Wednesday, March 14, 2007

252. அறிவியல் தமிழ்- சாத்தியமா, இல்லையா?-I

'அறிவியல் மொழி' என்பது ஒரு விதத்தில் தவறான கூற்று. அறிவுக்கும், அறிவியலுக்கும் மொழி கிடையாது, எந்த மொழியிலும் அறிவியல் படைப்புகள் வளர தடைகள் கிடையாது என்றாலும் சில மொழிகளில் அறிவியல் படைப்புக்கள் செழித்து வளர்வதும், சில மொழிகளில் அவை தேங்கி நிற்பதும் கண்கூடு. அப்படி அறிவியல் படைப்புக்கள் செழித்து வளரும் மொழிகளை அறிவியல் மொழிகள் என்று எடுத்துக் கொள்வோமானால் தமிழில் நிலைமை அப்படி இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.அப்படி இல்லாவிட்டால் தமிழை அறிவியல் மொழியாக்க என்ன செய்யலாம் என்ற கேள்வியும் எழுகிறது....

இதற்கான பதிலை தேடலாமா?

அறிவியல் முன்னேறுவது peer reviwed journals எனப்படும் ஜர்னல்களால். கணிதம், இயற்பியல், வேதியியல் போன்ற எண்ணற்ற விஞ்ஞானத்துறைகள் முன்னேறுவதும், அவற்றின் வளர்ச்சி அளவிடப்படுவதும் (peer reviwed) ஜர்னல்களால் மட்டுமே. நீங்கள் ஒரு விஞ்ஞானி என ஏற்கப்பட வேண்டுமானால் உங்கள் கட்டுரை ஒன்று ஜர்னல்களில் வெளியாகி இருக்க வேண்டும். அப்படி வெளியாகா விட்டால் நீங்கள் ஒரு விஞ்ஞானியே அல்ல என்று தான் பொருள்.

இப்படிப்பட்ட ஜர்னல்கள் இருக்கும் மொழிகளில் தான் அறிவியல் வளர்கிறது என்று அர்த்தம். அது இல்லாத மொழிகளில் அறிவியல் தேங்கி நிற்கிறது அல்லது சுத்தமாக இல்லை என்று அர்த்தம். உலகில் அப்படி உள்ள பல்லாயிரம் அறிவியல் துறைகளில் வெளிவரும் ஜர்னல்களில் தமிழில் இருக்கும் ஜர்னல்கள் எத்தனை என கூகிளில் தேடிப்பார்த்தேன். ஸ்காலர் கூகிளில் தமிழ் என தமிழில் தட்டினேன். பலன் என்னவோ பூஜ்யம்தான். இலங்கையில் ஆர்ட்லாப் எனும் ஜர்னல் தமிழிலும், சிங்களத்திலும் வெளிவருவதாக தெரிகிறது. மற்றபடி தமிழில் வேறெதுவும் வருவதாக தெரியவில்லை.

ஒரு மொழியில் ஜர்னல்கள் வராவிட்டால் என்ன ஆகும்?

அந்த மொழியில் அறிவியல் சிந்தனைகள் வளர்வது தேங்கி நின்றுவிடும் என்று ஆகும். எந்த மொழியில் அறிவியல் படைப்புகள் வெளிவருகின்றனவோ, அந்த மொழியின் ஆதிக்கம் அறிவியலில் தவிர்க்க இயலாததாகும். அறிவியலில் புகும் அந்த ஆதிக்கம் மற்ற அனைத்து துறைகளிலும் செழித்து வளரும்.

சில உதாரணங்கள் மூலம் இதை விளக்குகிறேன்.

தொலைவை குறிக்க ஆங்கிலத்தில் 'கிலோமீட்டர்' 'மீட்டர்' போன்ற அளவைகள் பயன்படுத்தப்படுகின்றன. தமிழில் 'கல்' 'யோசனை' 'ஒரு அடி' போன்ற அளவைகள் பயன்படுத்தப்படுகின்றன. அறிவியலில் அளவைகள் மிக முக்கியமானவை. ஒரு மீட்டர் என்பதற்கு அறிவியலில் தந்துள்ள விரிவுரை "the distance travelled by light in absolute vacuum in 1/299,792,458 of a second" இப்படி மீட்டருக்கு மிக துல்லியமான விரிவுரையை ஆங்கிலம் தந்துள்ளதால் (மீட்டருக்கு மூலம் லத்தீன்:))) தொலைவை அளக்க பயன்படுத்தப்படும் அனைத்து கருவிகளும் 'ஒரு அடி' எனும் அளவிட்டிற்கு பதில் 'ஒரு மீட்டர்' எனும் அளவீட்டை பயன்படுத்தவேண்டிய அவசியமாகிறது. அப்படி துல்லியமான அளவீடுகள் தமிழில் இல்லாததால் சென்னைக்கும் கோவைக்கும் இடையே உள்ள தொலைவு (300 கல்லுக்கு பதில்) 500 கிலோமீட்டர் ஆகிவிட்டது. ஆங்கிலேயனின் மீட்டர் உலகம் முழுவதற்கும் பொதுவான அளவீட்டு முறையாகவும் ஆகிவிட்டது.(இனி நாம் வேண்டுமானால் மீட்டர் என்பதை ஈரடி என்று மொழிபெயர்த்து வைத்துக்கொள்ளலாம்.அப்படிப்பட்ட மொழிபெயர்ப்பு கட்டாயம் ஒரு மொழியில் அறிவியல் வளர்வதற்கு அறிகுறியல்ல. பர்கரை கோதுமை அடை என்று மொழிபெயர்த்தால் அது தமிழ்நாட்டு உணவாகிவிடாதல்லவா?)

இது ஏதோ மீட்டர், கிலோமீட்டருடன் முடிகிற விவகாரம் என நினைக்க வேண்டாம். இதுபோன்ற லட்சக்கணக்கான அளவீடுகள் அனைத்து விஞ்ஞானத்துறைகளிலும் இருக்கின்றன.அந்த அளவீடுகளில் ஆகப்பெரும்பான்மையானவை ஆங்கிலத்தில் தான் இருக்கின்றன. ஆங்கிலத்தில் இந்த அளவீடுகள் இருப்பது ஆங்கிலம் பேசும் மக்களுக்கு எத்தனை சாதகமாக இருக்கிறது என்பதே பெரும்பாலானோருக்கு தெரியாது.ஒரு சிறு உதாரணம் தருகிறேன்.

சமூக அறிவியல் துறைகளில் ஆய்வு நடத்த விரும்புவோர் ஆங்கிலத்தில் தான் ஆய்வு நடத்த முடியும். வேறுமொழியில் நடத்துவது அவர்கள் விருப்பம் எனினும் வேறுமொழியில் ஆய்வு நடத்தினால் அவர்கள் விஞ்ஞானிகளாக ஏற்கப்படமாட்டார்கள். (ஏன் என்றால் ஆகப் பெரும்பான்மையான ஜர்னல்கள் ஆங்கிலத்தில் தான் இருக்கின்றன. ஆங்கிலக் கட்டுரைகளைத்தான் அவை வெளியிடும்) தமிழ்நாட்டில் இருக்கும் ஒருவர் இத்தகைய ஆங்கில ஜர்னல்களில் பதிப்பிடுவதென்றால் அவர் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

தனது ஆய்வை ஆங்கிலம் தெரிந்த தமிழ்நாட்டு மக்களிடம் மட்டுமே அவர் நடத்த முடியும்.........

ஆங்கிலம் தெரியாத மக்களிடம் ஆய்வு நடத்தி அதை ஆங்கில ஜர்னல்களில் பதிப்பிடுவது எப்படி?

1) (நொம்ப கஷ்டமான) க்வாலிடேடிவ் ரிசர்ச் நடத்த வேண்டும். பல துறைகளில் இந்த முறையிலான ஆய்வுகள் புறக்கணிக்கப்படுகின்றன என்றாலும் ஆந்த்ரபாலஜி, சோஷியாலஜி துறைகளில் இது மிக பிரபலம். (இதில் உள்ள பிரச்சனை என்னவென்றால் ஒரே கலாச்சாரத்தில் உள்ளவர் அதே மொழியில் எத்னொகிராபிக் ரிசர்ச் நடத்தினால் அதை வித்யாசமாக பார்ப்பார்கள்)

2)அல்லது ஆங்கில கேள்வித்தாளை தமிழில் மொழிபெயர்த்து அதை பூர்த்தி செய்து பிறகு தமிழில் இருந்து இன்னொருவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டும். அப்படி செய்தாலும் போன்று பிரச்சனைகள் வரும்.இதற்கு பயந்து பலர் ஆங்கிலம் பேச தெரிந்த தமது நாட்டு மக்களிடம் மட்டும் ஆய்வு நடத்தி அதை அறிவியல் ஜர்னல்களுக்கு அனுப்புவார்கள்.(அரசு நடத்தும் ஆய்வு, பத்திரிக்கைகள், தனியார் நடத்தும் ஆய்வு ஆகியவை இந்த கணக்கிலே சேராது)

எழுத துவங்கிய பொருளை விட்டு எங்கேயோ போய் விட்டேன். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் ஜர்னல்கள் வெளிவராத மொழியில் அறிவியல் வளராது.

ஆங்கிலத்தோடு போட்டிபோடுவது என்பது இந்த விஷயத்தில் முடியாது. ஆனால் ஜெர்மனி, பிரெஞ்சு போன்ற மொழிகளில் ஜர்னல்கள் வருகின்றனவே, அதே போல் தமிழிலும் முயன்றால் முடியாமலா போகும்?ஆயிரமாயிரம் அறிவியல் துறைகளில் இருக்கின்ரனவே, இவை அனைத்திலும் தமிழில் ஜர்னல்கள் கொண்டுவரமுடியுமா, இது முடியுமா, முடியாதா என்று மலைக்க வேண்டிய விஷயமில்லை. 1000 மைல் (கல்:)பயணம் துவங்குவது ஒரு சின்ன அடியை எடுத்து வைப்பதன் மூலம் தான். பூஜ்யம் என்ற நிலையிலிருந்து ஒன்று என்ற நிகழ்ச்சிக்கு உயர்வது ஒரு சிறு அடியாக கருத வேண்டியதில்லை. அது ஒரு giant leap என்று தான் கருத வேண்டும்.

குட்டிக்கதை ஒன்று சொல்கிறேன்.

ரஷ்யாவின் முதலாம் பத்திரிக்கையை ஜார் பீட்டர் 18ம் நூற்றாண்டில் கொண்டுவந்தார். பலநூராண்டுகள் முன்பே மற்ற ஐரோப்பிய மொழிகளில் பத்திரிக்கைகள் வெளியாகியிருந்தன. ஆனால் ரஷ்யாவில் ஜார் பீட்டர் ஆட்சியில் தான் முதல் பத்திரிக்கை வெளியானது. அதற்கு வேடமோஸ்தி என்று பெயர். மட்டப்பேப்பரில், கேவலமான அச்செழுத்துக்களில் அச்சடித்திருந்த அந்த பத்திரிக்கையை பீட்டர் ஆவலுடன் படித்தார்.அரசவையில் அனைவருக்கும் அதை காட்டினார்."ரஷ்ய மொழியின் முதல் பத்திரிக்கை" என்று பெருமிதத்துடன் சொன்னார்.

"இதுவா பத்திரிக்கை?" என்று முகம் சுளித்தார் இளவரசர்."ஹாம்பர்க்கில் குப்பையில் கிடக்கும் பேப்பர் கூட இதை விட நன்றாக இருக்கும்."

"நீ சரியான ஆள். ஆண்கழுதையை போன்ற கெட்டிக்காரன்.உனக்கு இளவரசன் என்ற பட்டம் ஒரு கேடு" என்றார் பீட்டர்."ஹாம்பர்க்கில் நல்ல பத்திரிக்கைகள் வருவது எனக்கு தெரியும்.ஆனால் அவை நமது அல்லவே? முதல் முதலில் அவர்களும் பத்திரிக்கை அடித்தபோது அதுவும் இதைப்போல் தான் மோசமாக இருந்திருக்கும்.கொஞ்ச நாள் கழித்து தான் நமதும் நல்ல தரத்துடன் வரும்.அதுவரை மோசமாகவே வரட்டுமே? இப்போது அதனால் என்ன கெட்டுப்போனது?"

(தொடர்வேன்)

9 comments:

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

அருமையான விசயத்தை, உண்மையைத் தொட்டிருக்கிறீர்கள். ஜெர்மனியில் அறிவியல் இதழ்கள் இருந்தாலும் அவற்றில் பங்களிப்புகள் குறைந்து வருவதாகக் கேள்விப்பட்டேன். சீனா, சப்பான் போன்ற நாடுகளிலும் அந்தந்த மொழிகளில் அறிவியல் இதழ்கள் இருந்தாலும் உலக அளவில் அறிவியலாளன் என்று ஏற்றுக் கொள்ளப்பட ஆங்கில இதழ்களில் எழுதுவது அவசியமாகிறது. தமிழ்நாட்டில் ஆனந்த விகடன் சினிமாப் பக்ககங்களைத் தாண்டி இப்ப தான் நாணயம் விகடன், பசுமை விகடன் என்று துறை சார் பொது இதழ்களே வருகிறது. தமிழில் அறிவியல் இதழ்கள் வர வேண்டுமானால், அதற்கான இயக்கம் குறைந்தது 25 ஆண்டுகளுக்குள் வர வேண்டும். அதற்கு மேலும் தாமதமானால், நம் சிந்தனை முறையே ஆங்கிலத்துக்கு மாறி குடி முழுகிப் போய் இருக்கும். :(

தமிழ்பித்தன் said...

உண்மையில் நல்ல விசயம் எழுதியிருக்கிறியள் தமிழகத்திலும் சரி ஈழத்திலும சரி ஆனந்தவிகடன் குமுதம் போன்ற புத்தகங்களுக்கு கொடுக்கின்ற மரியாதை இவற்றுக்கு கொடுப்பதில்லை இதுவும் ஒரு காரணமாக அமையலாம்

இராம.கி said...

"தமிழில் அறிவியல்" பற்றிய புலனத்தில், இப்படி ஒரு மேம்போக்கான, உள்ளீடு (content) இல்லாத, ஏரணப் பிழைகள் (logical fallacies) மலிந்த கட்டுரையைக் கண்டு வருத்தமே வருகிறது. ஆங்கிலத்தில் இதே கட்டுரையை ஒரு வேளை எழுதி, "உடனர் கண்ணுறும் பதிவேடுகளுக்கு - peer reviewed journals" அனுப்பியிருந்தால், அவை கூட இந்தக் கட்டுரையை வெளியிட மறுத்திருக்கும். கட்டுரையாளரின் கருத்துக்களைப் பற்றிய என் பின்னூட்டுக்கள் கீழே:
-------------------------------------
'அறிவியல் மொழி' என்பது ஒரு விதத்தில் தவறான கூற்று. அறிவுக்கும், அறிவியலுக்கும் மொழி கிடையாது, எந்த மொழியிலும் அறிவியல் படைப்புகள் வளர தடைகள் கிடையாது என்றாலும் சில மொழிகளில் அறிவியல் படைப்புக்கள் செழித்து வளர்வதும், சில மொழிகளில் அவை தேங்கி நிற்பதும் கண்கூடு. அப்படி அறிவியல் படைப்புக்கள் செழித்து வளரும் மொழிகளை
--------------------------------------
சில மொழிகளில் அறிவியல் படைப்புக்கள் மிகுதியாய் வருவதும், மற்றவற்றில் குறைந்து வருவதும், வராது இருப்பதும், அந்தந்த மொழி பேசுபவரின் அதிகாரம் (authority), புயவு (power), தாக்கம் (impact) உலகில் எவ்வளவு இருக்கிறது என்பதைப் பொறுத்தது. ஒரு பத்தாண்டுகள் முன்னாற் கூடச் செருமன் மொழியில் பல பதிவேடுகள் (journals) வந்து கொண்டிருந்தன; பின்னால், ஆங்கிலம் / செருமன் என்ற இரட்டை மொழியில் அவை வந்தன; நாளடைவில் செருமன் வெளியீட்டாளர்கள் (குறிப்பாக Springer verlag) பெரும்பாலான பதிவேடுகளை ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிடும் நிலைக்குத் தள்ளப் பட்டார்கள். ஆங்கிலம் எங்கும் பரவியதற்கு அமெரிக்காவின் அதிகார ஆளுமையே பெரும்பான்மைக் காரணம். இதில் ஆங்கிலம் உசத்தி, செருமன் தாழ்ச்சி என்று கிடையாது.)
----------------------------------------------------
அறிவியல் மொழிகள் என்று எடுத்துக் கொள்வோமானால் தமிழில் நிலைமை அப்படி இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.அப்படி இல்லாவிட்டால் தமிழை அறிவியல் மொழியாக்க என்ன செய்யலாம் என்ற கேள்வியும் எழுகிறது....
இதற்கான பதிலை தேடலாமா? அறிவியல் முன்னேறுவது peer reviwed journals எனப்படும் ஜர்னல்களால்.
----------------------------------------------
அறிவியல் முன்னேறுவது அறிவியலாளர்களின் ஆழ்ந்த ஆய்வால்; பதிவேடுகள் என்பவை மற்ற ஆய்வாளருக்கு, "இன்னது நடந்திருக்கிறது; இது எனக்குத் தோன்றுகிறது; இதைச் செய்து பார்க்கலாம்" என்று சொல்வதற்காக உள்ளவை. பதிவேடுகள் அறிவியற் செய்தி பரிமாற்றத்தில் கருவிகள் (tools). அவை காரணிகள் (causes) அல்ல.
------------------------------------------------
கணிதம், இயற்பியல், வேதியியல் போன்ற எண்ணற்ற விஞ்ஞானத்துறைகள் முன்னேறுவதும், அவற்றின் வளர்ச்சி அளவிடப்படுவதும் (peer reviwed) ஜர்னல்களால் மட்டுமே.
---------------------------------------------
அறிவியல் துறைகள் முன்னேறுவதும், அவற்றின் வளர்ச்சி அளவிடப்படுவதும், பதிவேடுகளால் அல்ல. அந்தத் துறையின் ஆய்வில் இன்னும் விடை காணாத கேள்விகளுக்கு விடை காணுவதையும், புதுக் கேள்விகள் எழுவதையும், அவற்றின் தொடர்பாய் எழும் தேற்று (theory)களையும் புரிசை(practice)களையும் வைத்தே முன்னேற்றமும், வளர்ச்சியும் அளவிடப் படுகின்றன. பதிவேடுகள் என்பவை ஒருவகையான மிடையம் (medium); இவை போகக் கருத்தரங்குகள் (seminars), மாநாடுகள் (conferences), கூட்டங்கள் (multilateral meetings), சந்திப்புகள் (one-to-one meetings), பல்வேறு தொடர்புகள் (contacts) போன்றவையும் மிடையங்களாய் இருக்கின்றன.
----------------------------------------------
நீங்கள் ஒரு விஞ்ஞானி என ஏற்கப்பட வேண்டுமானால் உங்கள் கட்டுரை ஒன்று ஜர்னல்களில் வெளியாகி இருக்க வேண்டும். அப்படி வெளியாகா விட்டால் நீங்கள் ஒரு விஞ்ஞானியே அல்ல என்று தான் பொருள்.
-------------------------------------------------
இதுவும் பிழை; இராமனுசன், ஆர்டியைப் பார்த்த பின் ஒரு சில மாதங்கள் கழித்தே உடனர்-கண்ணுறும் பதிவேட்டில் கட்டுரை வெளியிட்டார். அதுவும் ஆர்டியின் தூண்டுதலாலும், தாக்கத்தாலும் ஆனதே. அவர் வெளியிட்ட அந்த ஒரு சில கட்டுரைகள் அல்லாது, உயர்கணிதத்தில் அவருடைய ஆய்வு பரந்து விரிந்தது. அவற்றைப் பற்றி அவருடைய குறிப்புப் பொத்தகத்தில் அன்றி வேறு எங்கும் அவர் பதிவு செய்தது இல்லை. ஆனாலும் அவர் அறிவியலாளர் இல்லை என்று எந்த மடையனும் சொல்லமாட்டான்.

இந்தக் காலத்தில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை ஆய்வில் இருந்து ஒரு கட்டுரை கூட உடனர்-கண்ணுறும் பதிவேட்டில் வெளியிடாது, தங்களுடைய ஆய்வேட்டை மட்டுமே பல்கலைக் கழகத்தில் கொடுத்துவிட்டு அந்தத் துறையை விட்டு முற்றிலுமாய் நகர்ந்த ஆய்வாளர்கள் இருக்கிறார்கள்; அவர்களுடைய பல்கலைக் கழக ஆய்வேடு, மற்றவர்களின் பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளில் உசாத் துணையாய் மேற்கோள் காட்டப்பட்டுக் கொண்டே இருக்கலாம். (இரோப்பில், குறிப்பாக செருமன், நெதர்லந்து, சுவீடன், டென்மார்க், நார்வே போன்ற வடயிரோப்பிய நாடுகளில் வெளியிடும் ஒவ்வொரு பல்கலைக் கழக ஆய்வேடும் மற்ற பல்கலைக் கழகங்களின் நூலகங்களுக்கு படியெடுத்து அனுப்பப் படும். அதே போல dissertation abstracts என்ற வெளியீடு உலகில் வெளியாகும் எல்லா பல்கலை ஆய்வேடுகளையும் சுருக்கித் தொகுத்து வெளியிடும்.)

எல்லோரும் உடனர்-கண்ணுறும் பதிவேடுகளில் கட்டுரை வெளியிடுவது என்பது இயலாத காரியம். டேராடூன் இந்தியப் பாறைநெய்க் கழகத்தில் (Indian Institute of Petroleum) காசற்றுக் கிடக்கும் ஓர் ஆய்வாளர் எப்படித் தன் கட்டுரையை உடனர்-கண்ணுறும் அனைத்துநாட்டுப் பதிவேட்டில் வெளியிடமுடியும்? உங்களுக்கு இந்தப் பதிவேட்டு வெளியீடுகளில் நிலவும் அரசியலும், நடைமுறைச் சிக்கலும் தெரியாது என நினைக்கிறேன்.)
------------------------------------------
இப்படிப்பட்ட ஜர்னல்கள் இருக்கும் மொழிகளில் தான் அறிவியல் வளர்கிறது என்று அர்த்தம். அது இல்லாத மொழிகளில் அறிவியல் தேங்கி நிற்கிறது அல்லது சுத்தமாக இல்லை என்று அர்த்தம்.
-----------------------------------------
நெதர்லாந்தில் இருக்கும் ஆய்வாளர்கள் நூற்றுக்கு 95 பங்கு ஆங்கிலத்திலும், மீதம் 4 பங்கு செருமன் மொழியிலும், ஒரே ஒரு பங்கு (அதுவும் பெரும்பாலும் அவர்களின் ஆய்வேடு) மட்டுமே டச்சு மொழியில் வெளியிடுவவர்கள். அதற்காக, டச்சு மொழியில் அறிவியல் வளரவில்லை என்று சொல்லிவிடுவீர்களா? அங்கே பாடம் சொல்லிக் கொடுப்பதும், ஆய்வு நடப்பதும் டச்சு மொழியில் தான்; ஆனால், இன்றைய அதிகாரம், புயவு, தாக்கம் காரணமாய் ஆங்கிலத்தில் தங்கள் ஆய்வை வெளியிடுகிறார்கள். சொந்தப் பட்டறிவால், நான் இதைச் சொல்லுகிறேன்.

வெறுமே, கூகுளாண்டவரைத் துணைக்கழைத்து இப்படி எல்லாம் "வரையறை வாக்குகள் definition statements" சொல்லுவது ஒரு அறியாமை என்று மட்டுமே சொல்ல முடியும். நீங்கள் சொன்னபடி பார்த்தால், டச்சு மொழியில் அறிவியல் தேங்கி நிற்கிறது என்று பொருளாகும். அதைக் காட்டிலும் ஒரு மூடத்தனம் கிடையாது.
---------------------------------------
உலகில் அப்படி உள்ள பல்லாயிரம் அறிவியல் துறைகளில் வெளிவரும் ஜர்னல்களில் தமிழில் இருக்கும் ஜர்னல்கள் எத்தனை என கூகிளில் தேடிப்பார்த்தேன். ஸ்காலர் கூகிளில் தமிழ் என தமிழில் தட்டினேன். பலன் என்னவோ பூஜ்யம்தான். இலங்கையில் ஆர்ட்லாப் எனும் ஜர்னல் தமிழிலும், சிங்களத்திலும் வெளிவருவதாக தெரிகிறது. மற்றபடி தமிழில் வேறெதுவும் வருவதாக தெரியவில்லை.
------------------------------------------
"கூகுள் மூலமாய்த் தமிழில் பார்த்தேன்; கிடைக்கவில்லை" என்பது சப்பைக் கட்டாக உங்களுக்குத் தெரியவில்லை. இங்கு தான் இருந்ததையே ஒழித்து, எந்தப் பாட நிலையிலும் தமிழைப் பாடமொழியாக ஆக்க வேண்டிய கட்டாயத்தை ஒழித்துவிடார்களே, அப்புறம் என்ன, கூகுளில் தேடிப் பார்த்தேன் என்று சொல்லுவதற்கு? வெட்கமாய் இல்லை.

இங்கே கல்லூரியில் தமிழில் படித்தால் அல்லவா, ஆய்வுக் கட்டுரைகள் படைக்கத் தேவை ஏற்படும்? எத்தனை தமிழகப் பல்கலைக் கழகங்கள் தங்கள் கருத்தரங்கத் தொகுதிகளை இப்படி இணையத்தில் வெளியிடுகின்றன? இந்தப் புலனம் பேசினால் ஒரு பெரிய கட்டுரையே எழுத வேண்டியிருக்கும். இருந்தாலும் ஒரு எடுத்துக் காட்டு சொல்லுகிறேன்.

பேரா.முத்துக் குமரன் பாரதிதாசன் பல்கலையின் துணைவேந்தராய் இருந்த பொழுது 90களில் தமிழ் மூலமாய் அறிவியல் பற்றி 3 நாள் கருத்தரங்கு நடத்தினார். நானும் என் உடனாய்வாளரும் பங்கு கொண்டு, தமிழில் நூகுயிர் நுட்பியல் (microbial technology) பற்றி ஒரு ஆய்வுக் கட்டுரை அளித்தோம். (அது வெறும் கட்டுரை அல்ல; நுட்பியல் உருவானதற்கான அடிப்படை ஆய்வு. அந்த நுட்பியலை வைத்து இன்றைக்கும் ஒரு பாறைவேதியல் - petrochemical - நிறுவனத்தில் கழிவு நீர் தூயமைப் படுத்தப் பட்டு கடலுக்கு அனுப்பப் பட்டுக் கொண்டிருக்கிறது.) என்னைப் போல 250 பேருக்கு மேல் வெவ்வேறு புலனங்களில் தமிழில் ஆய்வுக் கட்டுரை அளித்தார்கள். ஆகத் தமிழில் இது போன்ற கட்டுரை அளிக்க முடியாது என்பதல்ல; அப்படி அளிப்பதற்கு ஆதரவு வேண்டும், தேவை ஏற்பட வேண்டும், என்பதே முகன்மையானது.
--------------------------------------------
ஒரு மொழியில் ஜர்னல்கள் வராவிட்டால் என்ன ஆகும்?
அந்த மொழியில் அறிவியல் சிந்தனைகள் வளர்வது தேங்கி நின்றுவிடும் என்று ஆகும். எந்த மொழியில் அறிவியல் படைப்புகள் வெளிவருகின்றனவோ, அந்த மொழியின் ஆதிக்கம் அறிவியலில் தவிர்க்க இயலாததாகும். அறிவியலில் புகும் அந்த ஆதிக்கம் மற்ற அனைத்து துறைகளிலும் செழித்து வளரும்.
--------------------------------------
தலைகீழாகப் புரிந்து கொள்ளுகிறீர்கள். ஆதிக்கம் இருக்கும் மொழியில் அறிவியல் கட்டுரைகள் வரும். அறிவியல் கட்டுரைகள் இருப்பதால் ஆதிக்கம் ஏற்படுவதில்லை. காட்டாக 100க்கு 98 சப்பானிய ஆய்வாளர்கள் தங்கள் மொழியிலேயே தான் ஆய்வுக் கட்டுரைகள் படைக்கிறார்கள். சப்பானிய மொழியோ, சப்பானியரோ அமெரிக்காவைப் பார்க்கையில், உலகில் ஆதிக்கம் செலுத்துகின்றனரா, என்ன?
--------------------------------------
சில உதாரணங்கள் மூலம் இதை விளக்குகிறேன்.
தொலைவை குறிக்க ஆங்கிலத்தில் 'கிலோமீட்டர்' 'மீட்டர்' போன்ற அளவைகள் பயன்படுத்தப்படுகின்றன. தமிழில் 'கல்' 'யோசனை' 'ஒரு அடி' போன்ற அளவைகள் பயன்படுத்தப்படுகின்றன. அறிவியலில் அளவைகள் மிக முக்கியமானவை. ஒரு மீட்டர் என்பதற்கு அறிவியலில் தந்துள்ள விரிவுரை "the distance travelled by light in absolute vacuum in 1/299,792,458 of a second" இப்படி மீட்டருக்கு மிக துல்லியமான விரிவுரையை ஆங்கிலம் தந்துள்ளதால் (மீட்டருக்கு மூலம் லத்தீன்:))) தொலைவை அளக்க பயன்படுத்தப்படும் அனைத்து கருவிகளும் 'ஒரு அடி' எனும் அளவிட்டிற்கு பதில் 'ஒரு மீட்டர்' எனும் அளவீட்டை பயன்படுத்தவேண்டிய அவசியமாகிறது. அப்படி துல்லியமான அளவீடுகள் தமிழில் இல்லாததால் சென்னைக்கும் கோவைக்கும் இடையே உள்ள தொலைவு (300 கல்லுக்கு பதில்) 500 கிலோமீட்டர் ஆகிவிட்டது. ஆங்கிலேயனின் மீட்டர் உலகம் முழுவதற்கும் பொதுவான அளவீட்டு முறையாகவும் ஆகிவிட்டது.(இனி நாம் வேண்டுமானால் மீட்டர் என்பதை ஈரடி என்று மொழிபெயர்த்து வைத்துக்கொள்ளலாம்.அப்படிப்பட்ட மொழிபெயர்ப்பு கட்டாயம் ஒரு மொழியில் அறிவியல் வளர்வதற்கு அறிகுறியல்ல. பர்கரை கோதுமை அடை என்று மொழிபெயர்த்தால் அது தமிழ்நாட்டு உணவாகிவிடாதல்லவா?)
-----------------------------
என்ன ஒரு உளறல்? மீட்டர் என்ற அளவு, பிரஞ்சுப் புரட்சிக்குப் பின்னால், ஆட்சியாளரின் ஆணையைக் கொண்டு அதிகாரம் கொண்டு லாப்லசு போன்ற அறிவியலாளர்களின் முயற்சியால் பிரஞ்சு அரசால் புழக்கத்திற்குக் கொண்டு வரப் பட்டது. அன்றைக்குத் தெரிந்திருந்த புவியின் அளவில் அது ஒரு பங்காய் அமையும் (கூகுள் போட்டுப் பபர்த்துக் கொள்ளுங்கள்) அடி என்பது ஆங்கிலேயரிடம் இருந்த அளவு. (அடியின் அளவு வந்த கதையையும் கூகுள் போட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்.) அடி தொலைந்து (இன்னும் அமெரிக்காவில் போகவில்லை) உலகெங்கும் மீட்டர் ஆனது, மீட்டர் அளவுகளில் இருந்த எளிமை, அரசுகளின் அதிகாரம், ஒத்துப் போகவேண்டிய கட்டாயம் போன்றவற்றால் ஆகும். மீட்டரின் அளவு துல்லியப் பட்டது அறிவியலால் என்று சொன்னால் அது சரி. அப்படித் துல்லியப் பட்டதற்கும் மொழிக்கும் யாதொரு தொடர்பும் கிடையாது. தமிழன் உலக ஆட்சியாளனாய், குறைந்தது பிரஞ்சு அளவிற்கு, வந்திருந்தால், நம் அளவுகளும் உலகெங்கும் பரவியிருக்கும். நாம் அடிமையாகிப் போனோம். இன்றைக்கு வேறொரு ஆளின் அளவிட்டைப் பயன்படுத்தும் நிலைக்கு வந்திருக்கிறோம். அவ்வளவுதான். இதில் எல்லாம் புயவு தான் முகன்மையானது. வலுத்தவன் சொல்லுவது உலகில் ஏற்றுக் கொள்ளப் படும். அது அரசியல் அதிகாரம். அறிவியலை இங்கு கொண்டுவந்து ஆவது என்ன?
---------------------------------
இது ஏதோ மீட்டர், கிலோமீட்டருடன் முடிகிற விவகாரம் என நினைக்க வேண்டாம். இதுபோன்ற லட்சக்கணக்கான அளவீடுகள் அனைத்து விஞ்ஞானத்துறைகளிலும் இருக்கின்றன.அந்த அளவீடுகளில் ஆகப்பெரும்பான்மையானவை ஆங்கிலத்தில் தான் இருக்கின்றன. ஆங்கிலத்தில் இந்த அளவீடுகள் இருப்பது ஆங்கிலம் பேசும் மக்களுக்கு எத்தனை சாதகமாக இருக்கிறது என்பதே பெரும்பாலானோருக்கு தெரியாது.ஒரு சிறு உதாரணம் தருகிறேன்.
-------------------------------
அளவீடுகள் எந்த மொழிக்கும் சொந்தமில்லை. மீட்டர் என்ற அளவை ஆங்கிலத்தில் சொன்னால் என்ன, தமிழில் சொன்னால் என்ன அந்த அளவீட்டை உலகம் ஒப்புக் கொண்டால், அப்புறம் எல்லாம் ஒன்றுதான்.
----------------------------
சமூக அறிவியல் துறைகளில் ஆய்வு நடத்த விரும்புவோர் ஆங்கிலத்தில் தான் ஆய்வு நடத்த முடியும். வேறுமொழியில் நடத்துவது அவர்கள் விருப்பம் எனினும் வேறுமொழியில் ஆய்வு நடத்தினால் அவர்கள் விஞ்ஞானிகளாக ஏற்கப்படமாட்டார்கள். (ஏன் என்றால் ஆகப் பெரும்பான்மையான ஜர்னல்கள் ஆங்கிலத்தில் தான் இருக்கின்றன. ஆங்கிலக் கட்டுரைகளைத்தான் அவை வெளியிடும்) தமிழ்நாட்டில் இருக்கும் ஒருவர் இத்தகைய ஆங்கில ஜர்னல்களில் பதிப்பிடுவதென்றால் அவர் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
தனது ஆய்வை ஆங்கிலம் தெரிந்த தமிழ்நாட்டு மக்களிடம் மட்டுமே அவர் நடத்த முடியும்.........
ஆங்கிலம் தெரியாத மக்களிடம் ஆய்வு நடத்தி அதை ஆங்கில ஜர்னல்களில் பதிப்பிடுவது எப்படி?
-----------------------------
என்னவொரு முட்டாள்தனம்? குமுக அறிவியலில் பல ஆய்வுகள் பிரஞ்சு மொழியில் வெளியாகி இருக்கின்றன; செருமன் மொழியில் வெளியாகியிருக்கின்றன. அந்த மொழியில் ஆய்வுக் கட்டுரைகளை இன்னும் தான் படைத்துக் கொண்டிருக்கிறார்கள். (அவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்பையும் உடனுக்குடன் வெளியிடுகிறார்கள்.) அவர்களெல்லாம் அறிவியலாளர்கள் இல்லையா? குமுக அறிவியல் (social science) ஆய்வுகள் ஆங்கிலம் தெரியாத தமிழ்மக்களிடம் நடத்தப் பட்டு ஆங்கிலப் பதிவேடுகளில் வெளியிடப் படவில்லையா? என்னவொரு குழப்பமான சிந்தனை?
------------------------------------
1) (நொம்ப கஷ்டமான) க்வாலிடேடிவ் ரிசர்ச் நடத்த வேண்டும். பல துறைகளில் இந்த முறையிலான ஆய்வுகள் புறக்கணிக்கப்படுகின்றன என்றாலும் ஆந்த்ரபாலஜி, சோஷியாலஜி துறைகளில் இது மிக பிரபலம். (இதில் உள்ள பிரச்சனை என்னவென்றால் ஒரே கலாச்சாரத்தில் உள்ளவர் அதே மொழியில் எத்னொகிராபிக் ரிசர்ச் நடத்தினால் அதை வித்யாசமாக பார்ப்பார்கள்)
-----------------------------------
நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்றே புரியவில்லை. மாந்தவியல் (anthoropology), குமுகவியல் (socialogy) போன்ற துறைகளில் தரவோட்ட ஆய்வு (qualitative research) மட்டுமே நடக்கிறதா? இதற்கும் மொழிக்கும் என்ன உறவு? புரியவே மாட்டேன் என்கிறது.
----------------------------------
2)அல்லது ஆங்கில கேள்வித்தாளை தமிழில் மொழிபெயர்த்து அதை பூர்த்தி செய்து பிறகு தமிழில் இருந்து இன்னொருவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டும். அப்படி செய்தாலும் போன்று பிரச்சனைகள் வரும்.இதற்கு பயந்து பலர் ஆங்கிலம் பேச தெரிந்த தமது நாட்டு மக்களிடம் மட்டும் ஆய்வு நடத்தி அதை அறிவியல் ஜர்னல்களுக்கு அனுப்புவார்கள்.(அரசு நடத்தும் ஆய்வு, பத்திரிக்கைகள், தனியார் நடத்தும் ஆய்வு ஆகியவை இந்த கணக்கிலே சேராது)
--------------------------------------
இங்கும் குழப்பம். இது போன்ற ஆய்வுகள் எப்படி நடத்தப் படுகின்றன என்று உங்களுக்குத் தெரியுமா என்ற அய்யம் எனக்கு வருகிறது.
----------------------------------
எழுத துவங்கிய பொருளை விட்டு எங்கேயோ போய் விட்டேன். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் ஜர்னல்கள் வெளிவராத மொழியில் அறிவியல் வளராது.
ஆங்கிலத்தோடு போட்டிபோடுவது என்பது இந்த விஷயத்தில் முடியாது. ஆனால் ஜெர்மனி, பிரெஞ்சு போன்ற மொழிகளில் ஜர்னல்கள் வருகின்றனவே, அதே போல் தமிழிலும் முயன்றால் முடியாமலா போகும்?ஆயிரமாயிரம் அறிவியல் துறைகளில் இருக்கின்ரனவே, இவை அனைத்திலும் தமிழில் ஜர்னல்கள் கொண்டுவரமுடியுமா, இது முடியுமா, முடியாதா என்று மலைக்க வேண்டிய விஷயமில்லை. 1000 மைல் (கல்:)பயணம் துவங்குவது ஒரு சின்ன அடியை எடுத்து வைப்பதன் மூலம் தான். பூஜ்யம் என்ற நிலையிலிருந்து ஒன்று என்ற நிகழ்ச்சிக்கு உயர்வது ஒரு சிறு அடியாக கருத வேண்டியதில்லை. அது ஒரு giant leap என்று தான் கருத வேண்டும்.
(தொடர்வேன்)
--------------------------------

ஓகை said...

செல்வன்,
ராமகி ஐயா அவர்கள் கூறுவதுடன் என்னால் மிகப் பெரும்பாலும் ஒத்துப் போக முடிகிறது. (அவர் ஐயம் என்பதை அய்யம் என்று சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.)

உங்கள் பதிவு தொடர்பாக எனக்கு சில கருத்துகள் இருக்கின்றன. உங்கள் தொடர் முடிந்தபின்னர் சொல்கிறேன்.

மீட்டர் என்பது ஆங்கிலேயரின் அளவு என்று கூறுவது உலகின் மிகத்தவறான கூற்றுகளில் ஒன்றாக வைக்கத் தகுந்ததாகும்.

வேறு ஒரு தளத்தில் தமிழ் மிகச்சிறந்த அறிவியல் மொழி என்கிற கருத்து எனக்கு இருக்கிறது.

Unknown said...

ராமகி அய்யா,

விரிவான பின்னூட்டத்துக்கு நன்றி.

//தமிழில் அறிவியல்" பற்றிய புலனத்தில், இப்படி ஒரு மேம்போக்கான, உள்ளீடு (cஒன்டென்ட்) இல்லாத, ஏரணப் பிழைகள் (லொகிcஅல் fஅல்லcஇஎச்) மலிந்த கட்டுரையைக் கண்டு வருத்தமே வருகிறது. ஆங்கிலத்தில் இதே கட்டுரையை ஒரு வேளை எழுதி, "உடனர் கண்ணுறும் பதிவேடுகளுக்கு - பேர் ரெவிஎநெட் ஜொஉர்னல்ச்" அனுப்பியிருந்தால், அவை கூட இந்தக் கட்டுரையை வெளியிட மறுத்திருக்கும். கட்டுரையாளரின் கருத்துக்களைப் பற்றிய என் பின்னூட்டுக்கள் கீழே//

இந்த பதிவை ஜர்னல்களுக்கு அனுப்பும் நோக்கில் எழுதவில்லை.பதிவு போட அத்தனை பெருமுயற்சி எல்லாம் செய்ய வேண்டியதில்லையே:)மற்றபடி மேம்போக்கு, ஏரணப்பிழை போன்றவை இதில் இல்லை என்பது என் கருத்து.விளக்குகிறேன்.

//சில மொழிகளில் அறிவியல் படைப்புக்கள் மிகுதியாய் வருவதும், மற்றவற்றில் குறைந்து வருவதும், வராது இருப்பதும், அந்தந்த மொழி பேசுபவரின் அதிகாரம் (ஔதொரிட்ய்), புயவு (பொநெர்), தாக்கம் (இம்பcட்) உலகில் எவ்வளவு இருக்கிறது என்பதைப் பொறுத்தது. ஒரு பத்தாண்டுகள் முன்னாற் கூடச் செருமன் மொழியில் பல பதிவேடுகள் (ஜொஉர்னல்ச்) வந்து கொண்டிருந்தன; பின்னால், ஆங்கிலம் / செருமன் என்ற இரட்டை மொழியில் அவை வந்தன; நாளடைவில் செருமன் வெளியீட்டாளர்கள் (குறிப்பாக ஸ்ப்ரிஙெர் வெர்லக்) பெரும்பாலான பதிவேடுகளை ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிடும் நிலைக்குத் தள்ளப் பட்டார்கள். ஆங்கிலம் எங்கும் பரவியதற்கு அமெரிக்காவின் அதிகார ஆளுமையே பெரும்பான்மைக் காரணம். இதில் ஆங்கிலம் உசத்தி, செருமன் தாழ்ச்சி என்று கிடையாது.) //

இதில் பல கருத்துக்களை நான் மறுக்கவில்லை.ஒரு மொழி உலகில் பரவ காரணம் அரசியல் நிலைமைகளே.இல்லை எனவில்லை.மேலும் நான் ஆங்கிலம் உசத்தி, ஜெர்மன் தாழ்ச்சி என்பது போல் எங்கும் சொல்லவில்லை.ஆனால் ஆங்கிலத்தில் மட்டுமே விஞ்ஞானக்கட்டுரைகள் எழுத முடியும் என இருக்கும் நிலைமை ஜெர்மானிய மொழிக்கும் அதை பேசும் மக்களுக்கும் அத்தனை சாதகமாக இருக்காது அல்லவா?அதைத்தான் சுட்டிக் காட்டினேன்.

//அறிவியல் முன்னேறுவது அறிவியலாளர்களின் ஆழ்ந்த ஆய்வால்; பதிவேடுகள் என்பவை மற்ற ஆய்வாளருக்கு, "இன்னது நடந்திருக்கிறது; இது எனக்குத் தோன்றுகிறது; இதைச் செய்து பார்க்கலாம்" என்று சொல்வதற்காக உள்ளவை. பதிவேடுகள் அறிவியற் செய்தி பரிமாற்றத்தில் கருவிகள் (டோல்ச்). அவை காரணிகள் (cஔசெச்) அல்ல.//

இல்லை.இது தவறான புரிதல்.

ஒருவர் விஞ்ஞானி எனும் தகுதியை அடைவதே அவருக்கு கிடைக்கும் முனைவர் பட்டத்தால் தான்.அந்த முனைவர் பட்டம் என்பதே முதலில் peer review process தான்.அவரது ஆய்வறிக்கை peer review மூலம் ஒத்துக்கொள்ளப்பட்டால் மட்டுமே அவர் முனைவர் எனும் தகுதியை முதலில் பெறுகிறார்.அவரது படைப்பும் அதன் பின்னரே விஞ்ஞானம் எனும் தகுதியை பெறுகிறது.

எந்த ஒரு கண்டுபிடிப்பும் விஞ்ஞானம் எனும் தகுதியை அடைய ஒன்று பேட்டண்ட் செய்யப்பட வேண்டும், அல்லது ஆய்வேடுகளில் ஏற வேண்டும்.(அல்லது இரண்டும் நடக்க வேண்டும்). இவை தவிர்த்து தனியார் கம்பனிகளில், ராணுவ நிலையங்களில், அரசு மையங்களில் நடக்கும் கண்டுபிடிப்புகள் பற்றி இப்போது பேசவேண்டாம்.அவை எனும் வகையறாவில் சேராது.

முனைவர் பட்டம் பெறாதவர் விஞ்ஞானி இல்லையா, அவரது கண்டுபிடிப்பு விஞ்ஞானமில்லையா என்று கேட்டால் அது நல்ல கேள்விதான்.முனைவர் பட்டம் என ஒன்று வருவதற்கு முன்பே விஞ்ஞானம் இருந்தது.ஆய்வேடுகள் என ஒன்று வருவதற்கு முன்பும் கண்டுபிடிப்புகள் இருந்தன.அதே போன்ற சுயம்புவான திரமைசாலிகள் இன்னும் இருக்கிரார்கள்.ஆனால் ஆய்வேடுகளில் வெளிவராத அவர்களின் கண்டுபிடிப்புகள் குடத்திலிட்ட விளக்கே. ஆய்வேடுகளில் ஏறும் ஆராய்ச்சிகளே ஒரு படைப்பு விஞ்ஞானமா இல்லையா என்பதன் உரைகல். Organized body of knolwedge என்றும் வைத்துக்கொள்ளலாம். unorganized science (or) unrecognized science என்று ஒன்று உண்டு என்பதை நான் மறுக்கவில்லை.

///அறிவியல் துறைகள் முன்னேறுவதும், அவற்றின் வளர்ச்சி அளவிடப்படுவதும், பதிவேடுகளால் அல்ல. அந்தத் துறையின் ஆய்வில் இன்னும் விடை காணாத கேள்விகளுக்கு விடை காணுவதையும், புதுக் கேள்விகள் எழுவதையும், அவற்றின் தொடர்பாய் எழும் தேற்று (தெஒர்ய்)களையும் புரிசை(ப்ரcடிcஎ)களையும் வைத்தே முன்னேற்றமும், வளர்ச்சியும் அளவிடப் படுகின்றன. பதிவேடுகள் என்பவை ஒருவகையான மிடையம் (மெடிஉம்); இவை போகக் கருத்தரங்குகள் (செமினர்ச்), மாநாடுகள் (cஒன்fஎரென்cஎச்), கூட்டங்கள் (முல்டிலடெரல் மேடிங்ச்), சந்திப்புகள் (ஒனெ-டொ-ஒனெ மேடிங்ச்), பல்வேறு தொடர்புகள் (cஒன்டcட்ச்) போன்றவையும் மிடையங்களாய் இருக்கின்றன.///

தவறான புரிதல்.

கருத்தரங்குகள், மாநாடுகள், ஆய்வறிக்கைகள் ஆகிய அனைத்தும் peer reviwed தான்.இவற்றில் நமது ஆய்வறிக்கை ஏறவேண்டுமானால் அவை (blind) peer review போயே தீரவேண்டும்.இவற்றில் நிராகரிக்கப்பட்ட கட்டுரைகள் உண்மையிலேயே நல்லவையாக இருந்தாலும் அவை அறிவியல் எனும் தகுதி பெறாது.(அந்த கட்டுரையாளர் அதன் பின் தமது ஆய்வை ஏதேனும் நிறுவனத்துக்கு கொண்டு சென்று அங்கீகாரம் பெற முயலலாம், அல்லது அரசிடம் அணுகலாம்.அது வேறு விஷயம்.)

விஞ்ஞான துறைகளுக்கு நிதி ஒதுக்கப்படுவது, பரிசுகள் வழங்கப்படுவது, அங்கீகாரம், கவுரவம் அளிக்கப்படுவது ஆகியவை அனைத்தும் peer review publications மூலம் தான்.

///இராமனுசன், ஆர்டியைப் பார்த்த பின் ஒரு சில மாதங்கள் கழித்தே உடனர்-கண்ணுறும் பதிவேட்டில் கட்டுரை வெளியிட்டார். அதுவும் ஆர்டியின் தூண்டுதலாலும், தாக்கத்தாலும் ஆனதே. அவர் வெளியிட்ட அந்த ஒரு சில கட்டுரைகள் அல்லாது, உயர்கணிதத்தில் அவருடைய ஆய்வு பரந்து விரிந்தது. அவற்றைப் பற்றி அவருடைய குறிப்புப் பொத்தகத்தில் அன்றி வேறு எங்கும் அவர் பதிவு செய்தது இல்லை. ஆனாலும் அவர் அறிவியலாளர் இல்லை என்று எந்த மடையனும் சொல்லமாட்டான். ///

ராமானுசனை அறிவியலாளர் இல்லை என்று எந்த மடையனும் சொல்லவில்லை:))

ராமானுசன் சிறுவயதிலேயே இறந்து விட்டார்.அவர் இறந்தபின் அவரது ஆய்வுகள் பலரால் தொடரப்பட்டு ஆய்வேடுகளில் வெளியிடப்பட்டன.அவற்றால் தான் அவர் இன்று மங்காத புகழ் பெற்றவராக கணித உலகில் கொண்டாடப்படுகிறார்.

//இந்தக் காலத்தில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை ஆய்வில் இருந்து ஒரு கட்டுரை கூட உடனர்-கண்ணுறும் பதிவேட்டில் வெளியிடாது, தங்களுடைய ஆய்வேட்டை மட்டுமே பல்கலைக் கழகத்தில் கொடுத்துவிட்டு அந்தத் துறையை விட்டு முற்றிலுமாய் நகர்ந்த ஆய்வாளர்கள் இருக்கிறார்கள்; அவர்களுடைய பல்கலைக் கழக ஆய்வேடு, மற்றவர்களின் பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளில் உசாத் துணையாய் மேற்கோள் காட்டப்பட்டுக் கொண்டே இருக்கலாம்.//

அப்படி அவர்கள் கொடுக்கும் ஆய்வேடு கூட உடனர் கண்ணுற்று அங்கீகரிக்கப்படுவது தானே?உடனர் கண்ணுற்று அங்கீகரிக்காமல் அவர்கள் நடத்தும் ஆய்வு ஏற்கப்படுமா அல்லது அவர்களுக்கு முனைவர் பட்டம் தான் கிடைக்குமா அல்லது அப்படிப்பட்ட ஆய்வுகள் உசாதுணையாய் மேற்கோள் தான் காட்டப்படுமா?

//எல்லோரும் உடனர்-கண்ணுறும் பதிவேடுகளில் கட்டுரை வெளியிடுவது என்பது இயலாத காரியம். டேராடூன் இந்தியப் பாறைநெய்க் கழகத்தில் (ஈன்டிஅன் ஈன்ச்டிடுடெ ஒf Pஎட்ரொலெஉம்) காசற்றுக் கிடக்கும் ஓர் ஆய்வாளர் எப்படித் தன் கட்டுரையை உடனர்-கண்ணுறும் அனைத்துநாட்டுப் பதிவேட்டில் வெளியிடமுடியும்? உங்களுக்கு இந்தப் பதிவேட்டு வெளியீடுகளில் நிலவும் அரசியலும், நடைமுறைச் சிக்கலும் தெரியாது என நினைக்கிறேன்.) //

எல்லோராலும் இயலாத காரியம் அல்ல. இவேடுகளில் ஆய்வறிக்கை வெளியிட காசு செலவாகாது. ஆய்வில் தரம் இருக்கவேண்டும்.அவ்வளவுதான்.

மற்றபடி அரசியல்,நடைமுறை சிக்கல் என்பதெல்லாம் மிகைப்படுத்தப்பட்ட கூற்று என்றே கருதுகிறேன்.

Unknown said...

//நெதர்லாந்தில் இருக்கும் ஆய்வாளர்கள் நூற்றுக்கு 95 பங்கு ஆங்கிலத்திலும், மீதம் 4 பங்கு செருமன் மொழியிலும், ஒரே ஒரு பங்கு (அதுவும் பெரும்பாலும் அவர்களின் ஆய்வேடு) மட்டுமே டச்சு மொழியில் வெளியிடுவவர்கள். அதற்காக, டச்சு மொழியில் அறிவியல் வளரவில்லை என்று சொல்லிவிடுவீர்களா? அங்கே பாடம் சொல்லிக் கொடுப்பதும், ஆய்வு நடப்பதும் டச்சு மொழியில் தான்; ஆனால், இன்றைய அதிகாரம், புயவு, தாக்கம் காரணமாய் ஆங்கிலத்தில் தங்கள் ஆய்வை வெளியிடுகிறார்கள். சொந்தப் பட்டறிவால், நான் இதைச் சொல்லுகிறேன்.

வெறுமே, கூகுளாண்டவரைத் துணைக்கழைத்து இப்படி எல்லாம் "வரையறை வாக்குகள் டெfஇனிடிஒன் ச்டடெமென்ட்ச்" சொல்லுவது ஒரு அறியாமை என்று மட்டுமே சொல்ல முடியும். நீங்கள் சொன்னபடி பார்த்தால், டச்சு மொழியில் அறிவியல் தேங்கி நிற்கிறது என்று பொருளாகும். அதைக் காட்டிலும் ஒரு மூடத்தனம் கிடையாது.//

டச்சு, பிரெஞ்சு, ஜெர்மனி முதலிய பல மொழிகளில் ஆய்வறிக்கைகள் வெளியாகின்றன.ஆங்கிலம் அளவு இல்லை எனினும் அவர்கள் தங்களால் ஆன முயற்சிகளை செய்கின்றனர்.அதனால் தான் அவர்கள் மொழியில் உயர்கல்வியை கற்பிக்க அவர்களால இயலுகிறது.

ஆய்வறிக்கைகள் வெளிவராத மொழிகளில் அந்தந்த துறைசார்ந்த புத்தகங்களை எழுதுவது கடினம்.உயர் கல்வியை கற்றுத் தருவது கடினம்.அந்த மொழியின் வீழ்ச்சி மெதுவாக இப்படித்தான் ஆரம்பிக்கிறது.நாட்பட,நாட்பட உயர்கல்வி கற்றுத்தர இயலாத மொழி பள்ளிகளிலும் கற்றுத்தர ஏலாத ஒன்று என விலக்கி வைக்கப்பட்டு மெதுவாக அது பலவீனமான நிலையை அடைகிறது.

ஆங்கில ஆய்வேடுகளைப் பார்த்து மற்ற மொழிகளில் புத்தகம் எழுத முடியாதா என கேட்கலாம். ஆய்வேடுகள் வெளிவரும் மொழிகளில் இது எளிது.வராத மொழிகளில் கடினம்.எழுத மிக, மிக கஷ்டப்பட வேண்டும் என்றும் வைத்துக் கொள்ளலாம்.

//கூகுள் மூலமாய்த் தமிழில் பார்த்தேன்; கிடைக்கவில்லை" என்பது சப்பைக் கட்டாக உங்களுக்குத் தெரியவில்லை. இங்கு தான் இருந்ததையே ஒழித்து, எந்தப் பாட நிலையிலும் தமிழைப் பாடமொழியாக ஆக்க வேண்டிய கட்டாயத்தை ஒழித்துவிடார்களே, அப்புறம் என்ன, கூகுளில் தேடிப் பார்த்தேன் என்று சொல்லுவதற்கு? வெட்கமாய் இல்லை.

இங்கே கல்லூரியில் தமிழில் படித்தால் அல்லவா, ஆய்வுக் கட்டுரைகள் படைக்கத் தேவை ஏற்படும்? எத்தனை தமிழகப் பல்கலைக் கழகங்கள் தங்கள் கருத்தரங்கத் தொகுதிகளை இப்படி இணையத்தில் வெளியிடுகின்றன? இந்தப் புலனம் பேசினால் ஒரு பெரிய கட்டுரையே எழுத வேண்டியிருக்கும். இருந்தாலும் ஒரு எடுத்துக் காட்டு சொல்லுகிறேன்//

இணைய கட்டுரை எழுத கூகிளில் தான் தேட முடியும்.ஆய்வுக்கட்டுரை எழுதினால் பல்கலைக்கழக லைப்ரரிகளில் போய் தேடி எழுதலாம்.இருக்கும் வசதியை பயன்படுத்தி எழுதுவதில் வெட்கப்பட என்ன இருக்கிறது என்று தெரியவில்லை.

கல்லூரிகளில் தமிழில் படிக்காமல் இருக்க முதன்மையான காரணம் ஆங்கில மோகம் எனினும் நமது கல்லூரிகளில் முதலில் எத்துனை துறைகளில் உயர்கல்வி தமிழில் அளிக்கப்படுகிறது என்றும் பார்க்கவேண்டும்.அப்படி உயர்கல்வியை அளிக்கும் தகுதி ஒரு மொழிக்கு வரவேண்டுமெனில் முதலில் அந்த மொழியில் ஆய்வுக்கட்டுரைகள் வெளிவரவேண்டும்.இது மக்கள் எடுக்க வேண்டிய முயற்சி அல்ல.அரசு நிதி உதவி தந்தும், பல்கலைக்கழகங்களுக்கு வசதிகள் செய்து கொடுத்தும் செய்யவேண்டிய காரியம்.வரப்புயர நீர் உயரும் என்பது போல் ஆய்வுக்கட்டுரைகள் வெளிவரத் துவங்கினால் தான் உயர்கல்வியே எளிதில் சாத்தியமாகும்,உயர்கல்வி சாத்தியமானால் தான் கீழ்மட்ட கல்வியும் எளிதாகும்.சட்டியே காலியாகிவிட்டால் அப்புரம் அகப்பையில் எங்கிருந்து வரும்?

//ஆகத் தமிழில் இது போன்ற கட்டுரை அளிக்க முடியாது என்பதல்ல; அப்படி அளிப்பதற்கு ஆதரவு வேண்டும், தேவை ஏற்பட வேண்டும், என்பதே முகன்மையானது. //

அதைத்தான் நானும் வலியுறுத்துகிறேன்.எழுத முடியாது என்பதல்ல.எழுத முடியும்.அதற்கான வசதிகள் செய்து தரப்படவேண்டும் என்பதைத்தான் வலியுறுத்துகிறேன்.

Unknown said...

//அளவீடுகள் எந்த மொழிக்கும் சொந்தமில்லை. மீட்டர் என்ற அளவை ஆங்கிலத்தில் சொன்னால் என்ன, தமிழில் சொன்னால் என்ன அந்த அளவீட்டை உலகம் ஒப்புக் கொண்டால், அப்புறம் எல்லாம் ஒன்றுதான்//

இதை விரிவாக விளக்க வேண்டும்.

மீட்டர், கிலோமீட்டர் ஆகிய அளவீடுகள் இயற்கை விஞ்ஞானத்துறை சார்ந்தவை. மொழிகளுக்கு இடையே எளிதில் மாற்றம் செய்ய இயலும் தன்மை கொண்டவை. இவற்றிலும் நீங்கள் பார்த்தீர்கள் என்றால் அமெரிக்கன் இன்னும் மைல், பவுண்ட் என்பதை விடாப்பிடியாக வைத்துக்கொண்டிருக்கிறான்.உலகமே லிட்டருக்கு மாறியும் அவன் இன்னும் காலனில் தான் இருக்கிறான்.மைல் எனும் அளவீட்டை கிலோமீட்டர் எனும் அளவீட்டுக்கு சமமான துல்லியத்தில் அவன் கொண்டு வந்திருக்கிறான்.நமது கல், யோசனை, முழம் ஆகியவற்றை இதே துல்லியத்துக்கு கொண்டுவரும் பொருள் வசதி நமக்கு இல்லை என்பதால் அவை இன்று வழக்கொழிந்தன.நாமும் மீட்டர், மைல் ஆகியவற்ரை ஏற்றுக் கொண்டோம்.இன்று அறிவியல் பாடப்புத்தகம் தமிழில் எழுதினாலும் அதில் மைல், கிலோமீட்டர் என்பதை தமிழில் மொழிபெயர்த்து வேண்டுமானால் சொல்லலாம்.ஏன் என்றால் இயற்கைவிஞ்ஞான அளவீடுகள் மொழியை நம்பி இருப்பவை அல்ல.அவற்றை எந்த மொழியிலும் வரையறை செய்ய (கஷ்டப்பட்டால்) இயலும்.

இயற்கை விஞ்ஞானம் தாண்டி சமூகவியல் விஞ்ஞானம் என்று வரும்போது தான் பிரச்சனை வேறு கோணத்தில் திரும்புகிறது. சமூகவியல் அளவீடுகள் மொழியை அடிப்படையாக கொண்டவை.

சந்தையியலில் Market orientation positively affects employee performance என்று ஒரு hypothesis இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.இப்படி ஒரு ஆய்வை சோதனை செய்யவே முதலில் ஆங்கிலத்தில் தான் செய்ய முடியும். market orientation, employee performance என்பதை சந்தைமய்யம், செயல்பாடு என்று மொழிபெயர்த்து தமிழில் ஆராய்வேன் என்றால் வேலையாகாது.ஏன் என்றால்

market orientation எனும் சாதாரண ஆங்கில வார்த்தையை ஒரு வரையறை கொடுத்து அதற்கு தகுந்த அளவீடு(scale, measure) உருவாக்கி அதை கணிதவியல் முறையில் பரிசோதனை செய்தபிறகே market orientation எனும் ஆங்கில வார்த்தை கன்ஸ்ட்ரக்ட்(construct) எனும் தகுதியை பெறுகிறது.அதை அளக்கும் ஐந்து வரி அளவீடும் scale, measure எனும் தகுதியை அடைகிறது

தமிழில் இதை ஆராய வேண்டும் என்றால் இதே நடைமுறை கையாளப்படவேண்டும்.அது நடக்காதவரை தமிழில் செய்யப்படும் இம்மாதிரி ஆய்வுகள் எங்கும் ஏற்கப்படாது.இதற்கான குறுக்குவழியாக ஆங்கில ஸ்கேல்களை தமிழில் மொழிபெயர்த்து பயன்படுத்துவேன் என்றாலும் அதில் reliability, validity என்று சிக்கல்கள் வரும்.(வந்து பல ஆய்வுகள் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன)மேலும் பல ஸ்கேல்கள் பல கலாச்சாரங்களுக்கு இடையே புரிந்துகொள்ளப் படுகிறவையே அல்ல.அந்தந்த மொழியில் புதிதாக measures,constructs,definitions உருவாகாதவரை அந்தந்த மொழியில் ஆய்வுகளும், உயர்கல்வியும் வளராது.

Unknown said...

ரவிசங்கர் நன்றி

நீங்கள் சொல்வதுபோல் மற்ற மொழிகளில் அறிவியல் படைப்புகள் வருவது குரைந்து வருகிறது எனினும் அருகி விடவில்லை.தமிழில் ஏற்கனவே அதற்கான காலம் கடந்துவிட்டது போல் தோன்றுகிறது எனினும் நம்பிக்கை இழக்காமல் முயன்றால் இன்னும் நூறாண்டுகள் கழித்தேனும் ஏதேனும் நடக்கலாம்.

தமிழ்பித்தன்,

கலைக்கதிர், யுனெஸ்கோ குரியர் போன்ற தமிழ் விஞ்ஞான சஞ்சிகைகள் வெளிவந்து பொதுமக்கள் ஆதரவின்றி நின்றுபோயின.ஜர்னல்கள் நிலைமை வேறு என்றாலும் அரசு ஆதரவு இல்லாமல் அவை வெளிவர இயலாது.வருந்தத்தக்க நிலைதான்

Anonymous said...

God save us from silly articles like this.It is a pity that
Poonga thinks this junk as an
important blog post.Having read some of his blog posts I am not surprised by the content or style
in this blog post.
ravi srinivas