Wednesday, January 10, 2007

226.மண்ணில் பொன்னெடுத்த முத்துக்கள்

பட்ட மரம் துளிர்க்குமா.. கட்டாந்தரையில்தான் கதிர் விளையுமா?

Ôமுயற்சி எடுத்தால் எல்லாமே சாத்தியம்தான்Õ என்று அடித்துச் சொல்கிறார்கள் குடகுபட்டி கிராமத்தைச் சேர்ந்த ஏழு பெண்கள்.

அப்படி எதை சாதித்துவிட்டார்கள் இந்தப் பெண்கள்? திரும்பிய பக்கமெல்லாம் மேடு, பள்ளம்.. பசுமை எட்டிப் பார்க்காத வறட்டு காடு.. இப்படி யாரும் சீண்டாமல் கிடந்த தரிசு நிலத்தை சீர்ப்படுத்தி இன்று பொன் விளையும் பூமியாக்கி இருக்கிறார்கள்.. அது போதாதா?

திண்டுக்கல் மணக்காட்டூர் சாலையில் இருக்கிறது இந்த குடகுபட்டி. அதன் அருகில் இருக்கும் கரந்தை மலையின் அடிவாரத்தில் Ôசமுதாய நாற்றங்கால் பண்ணைÕ என்ற போர்டுடன் பளீரிடுகிறது அந்த பொன் விளையும் பூமி! காலை நேரத்தில் அந்தப் பண்ணைக்கு நாம் போய்ச் சேர்ந்தோம். பண்ணையின் உறுப்பினர்களுக்கு காலை நேரத்து வேலைகள் தொடர்பாக ஆலோசனை களைக் கொடுத்துவிட்டு, நம் பக்கம் வந்த குழுவின் தலைவி வெள்ளச்சியம்மா, Ôசாதித்தது எப்படி?Õ என்பதை ஆதி முதல் சொல்ல ஆரம்பித்தார்.

"பக்கத்துல இருக்குற வயக்காடுகளுக்கு கூலி வேலைக்குதான் நாங்க போய்க்கிட்டிருந்தோம். அதுல கிடைக்கிற அஞ்சு பத்தை வெச்சி கஞ்சியோ கூழோ குடிச்சிக்கிட்டிருந்தோம். இப்படியேதான் நம்ம வாழ்க்கை போகுமோனு அப்பப்ப நினைச்சிப்போம். இந்த நிலையில 98&ம் வருஷத்துல திடீர்னு எங்க வாழ்க்கையில ஒரு மாற்றம். Ôதரிசு நில மேம்பாட்டுத் திட்டம்'னு ஒண்ணு இருக்கு. அவங்கவங்க ஊர்ல புறம்போக்குக் காடா கிடக்கற இரண்டரை ஏக்கர் நிலத்தை ஊர்க்காரங் களே கூட்டா சேர்ந்து பராமரிச்சு, அதுல பலன் பார்க்கலாம். இதுக்கு அரசாங்கம் உதவி செய்யும்Õனு திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்துல இருந்து அறிவிப்புக் கொடுத்தாங்க.

ஊர்ல உள்ள பெண்கள் சிலர் ஒண்ணா சேர்ந்து ஒரு குழுவை ஆரம்பிச்சோம். மூணு ஆம்பளை ஆளுகளையும் குழுவுல சேர்த்துகிட்டோம். Ôஇந்த தரிசு நிலத்தில் பல வகையான செடிகளுக்கு நாற்றங்கால் போடலாம்Õனு சொல்லி, அந்த இடத்தையும் ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாயையும் எங்க கையில அதிகாரிங்க கொடுத்தாங்க. முதல் வேலையா நிலத்தை சமப்படுத்தினோம். பிறகு, போர்வெல் போட்டு, ஆயில் இன்ஜின் வெச்சி தண்ணிக்கு ஏற்பாடு செய்தோம். நாத்து வளர்க்கிறதுக்கு அரசாங்கத்துலயே சொல்லிக் கொடுத்தாங்க.

திண்டுக்கல் பக்கத்துல இருக்கற ஒடுக்கம் கிராமத்துல விதைகள் வாங்கி முதல் தடவையா 60,000 நாத்து வளத்தோம். அதை வித்ததின் மூலமா தொண்ணூறே நாள்ல ஒரு லட்சத்து இருபதாயிரம் ரூபாய் வருமானம் வந்துச்சு. Ôகல்லும் கரடுமா கிடந்த இந்தக் காட்டுல இவ்வளவு வருமானமா!Õனு எங்களுக்கே ஆச்சர்யமா போயிடுச்சு. அடுத்து.. புளி, வேம்பு, புங்கன், நாவல், கருவேப்பிலை, பப்பாளி, முந்திரினு தொடர்ந்து நாத்துகளை பயிர் செய்தோம். விற்பனையும் அதிகரிச்சுது. கிடைச்ச பணத்தை திரும்பத் திரும்ப இங்கேயே முதலீடு பண்ணி லாபம் பார்க்கிறோம்" என்று சொல்லிக்கொண்டே போனார்.

இடைமறித்த குழுவின் உறுப்பினர் அழகம்மாள், ÔÔவழக்கமான நாத்துகள் ஒரு பக்கமிருக்க.. ஒட்டு கன்னு உற்பத்தி பண்ணணும்னு முடிவெடுத்தோம். அதுக்காக பெரியகுளம் தோட்டக் கலைக் கல்லூரியில பயிற்சி எடுத்துகிட்டோம். சாதா நாத்து மூணு ரூபாய்க்கு தான் விக்கும். ஆனா, ஒட்டு நாத்தை இருபத்தஞ்சு ரூபாய் வரைக்கும் விக்கலாம். அதைக் கத்துக்கிட்டு சப்போட்டா, மா, நெல்லி எல்லாத்துலயும் ஒட்டு வகைகளை உருவாக்கினோம். இங்க உருவாகிற நாத்துல பாதிக்குமேல அரசாங்க நிறுவனங்களே வாங்கிக்கறதுக்கும் அதிகாரிங்க ஏற்பாடு பண்ணிக் கொடுத்தாங்க. வனத் துறை, வேளாண்மைத் துறை, தனியார் அமைப்புகள்ல இருந்து நாத்துக்கு ஆர்டர் கிடைக்குது. அதனால எங்களால சுலபமா நாத்து விக்க முடியுது. ஒட்டுச்செடிகள் வளக்குறதுக்கு பசுமைக் குடில், மீன் பண்ணை, மண்புழு உர பண்ணை எல்லாம் கூட அமைச்சிருக்கோம். எல்லாத் துலயும் நல்லா வருமானம்தான்ÕÕ என்று சொன்னவர்,

ÔÔஆரம்பத்துல அரசு மானியமா கொடுத்த ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய்தான் எங்க முதலீடு. அதுக்கப்பறம் வேற எங்கயும் ஒரு பைசாகூட கடன் வாங்கலை. நாங்க உழைச்சு சம்பாதிச்ச காசுலதான் மேலும் மேலும் முதலீடு செஞ்சுக்கிட்டிருக்கோம். இப்ப எங்க மொத்த சொத்து மதிப்பு ஐம்பது லட்சத்தைத் தொட்டுருச்சு. பைசா கடன் கிடையாது. Ôதனி மரம் தோப்பாகாது'னு எல்லாருமா சேர்ந்து உழைச்சோம். அரசாங்கமும் கைகொடுத்துச்சி. இன்னிக்கு நாங்கதான் முதலாளி, நாங்களே தொழிலாளிÕÕ என்றார் பெருமையுடன்.

கூடி வாழ ஆரம்பித்து.. லட்சங்களில் நன்மையைப் பார்க்க ஆரம்பித்துள்ளனர். சபாஷ்!

Post a Comment