Tuesday, June 19, 2007

303. ஒருவன் ஒருவன் சூப்பர் ஸ்டார்

சூப்பர் ஸ்டார், சூப்பர் ஸ்டார் என்று ஒருவர் இருந்தார். திரையுலகில் இவர் போல் யாரும் இதற்கு முன் வெற்றிகள் அடைந்ததில்லை, இதற்கு பின்னும் அடையப்போவதில்லை என்ற என்ற புகழை அடைந்த வெகு சிலரில் அவரும் ஒருவர்.அவருக்கு மக்களிடையே கிடைத்த புகழ் ஸ்டார் ஒருவருக்கு பொறாமையை ஏற்படுத்தியது.

"சூப்பர் ஸ்டார் போல் நானும் புகழ் பெறுவது எப்படி?" என யோசித்தார். தயாரிப்பாளர் ஒருவரை கூப்பிட்டு "உங்களுக்கு ஏன் சூப்பர் ஸ்டாரை பிடிக்கிறது?" என கேட்டார்.

"அவர் இத்தனை பெரிய நடிகராக இருந்தும் எந்த ஈகோவும் இல்லாமல் இருக்கிறார்.அவுட்டோர் ஷூட்டிங்கின்போது 30,000 ரூபாய் வாடகையில் அவருக்கு ஐந்து நட்சத்திர ஓட்டலில் ரூம் போட்டேன். வேண்டாம் என்று சொல்லிவிட்டு சாதாரண அறையிலேயே தங்கினார். ஷூட்டிங்குக்கு லேட்டாக வருவதில்லை. சொன்ன வார்த்தை மாறுவதில்லை. தயாரிப்பாளரின் கஷ்டம் தெரிந்த நடிகர் அவர்" என்றார் தயாரிப்பாளர்.

அடுத்த தடவை அவுட்டோர் ஷூட்டிங் போனபோது ஸ்டார் விலை குறைந்த ஓட்டல் அறையில் தங்கினார்.ஷூட்டிங்குக்கு சொன்ன நேரத்தில் போனார்.தயாரிப்பாளர்களிடம் அன்பாக இருக்க முயன்றார்.

சிலமாதங்கள் இப்படியே போயின. ஆனாலும் ஸ்டார் புகழ் அடைவதாக காணோம்.கோபமடைந்த ஸ்டார், துணை நடிகர் ஒருவரை கூப்பிட்டு "உனக்கு சூப்பர்ஸ்டாரை ஏன் பிடிக்கிறது?' என்று கேட்டார்.

"அவர் எங்களை மனிதர்களாக மதிக்கிறார்.அன்பு செலுத்துகிறார்" என்று சொன்னார் துணை நடிகர்.

ஸ்டாரும் அடுத்த நாள் முதல் துனை நடிகர்களை மதிக்க துவங்கினார்.அன்போடு பழகினார்.

நாட்கள் கடந்தன.தன் புகழ் உயர்வதாக ஸ்டாருக்கு தெரியவில்லை.எல்லோரும் அவரைப்பார்த்து நக்கலாக சிரிப்பதுபோல் தெரிந்தது.

கோபமடைந்த ஸ்டார் ஒரு டைரக்டரை கூப்பிட்டு திட்டினார்.'சூப்பர் ஸ்டார் செய்வது எல்லாவற்றையும் நானும் செய்கிறேன்.ஆனால் என்னை யாரும் புகழ்வதில்லை.அவரை தான் புகழ்கிறார்கள்.ஏன்?"

"அவரை புகழ காரனம் அவர் படம் பாக்ஸ் ஆபீசில் அடையும் வெற்றிகள் தான்" என்றார் டைரக்டர்."நீங்களும் வெற்றிபெற்றால் உங்களையும் எல்லோரும் புகழ்வார்கள்."

ஸ்டாரால் இதை மட்டும் கடைசிவரை அடைய முடியவில்லை.கடைசிவரை சாதாரணமாக இருந்துவிட்டு மறைந்தார்.

8 comments:

நாமக்கல் சிபி said...

//கோபமடைந்த ஸ்டார் ஒரு டைரக்டரை கூப்பிட்டு திட்டினார்.'சூப்பர் ஸ்டார் செய்வது எல்லாவற்றையும் நானும் செய்கிறேன்.ஆனால் என்னை யாரும் புகழ்வதில்லை.அவரை தான் புகழ்கிறார்கள்.ஏன்?"//

எஜமான் படத்துல "வல்லவராயன்" நெப்போலியன் சொல்லுற டயலாக் மாதிரி இருக்கு!

Unknown said...

சிபி,

உண்மைதான். வல்லவராயன் கேள்விக்கு பதில் இதுதான்:))

Unknown said...

கதை நல்லாயிருக்குண்ணா :)

Unknown said...

நன்றி தேவ். சும்மா எழுதின கற்பனை கதைதான் இது:))

வடுவூர் குமார் said...

இதே டிராக்- மஹாபாரத்தில் வருகிறது என்று நினைக்கிறேன்.வேறு பொருளில்.

Unknown said...

குமார் சார்

நிஜமாவா?எனக்கு அது என்ன விவரம்னு தெரியலை.நீங்க சொன்னா எல்லோருக்கும் பயன்படுமே"?

வீ. எம் said...

// நன்றி தேவ். சும்மா எழுதின கற்பனை கதைதான் இது:))//
கற்பனை.. நம்பிட்டோம் திரு செல்வா அவர்களே..
நீங்க காமடி எதுவும் பண்ணலயே... :)

வீ எம்

Unknown said...

V.M

இனி தொடர்ந்து வரவிருக்கும் பின்னூட்டங்களிலும் பதிவுகளிலும் தான் இருக்கு காமடி:)