Wednesday, June 13, 2007

300.அதனால்தான் சூப்பர் ஸ்டார்

1992ம் வருடம் ரஜினியின் கார் சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ஒரு போலிஸ் ஜீப் ரஜினியின் காரை ஓவெர்டேக் செய்து, ரஜினியின் காரை நிற்கும்படி சிக்னல் செய்தது.

"முதல்வரின் கார் போகும்வரை இங்கு டிஃராபிக் நிறுத்தப்படுகிறது. ஓரம் கட்டி நில்லுங்கள்" என ரஜினியை எச்சரிக்கை செய்தார் போலிஸ் அதிகாரி.1991 - 1996ல் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது மணிக்கணக்கில் டிராஃபிக்கை நிறுத்துவது சென்னை போலிஸின் வழக்கம்.

ஒன்றும் பேசாமல் காரை ஓரம் கட்டி நிறுத்திவிட்டு கீழே இறங்கினார் சூப்பர் ஸ்டார். ரோட்டோரமாக இருந்த பெட்டி கடை ஒன்றுக்கு நடந்து போனார். ஒரு பாக்கட் சிகரெட்டை வாங்கி, ஒரு சிகரெட்டை உருவி புகைபிடிக்க துவங்கினார்.

சூப்பர்ஸ்டாரை சுற்றி கூட்டம் சேர துவங்கியது. விரைவில் அந்த ஏரியாவே ஸ்தம்பித்து போனது. எங்கெங்கிருந்தோ எல்லாம் மக்கள் வெள்ளம் சூப்பர் ஸ்டாரை காண ஓடி வந்தது. ராதா கிருஷ்ணன் சாலையே ஜாம் ஆகி, முதல்வரின் கார் மட்டுமல்ல, ஈ, காக்கா கூட நுழைய முடியாத அளவு கூட்டம் கூடியது.

கூட்டத்தை விலக்கிகொண்டு போலிஸ் அதிகாரிகள் ஓடி வந்தனர். "முதல்வர் அவரது வீட்டை விட்டு கூட கிளம்ப முடியாமல் இருக்கிறார். தயவு செய்து நீங்கள் வீட்டுக்கு போங்கள்." என கெஞ்சினர் போலிசார்.

"முதல்வர் போகட்டும். நான் வெயிட் செய்கிறேன். வெயிட் செய்வதில் எனக்கு எந்த சிரமுமில்லை" என்றார் தளபதி.

'அய்யா சாமி' என்று கெஞ்சி கூத்தாடி அவரை காரில் ஏற்றி வழி அனுப்பி வைத்தது போலிஸ்.அவர் அங்கிருந்து கிளம்பும் வரை அம்மா தனது வீட்டை விட்டு நகர முடியாமல் இருந்தார்.

'தமிழ்நாட்டுக்கு முதல்வர் நீயாக இருக்கலாம், மக்கள் மனதில் என்றும் இருப்பது நானே' என்பதை அம்மாவுக்கு சூப்பர்ஸ்டார் உணர்த்திய சம்பவம் இது.

அதனால்தான் அவர் சூப்பர் ஸ்டார்.

நன்றி: பாலிவுட் நியூஸ், மற்றும் திரு கேபிடல்

25 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

பொறுத்தார் ராதாகிருஷ்ணன் சாலையை ஆள்வார்! :-))

சிவாஜிக்கு, இது அப்பிடைசரா, செல்வன்? :-)

-L-L-D-a-s-u said...

இந்த கதையை இப்படி திரித்துவிட்டார்களா? அவர் வெய்ட் பண்ணினார். அவரைச் சுற்றியும் கூட்டம் சேர்ந்தது . ஜெ சென்றவுடன் அவரும் சென்றார். இதுதான் அப்போதைய செய்தி.

ஆனால் அந்த நிகழ்ச்சியின் விளைவால் 'ஈகோ' உருவாகி, அதனால் அதிமுக தோற்ற தேர்தலில்
வாய்ஸ் கொடுத்து, அப்புறம் 'தைரியட்சுமி'ன்னு சொன்னதெல்லாம் இதன் தொடர்ச்சிதான்

Unknown said...

கார்
போலிஸ்
[ஜீப்]
சிக்னல்
டிஃராபிக்
[சூப்பர் ஸ்டார்]
ரோட்டோரமாக
பாக்கட்
சிகரெட்டை
ஏரியாவே
ஜாம்
வெயிட
நியூஸ்

een?

_______
CAPitalZ
ஒரு பார்வை

வடுவூர் குமார் said...

300வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

சதுர் said...

ரஜினி பிள்ளையாண்டானின் சிவாஜி படம் விமர்சனம் எழுதிருக்கேன். வந்து பாருங்கோ.

Anonymous said...

300 க்கு வாழ்த்துக்கள் செல்வன்!

உங்கள் அபிமானி
மஸ்கிட்டோ மணி

SurveySan said...

உடான்ஸுங்க இது.

ஒண்ணு பத்தாக்கி, பத்தா இருபதாக்க்கி -- சொல்லித் தரணுமா நம்ம மீடீயாவுக்கு:)

Pavals said...

நீங்களுமா செல்வன் :)

Anonymous said...

ரீல் உடறதுக்கு டாலர் கில்வனுக்கு சொல்லியா தரணும்?

ramachandranusha(உஷா) said...

அந்த எடத்துல வடிவேலு இருந்திருந்தா கூட கூட்டம் கூடியிருக்கும் :-)

Anonymous said...

செலவன்,
ரஜினி,நம்ம மஞ்ச துண்டு அய்யாவுக்காக பிரத்யேகமா சினிமாவைக் காட்டினதுக்கு,ஏதாவது அர்த்தம் இருக்குதா?

Anonymous said...

சென்னைப் பட்டிணத்தை பாத்திருக்கீங்களா இல்லையா?

பூனைக்குட்டி said...

உஷாக்கா, வடிவேலுவையும் ரஜினியையும் நீங்க ஒப்பிட்டதை, ரஜினியோட எதிரி கூட ஒத்துக்க மாட்டாங்க.

என்னவோ நல்லாயிருந்தா சர்தான்.

சுவாமி said...

செல்வன்,

Ticket வாங்கிட்டீங்களா? நான் 15ம் தேதி பார்த்திருவேன். சில வயித்தெரிச்சல் பார்ட்டிங்களும் பழசயெல்லாம் மனசில வச்சிக்காம, தன்மானத்த தள்ளி வச்சிட்டு, சிவாஜி பார்க்க வரணும்னு அன்போட கேட்டுக்கிறேன்!!!!

என் நெருங்கிய நண்பனோட (ரஜினிய சுத்தமா பிடிக்காத, என்னோட alter ego அவன்) நடந்த email chat சுருக்கமா கீழே. Illustrative ஆ இருக்கிறதால:

நான்: ஆமா 15த் அன்னிக்கு 50 லிட்டர் பால் order பண்ணிட்டியா?

அவன்: பால் அன்னிக்கு ரொம்ப டிமாண்ட். அதனால மாடு குடுக்கிற இன்னோன்னு order பண்ணிட்டேன்.

நான்: பாத்துடா. எதையாவுது குடிச்சு உடம்பை கெடுத்துக்காத.

அவன்: ..long explanation..

நான்: தலைவர் punch dialog மாதிரி நச்சுனு இருக்கனும். நான் பால் order பண்ணபோறேன்., அபிஷேகமோ குடிச்சாலோ பரவாயில்லை. நீ இன்னோன்னு order பண்ணப்போற. உடம்பு கவனம்.

அவன்: You may think it is harmless to have a Thalaivar and just have fun. I have seen how it affects in the Rural areas first hand. I don't say stop watching movies just don't be obsessed with it (But then what to do at the office all day long, right?).

நான்: It would definitely be wrong to be obsessed, whether it is an actor or a politician or a saamiyaar, to the extent you start neglecting your own duties. Even when I was skipping school and going to Rajini movies in XXXXXXX, I didn't stop studying. Here at office, I don't keep piling up work, and only read about Rajini (Thalaivarae sollirukkar; kadamaiyai sei nnu!!). But in general, agree with you. There are millions for whom this hero worship is like a drug. Bane of India. Not because of Rajini. He just happens to be the biggest draw for such adulation.

அவன்: You may skip school and be smart enough to get things done when it matters but indirectly you might be setting a bad example for some who would do the skipping part and miss out on the gettings things done part. I think we should treat the movie the way it deserves and stop fussing about it.
In our generation Movies in India are destroying other Art Forms. And then Pappans are destroying whatever is left. Movies in India have much more vulgar, obscene and violent. No one talks about anything but Movies and Serials.
Most don't have any hobbies besides Movies and TV.

நான்: That is where I disagree. It is not my role to be a role model for everyone. Should I be watching my behavior because someone else may take the bad things I do and miss the good things? That would apply to almost anything hedonistic that we do to add spice to our life, and have pleasure. I can be role model to my kids or yours, but not to all. Treat Movie the way it deserves; yes, and treat Rajini with the adulation he deserves!! Not trying to be funny, but we all need to let our hair loose, have fun, be a little less serious, and drop the inhibitions for somethings occasionally. Mine happens to be a Rajini film once in two years.

Aah, and who dragged paarpaans now?

அவன்: Yes otherwise why not walk naked on the street. I don't know if you guys have some secret gathering and passed a resolution on what to say to the outsiders. A typical Rajini Fan (including my Sis) starts out with completely insane utterances, the main objective seems to be to get the disinterested person like me in to an argument. Work them up and see if he is all pumped up, calling you crazy and all. Then end up with something along the lines of "Oh you have to lighten up, we need to have fun in life!".

Grow up man. If some one in Srivilliputtur says what you said, it is understandable. But if a XXXX/XXX educated guy like you says that, it confirms my theory that our education system turns "Duds" as far as life goes.

And yes, Its all paapaans conspiracy since they rule the Entertainment world. //

சரி, Let me try and grow up (after June 15th) and then resume the conversation ன்னு இருக்கேன்!!

சுவாமி

Anonymous said...

சுவாமி said...
செல்வன்,

Ticket வாங்கிட்டீங்களா? நான் 15ம் தேதி பார்த்திருவேன். சில வயித்தெரிச்சல் பார்ட்டிங்களும் பழசயெல்லாம் மனசில வச்சிக்காம, த
......

ஸ்ஸ்ஸ்ஸபா இப்பவே கண்ணக் கட்டுதே

சிறில் அலெக்ஸ் said...

படத்துல இந்த சீன வச்சா சூப்பராயிருக்கும்பா.

கொஞ்சம் கற்பனை சேர்ந்திருக்குதோண்ணு தோணுது.

Anonymous said...

Pls see this.

//AIADMK General Secretary Jayalalithaa would watch the movie at a special screening, party sources said.

http://www.hinduonnet.com/thehindu/holnus/009200706142062.htm //

Unknown said...

கண்ணபிரான்,

சிவாஜிக்கு இது வெறும் சூப்தான்.அப்பிடைசர், மெயின் மென்யு, டிஸ்ஸர்ட் எல்லாம் வலைபதிவில் சுடச்சுட வரும் அல்லவா?:)

எல்.எல்.தாஸ்,

நன்றி.இந்த கதைக்கு இப்படி ஒரு வெர்ஷன் இருக்கா?கேள்விப்பட்டதில்லை.,

கேபிடல்

என்ன சொல்ல வருகிறீர்கள் என்று தெரியவில்லை.ஆனால் நீங்கள் தந்த சுட்டிக்கு நன்றி

Unknown said...

அன்பு வடுவூர் குமார் மற்றும் நண்பர் மஸ்கிட்டோ மணி

வாழ்த்துக்கு மிக்க நன்றி.உங்களைப்போன்ற இனிய நண்பர்கள் ஆதரவில்தான் 1.5 வருடங்களாக எழுதுவது சாத்தியமானது.மனம் சோர்ந்த வேளையில் பல நண்பர்கள் அளித்த ஆறுதல் மறக்க முடியாதது

Unknown said...

சர்வேசன்,

இது பேப்பரில் வந்த செய்தி,அதைத்தான் பதிவில் இட்டேன். ஆனால் தாஸ் இதில் ஓரளவு உண்மை இருக்கிறது, ஆனால் நடந்தது வேறு என்கிறார்.

உஷா,

கழைகூத்தாடிக்கும் கூட்டம் கூடும்.புரட்சிதலைவருக்கும் கூட்டம் கூடும். இரண்டு கூட்டத்துக்கும் இடையே உள்ள எண்ணிக்கை வித்யாசம் தான் பார்க்கவேண்டும்.

அனானிமஸ்,

முன்னாள் முதல்வரும், இன்னாள் முதல்வரும் சூப்பர்ஸ்டாரின் ரசிகர்கள் என்பதால் தான் இருவருக்கும் ஸ்பெஷல் ஷோ.

Unknown said...

கொங்கு ராசா

நான் அன்று, இன்றும், என்றும் ரஜினி ர்சிகனே

மோகன் தாஸ்,

கவலை வேண்டாம். சிவாஜியை எதிர்த்தாலும் விளம்பரம், ஆதரித்தாலும் விளம்பரம்:).மொத்தத்தில் சில்வர் ஜூப்ளி உறுதி.

Unknown said...

சுவாமி

நான் டிக்கட் வாங்கலை:).வார இறுதியில் ஊர் சுற்ற போகிறேன்.டிவிடியில் தான் பார்க்க வேண்டும். வயித்தெரிச்சல் கோஷ்டி முதல் ஆளா டிக்கட் வாங்கி வெச்சிருப்பாங்க என்பது உறுதி.

உங்கள் நண்பரும் டிக்கட் வாங்கிருப்பாருன்னு தான் தோணுது. உரையடாலை இட்டதற்கு நன்றி

Unknown said...

அலெக்ஸ்

படத்தில் இந்த சீனை வைத்தால் அம்மா ஆட்கள் அப்புறம் ராம்தாஸ் ஆட்களுக்கு போட்டியா பொட்டி கடத்துவார்களே?:)))

முத்து படத்திலேயே தலைவர் அம்மாவை வாரிட்டார்.

நாகை சிவா said...

300 ஆ

பதிவுலகின் சேவாக்கே... நீ பதிவுலகின் லாரா ஆக வாழ்த்துக்கிறேன்...

ஏற்கனவே ஒரு லாரா இருக்காங்க... நம்ம துளசி தான்...

ஸ்டார் தான் சூப்பர் ஸ்டார் தான்.. என்றுமே...

Unknown said...

நாகையாரே

அன்பான வாழ்த்தால் மனதை நெகிழ வைத்து விட்டீர்கள். உங்களைப் போன்ற இனிய நண்பர்களை அடைந்தது தான் எழுத துவங்கியதன் பலனாக கொள்கிறேன். நன்றி