Monday, June 18, 2007

302. கோடையை வெல்வது எப்படி?

இந்த வருட குளிர்காலம் படுத்தி எடுத்து விட்டது. தொடர் பனிமழை, ஸ்னோ ப்ளிசார்ட் என டென்வரில் குளிர் படுத்தி எடுத்ததால் எப்படா வெயில் காலம் வரும் என ஆசையாய் இருந்தேன். ஆனால் வெயில் காலத்தில் அனலடிக்கும் கோடையை சுத்தமாக சமாளிக்க முடியலை.எப்படா ஆகஸ்ட் செப்டெம்பர் வரும்னு இருக்கு:)

கோடையை சமாளிக்க செய்த முதல் காரியம் பெப்சி, கோக் குடிப்பதை நிறுத்தியது. இவை கோடைக்கு ஏற்ற பானங்களே அல்ல. ஏன் என்றால் இவற்றில் காஃபின் அதிகம் இருப்பதால் இவை உடலில் உள்ள நீரை உறிஞ்சி எடுத்து விடுகின்றன.அதாவது அரை லிட்டர் பெப்சி குடித்தால் அது அரை லிட்டருக்கும் அதிகமான அளவு சிறுநீரை உற்பத்தி செய்கிறது. ஆக உடலில் நீர் சத்து குறைந்துவிடும். தாகமாக இருக்கிறது என்று கோடையில் இவற்றை அதிகம் குடிப்பது ஆபத்து.அதனால் பெப்சி, கோக் வகையறாக்களை முழுக்க நிறுத்தி விட்டேன்.

அதற்கு பதில் லிப்டன் க்ரீன் டீ குடிக்க ஆரம்பித்து விட்டேன். டயட் டீ அருந்துவதால் சுத்தமாக ஒரு கலோரி கூட சேர்வது இல்லை. க்ரீன் டீ இந்தியா மற்றும் சீனாவின் இயற்கையான பானம். தினமும் ஒரு லிட்டர் கோக் குடித்து வந்த நான், இப்போது தினமும் அரை லிட்டர் க்ரீன் டீ குடிக்கிறேன். அதில் ஜின்செங், தேன் முதலிய பல மூலிகைகளை சேர்க்கிறார்கள். கோடை முடிந்த பின்னும் கோக்குக்கு திரும்பும் உத்தேசம் இல்லை.

கோடையில் அதிக அளவு மினரல் மற்றும் வைடமின்கள் வியர்வையில் வெளியேறிவிடும் என்பதால் ரெகுலராக மல்டி-வைடமின் சப்ளிமெண்டுகளை சாப்பிட துவங்கி விட்டேன். கோடையில் நீர் இழப்பை தடுக்க அதிக அளவில் நீர் பருக வேண்டும். சூடான காப்பி, டீ, பால் எல்லாம் நிறுத்தி விட்டு குளிர்பால், காஃபி மோச்சா, ஃப்ரப்புசினோவுக்கு மாறியாகி விட்டது.

பழமும், காய்கறியும் எனக்கு அலர்ஜி.நேரடியாக சாப்பிட பிடிக்காது. ஆனால் ஆரஞ் ஜூஸ், மாம்பழ ஸ்க்வாஷ், ஆப்பிள் செடார் என வாங்கி வைத்துள்ளேன். மாம்பழ ஸ்க்வாஷில் பாலை ஊற்றி மேங்கோ லஸ்ஸி செய்ய முயன்றேன். நன்றாகத்தான் இருந்தது.காய்கறி சாப்பிட பிடிக்காததால் V8 கேன் வாங்கி குடித்துகொண்டிருக்கிறேன்.

உணவு வகைகளிலும் மாற்றம். அதிக காரமாகவும், மசாலாவோடும் இருக்கும் பிரியாணி, தந்தூரி, மசலா வகைகளை ஒதுக்கிவிட்டு நம் ஊர் உப்புமா, சாம்பார் வகைக்கு மாறியாகிவிட்டது. கோடையில் மசாலா சாப்பிடுவது ஏற்றது அல்ல.

முக்கியமாக கோடையில் செய்ய துவங்கியது உடற்பயிற்ச்சி. முதலில் தினம் ஒரு மணிநேரம் என ஆரம்பித்து, இப்போது தினமும் 2 மணிநேரம் நடக்க துவங்கியிருக்கிறேன். உடற்பயிற்ச்சி உடலில் இருக்கும் கெட்ட நீரை வெளியேற்றுகிறது. இரவு நன்றாக தூக்கம் வர வைக்கிறது.

கோடையில் வந்து சேர்ந்த ஒரு கெட்ட பழக்கம் சினிமா பார்ப்பது. பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் தீவிரமாக சினிமா பார்க்க துவங்கிவிட்டேன். அற்புதத்தீவு, நான் அவனில்லை, பட்டியல், ஆட்டோகிராஃப் என பல வருடங்களாக பார்க்காத படங்களை பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

இப்ப மீண்டும் குளிர்காலம் வரக்கூடாது என்று தோன்றுகிறது:)

9 comments:

வடுவூர் குமார் said...

அற்புதத்தீவு, நான் அவனில்லை
ஆமாம் இதெல்லாம் எப்ப வந்த படங்கள்?
:-))
தமிழ் படங்களை எப்போதும் என்கேயிருந்தும் வேண்டுமானாலும் பார்க்கலாம் என்பது என் எண்ணம்.
நடை பயில்வது நல்ல காரியம்,உடலுக்கும் நல்லது.தொடருங்கள்.

நாகை சிவா said...

தலைவா நீங்க சொன்ன மாதிரி கோக், பெப்சி எல்லாம் பூச்சு மருந்து லிஸ்டல சேர்த்து அதை தொடர்ந்து குடிப்பதை விட்டாச்சு... மால்ட் டீரிங்(பீர் நான் அல்காலிக்)தான்.. இல்லனா ஏதும் எனர்ஜி டிரிங்... சில சமயங்கள் தவிர்க்க முடியாமல் குளிர் பானங்கள் குடிக்க நேர்ந்தால் டையட் பெச்சி, கோக்.. மிரிண்டா, மாசா... தான்..

Unknown said...

குமார் சார்

அதெல்லாம் சற்று பழைய படங்கள் தான்.ரொம்ப நாளா படம் பார்க்காமல் இருந்து இப்ப பார்க்க ஆரம்பித்ததால் பழசு, புதுசு என எல்லாவற்றையும் பார்க்கிறேன்.நடைபயிற்சியை விடாது தொடர இருக்கிறேன்.நன்றி

நாகையாரே

ஆம்..கோக் பெப்சி எல்லாம் நிஜமாகவே உடலுக்கு கெடுதல்.நீங்கள் சொன்ன லிஸ்டில் இருப்பவை அனைத்தும் நல்லது.பழசாறும் சேர்ந்தால் இன்னும் உடலுக்கு நல்லது

Anonymous said...

செல்வன்

நீங்க கோக் பெப்சி குடிக்கிறத நிறுத்தினதுக்குப் பதிலா தமிழ் சினிமா பார்ப்பதை நிறுத்தியிருந்தால் உடலுக்கும் மனதுக்கும் நல்லதாக இருந்திருக்கும் :)) வாலு போய் கத்தி வந்த கதையாக கோக் போய் தமிழ் சினிமாவா? இளம் வயது நன்றாகச் சாப்பிட்டுக் கொள்ளுங்கள் இன்னுமொரு பத்து வருடம் போனால் எதையுமே சாப்பிட முடியாது. கலோரி கணக்குப் பார்க்க ஆரம்பித்து விடுவோம். அது சரி, சாப்பாடு, குளிர்பானம், சினிமா, உடற்பயிற்சி என்று அமர்க்களப் படுகிறது மீண்டும் லீவு விட்டு விட்டார்களோ?

அன்புடன்
ச.திருமலை (உன்மையிலேயே :))

இலவசக்கொத்தனார் said...

நான் எப்பொழுதுமே கோக் வகையாறாக்களை குடிப்பது இல்லை. கோடைக்கு இங்கு பதப்படுத்தப் பட்ட இளநீர் கிடைக்கிறது. அதுதான் இப்போதைக்கு. பின் ஒரு நாளைக்கு ஒன்றரை லிட்டட் தண்ணீராவது குடிக்க வேண்டுமென கணக்கு வைத்துக் கொண்டு இருக்கிறேன். ஆனால் எனக்கு பிடித்தது குளிர்காலம்தான்.

இலவசக்கொத்தனார் said...

உங்களை எட்டு விளையாட்டிற்கு அழைத்துள்ளேன். மேல் விபரங்களுக்கு இங்கு வந்து பார்க்கவும்.

Unknown said...

திருமலை,

கோக்கை விட மோசமா தமிழ் சினிமா? ஒரு வேளை சினிமா என்பது சாராயம் மாதிரியோ?:))லிமிட் தாண்டாம சாராயம் குடிச்சா தப்பில்லைதானெ:)

லீவு விடவில்லை...சாயந்திரம் செய்யும் அட்டகாசம் தான் இதெல்லாம்;))

Unknown said...

கொத்ஸ்

ஆம்..தினமும் ஒன்றரை லிட்டர் நீர் குடிப்பது அதுவும் கோடையில் குடிப்பது மிக நல்லது.அது நாம் அருந்தும் கோக் போன்ற மற்ற பானங்களின் அண்ணிக்கையை குறைக்கும் என்பதால் நீர் மிக சிறந்தது,

இங்கே மெடிட்டரேனியன் கிராசரியில் இளநீர் கிடைக்கிறது.சிலசமயம் வாங்கி குடிப்பதுண்டு.

Anonymous said...

டென்வெர்ல இருந்தப்ப குளிர் காலத்தில வெளிய சுத்த முடியாம நாலு மாசம் ஒரெ வேலை சினிமா பார்பதுதான்.. எப்பொவாவது பொவ்லிங், ஒரெ போர்

வெயிலப்பொ படம் அவ்வலொ பாக்கலை
சரவணன்