி போய்விடுவேன். இரண்டு நாள் சந்தோஷமாகா இருந்துவிட்டு சாகலாம்.சொன்ன பேச்சு கேட்காவிட்டால் அப்புறம் வார்டர்கள் அனைவரையும் ஏவிவிட்டுவிடுவேன்..அப்புறம் என்னை தப்பு சொல்ல கூடாது"
****
இரவு 7 மணிக்கு ஜெயிலர் அறைக்கு திரும்பி வந்தார். உமா மூலையில் சாய்ந்து உட்கார்ந்திருந்தாள்.
"என்ன சொல்கிறாள்?" என கேட்டார் ஜெயிலர்.
"வேறு என்ன சொல்லமுடியும்?ஓகேதான்..ஆனால் கொஞ்சம் பயப்படுகிறாள்.இரண்டு நாட்களுக்கு என்னையும் கூட கூட்டிபோனால் பேசி மனதை மாற்றிவிடுவேன்"
"சரி..சரி..இருவரும் வெளியில் வந்து ஜீப்பில் ஏறுங்கள்" என்றார் ஜெயிலர்.
ஜீப் ஜெயிலரின் க்வார்டர்சை நோக்கி விரைந்தது.ஜெயிலின் அதிக பாதுகாப்பான இடத்தில் க்வார்டர்ஸ் இருந்தது.ஜீப்பில் இருந்து மூன்றுபேர் இறங்கி க்வார்டர்ஸுக்குள் நுழைந்தனர்.
"இப்பவே ஆரம்பிக்கலாமா?சாப்பிட்டுவிட்டு ஆரம்பிக்கலாமா?" என கேட்டார் ஜெயிலர்.
"இப்பவே ஆரம்பித்துவிடலாம்.நல்ல விஷயத்தை ஒத்திபோட கூடாது" என்றாள் பாலாமணி.எட்டி ஜெயிலரின் கழுத்தை பிடித்தாள்.அடிவயிற்றில் ஒரு எத்து..
****
ஜெயிலர் மயக்கம் தெளிந்து எழுந்தபோது கட்டி போடப்பட்டிருந்தார். பாலாமணியின் கையில் அவரது துப்பாக்கி இருந்தது.
"போலாமா?" என்று கேட்டாள் பாலாமணி.
****
ஜெயிலரின் ஜீப் நடுஇரவில் வந்தபோது எந்த கேள்வியும் கேட்காமல் ஜெயில் கேட்டை திறந்தனர் காவலர்கள்.ஜெயிலர் ஏனோ மூட் அவுட்டில் இருப்பதாக தோன்றியது.வழக்கமான டிரைவருக்கு பதில் புது டிரைவர். ஜீப் சில மைல் தூரம் போனதும் ஜீப்பில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது.ஜெயிலரின் உயிரற்ற உடல் சாலையோரத்தில் விழுந்தது.ஜீப் நிற்காமல் சென்றது.
*****
அரவிந்சாமி நன்றாக தூங்கிக்கொண்டிருந்தார்.போன் அடித்ததும் எடுத்து பேசினார்.
"உமாவுடன் தப்பி விட்டாயா?நிஜமா?சரி..நானும் டாக்டரும் தேனுவும் உடனே கிளம்புகிறோம். எங்கே பதுங்கி இருக்கிறீர்கள்? ஜாக்கிரதை" உமாவும் டாக்டரும் தேன்மொழியும் உடனடியாக கிளம்பினர்.
****
"அது அரவிந்தா?" என்றாள் உமா...அரவிந்தும் இளங்கோவும் அருகே ஓடிவந்தனர்.
"அரவிந்த்.." என அருகே ஓடினாள் உமா.."எனக்காக கொரியா வந்தாயா?" பாலாமணி ஏனோ திரும்பி நின்று கொண்டாள்.
(இன்னும் இரண்டாவது பகுதியில் முடியும்)
4 comments:
கதைச்சுருக்கத்தோடு திரும்பி வந்தீங்களோ தப்பிச்சீங்க!
ஆனா, ஸன் டிவி சீரியல் மாதிரி அவசர அவசரமா முடிக்கற மாதிரி ஒரு ஃபீலிங்!
என்னமோ பண்ணுங்க!
பாலாமணி திரும்பிக் கொண்டது[உமா அர்விந்தைப் பார்த்து அப்படி சொன்னதும்] மனசு கொஞ்சம் சங்கடப் பட்டுது!
மறுபடியும் ஆரம்பிச்சாச்சா???
சூப்பர்...
இன்னும் கொஞ்சம் விரிவாக எதிர்பார்த்தேன்...
நல்ல விறுவிறுப்பான கதை
விஎஸ்கே பாலாஜி செந்தழலாரே நன்றி
விஎஸ்கே
கதையை அவசர கோலத்தில் கண்டிப்பா முடிக்க மாட்டேன்.கொஞ்சம் நீளமா அடுத்த இரண்டு பகுதியும் எழுதி முடிச்சுடுவேன்.
செந்தழலாரே
நீங்க இதை படித்து வருகிறீர்களா?மிக்க மகிழ்ச்சி..நன்றி..உங்களுக்கும் தொடரை இன்னமும் நினைவு வைத்திருக்கும் நண்பர்கள் பாலாஜிக்கும் விஎஸ்கேவுக்கும்
Post a Comment